காதல்

0
148

அவன் அவளுக்கு அந்நியமானான்
அருகில் இருந்தும்
ஒரே உணவை பரிமாறிக்கொண்டும்
முத்தமிட்டும் கட்டியணைத்தும்
இறுக்கமாய் இடையில் நெஞ்சுக்கூட்டில் முகம் புதைத்துக்கொண்டும்
பிரியாமல் எப்போதுமே சேர்ந்திருந்ததாய்
இருகைகளை கோர்த்துக்கொண்டும்
ஒட்டி உறவாடி தொட்டு துகில் நீக்கி
துயில் கலைத்து தீர்க்கமாய் பேசி
நெருக்கமாய் நடந்தபோதிலும்
அவன் அவளுக்கு அந்நியமானான்
காதல் என்பதை இப்போது தேடிக்கொள்ளும்
தம்பதிகளுள் ஒருவராய்
இந்தக்காதல் ஜோடி மாறிவிட்டது
திருமணம் என்பது பலருக்கு ஆசீர்வாதம்
சிலருக்கு வெறும் வாதம்
அந்த சிலருள் ஒருவராய் அவர்களை மாற்றிய
காதல் இப்போது எங்கோயோ ஒழிந்து போய் விட்டது
காதல் என்பது அப்படித்தான்
காதலர்கள் சேர்ந்தபின்
அதுபாட்டில் எங்கேயோ தூரமாய் பிரிந்தே போய்விடுகிறது
அடுத்த காதலர்களை தேடி…
யாரோ ஒருவர் மீளவும் அதே சலிப்பற்ற வாக்குறுதிகளை
மூக்கு சிந்த அழுதபடி யார் காதிலோ இன்னமும்
முனுமுனுத்துக் கொண்டிருப்பார்கள் என அதற்குத் தெரியும்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க