அழகு

கடற்கரை காதல்

உப்பு கொண்ட உன்னத காற்று
உதடுகளை வருடிச் செல்ல
அவள் காந்த விழிகளில்
குழந்தை தனம் குடியிருக்கிறது.

கரையை முத்தமிடும் அலைகள்
கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன
என்னவளின் பஞ்சு பாதங்களை
நனைக்க இயலாமையால்

மணல் தோண்டும் நண்டுகளும்
விழி உயர்த்தி பார்க்கின்றன
இவள் கடல் கன்னி யென எண்ணி

நம்மை விட
அழகி ஒருத்தி இருக்கிறாள் என
நிலவும் கோபித்து விட்டது போல
ஆறு மணி ஆகியும் இருட்டவில்லை

இடைவெளி இல்லாமல் பேசினாலும்
வெட்டி விட்டு மறையும் மின்னலாய்
ஒரு புன்னகையை அடிக்கடி வீசுகிறாள்

ஐஸ் வண்டி நோக்கி
சிறு பிள்ளை போல் ஓடுகிறாள்
தன் வயதையும் உணராத குழந்தை உள்ளம்

ஊன்றி இருந்த கையை எடுத்துவிட்டு
மணல்களை உதறி விட்டு
கரையோரம் அவள் கை பிடித்து
நனைந்து கொண்டே நடக்கிறேன்

கடல் அலையில் இல்லை
அவள் காதல் மழையில்

This writing is the work of Naflan Ragav, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments 2

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Naflan Ragav

Naflan Ragav31 Aug 2020

அன்புள்ள அன்னைக்கு

        பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது உறவுகள் இன்றி ஏங்கிய…

டயரிக் குறிப்பு1 min read
Naflan Ragav28 May 2020

சம்பள நாள்

நாளைக்கு சம்பள நாள் தலைவலி அதிகமாகும் அளவுக்கு மூளையை போட்டு குழப்பியாச்சு நெற்றி முடிகளை மெதுமெதுவாக வருடிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து இருக்கிறேன். நான்கு பச்சைநிற 1000 ரூபாய் தாள்கள் முதலாளி கையால் நாளைக்கு கிடைக்கும்…

கவிதை - ஜூன் 20201 min read
Naflan Ragav23 May 2020

என் தோழி

ஏனடி இவ்வளவு தாமதம் கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி.. நீ விட்டு சென்ற நொடி முதல்... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல.. உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்... நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
Naflan Ragav20 May 2020

சிங்கப் பெண்

குறை கூறும் வகையில் அவள் கூண்டுக்கிளி இல்லை காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க அவள் பேரழகியுமில்லை ஆனால் அழகு! நினைத்ததை பேசுவதால் திமிருக்காரியாம்? தவறு அதை தட்டி கேட்டால் கோவக்காரியாம்? அளவோடு அன்பு பொழிவதால் ஆணவக்காரியாம்?…

கவிதை - ஜூன் 20201 min read

More in அழகு

See all
2
0
Would love your thoughts, please comment.x
()
x