தாய்

0
94

அழகான இருட்டு
அரிதாய் கிடைக்கும் ஈரமுடன் ஒரு அனைப்பு
முதலாய் நான் உணர்ந்த நறுமணம்
எனை பத்திரமாய் பாதுகாத்த கருவறை எனும் பூங்கா வனத்தில் எனை ஈன்றெடுத்த பொக்கிஷமே அம்மா

வைத்திய உதவின்றி குட்டியை ஈன்றெடுக்கும் பசுவின் கண்ணில் தோன்றும் தாய்மையும் அம்மா

அவள் எனை சிற்பமாய் செதுக்கியவள்
அவள் அணிந்த கிழிந்த சேலையும் அவள் அற்ற நேரங்களில் தங்கத்தை விட பொக்கிஷமாய் மாறும்

வலிக்கும் பின் இன்பம் எனும் வாழ்க்கைப் பாடத்தை பிறக்கும் போதெடுத்த ஆசானும் நீயம்மா

அம்மா உன் சில்லென்ற மடியினிலே ஒரு குழந்தையாய் நான் உறங்க நீ எனை தாலாட்ட
உன் அருகாமை கதகதப்பை தேடும் குழந்தையாய் என்றும் உனக்காய் தவங்கள் பல…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க