தாவரவியல்

ஜின்கோ மரம் – Ginkgo Biloba

உணவு உடை இருப்பிடம் மட்டுமல்லாமல் மருந்துகளுக்காவும் தாவரங்களின் தேவை அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் Geriatrics எனப்படும் முதியோர் மருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகள் ’ஜின்கோபைலோபா’ (Ginkgo biloba) என்னும் மரத்திலிருந்து பெறப்படுகின்றது. இம்மரம் ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperms) எனப்படும் பூக்காத தாவரவகையைச்சேர்ந்தது

40 மீட்டர் உயரம் வரையிலும் வளரும், தடித்த சாம்பல் நிறமரப்பட்டைகளுடன் உள்ள இம்மரத்தில்  அடர்பச்சைநிறத்தில்12 செமீ குறுக்களவுள்ள அழகிய கைவிசிறியினை போன்ற இரண்டு பிரிவுகளாக இருக்கும்  இலைகளே பை-லோபா,‘’இரண்டாகப்பிளவுபட்ட’’எனப்பொருள் தரும் சிற்றினப்பெயருக்கு காரணமாகும். ஆண் பெண் மரங்கள் தனித்தனியாக இருக்கும். பழுத்த   சதைப்பற்றுள்ள சூலகம் (ovary) ஆரஞ்சு நிறத்திலிருக்கும்.

350மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து எந்த மாற்றமும் இன்றி பூமியில் இருப்பதால் இவற்றிற்கு ’’வாழும் தொல்லுயிர்ப்படிமம்’’ (Living fossil) எனப்பெயருண்டு.

சீனாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் கடல்மட்டத்திலிருந்து 1,100 மீட்டருக்கு மேல் வளரக்கூடியது, .சீனாவில் இம்மரம் குட்டையாக கத்தரிக்கப்பட்டு அதிகம் வளர்க்கப்பட்டு மருந்துக்கான இடுபொருளாக விற்பனை செய்யப்படுகின்றது.

சீனா ஜப்பான் கொரியா ஆகியநாடுகளில் 1000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஜின்கோ பல்வேறு நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தபட்டு வருகின்றது

இதன் இலைகளிலிருந்தே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இலைகளில் உள்ள ஜின்கோலைடுகள் (ginkgolides) இரத்தஓட்டத்தை சீராக்கி மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். முதியோர்களுக்கு அதிகம் வரும் மறதி மற்றும் நாம்புத்தளர்ச்சியை பெருமளவில் குணமாக்கும்,

நினைவாற்றல் அதிகரிக்கவும், கண்காது இருதயம் நரம்பு மற்றும் உளவியல் தொடர்பான சிகிச்சைகளூக்கும் ஜின்கோவிலிருந்து மருந்துகள் பெறப்படுகின்றது.

ஜின்கோயேசியே   குடும்பத்தின் ஒரேஒரு உயிருள்ள  மரமான இதன் இலைகள் பழுத்த பின் அழகிய பொன்மஞ்சள் நிறத்திலிருப்பதால் தற்போது உலகெங்கிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றது    வறட்சியைத்தாங்கி எல்லாவிதமான மண்ணிலும்    வளரும் இந்த ஜின்கோவின் 4 மரங்கள் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில்கூட சேதமடையாமல் இன்றும் அதே இடத்தில் இருக்கின்றது ஜப்பானியர்கள் இதை ’’ஐ சோ’ (“I-cho”)’ என்றழைத்து புனிதமரமாக வழிபடுகின்றனர்.. மாசடைந்த சூழலையும் தாங்கி வளரும் ஜின்கோ, பலநாடுகளில் சாலையோரங்களில் நிழல்தரும் பொருட்டு வளர்க்கப்படுகின்றது.

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from லோகமாதேவி

லலோகமாதேவி22 Oct 2021

அமலபர்ணி – Rheum Nobile

        உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை   3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும்  2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில்  மட்டும்…

தாவரவியல்3 min read
லலோகமாதேவி9 Oct 2021

வானவில் மரம்

            பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவை தாயகமாகக்கொண்ட  பலநிறங்களிலான மரப்பட்டையைக்கொண்ட  யூகாலிப்டஸ் மரம் ‘’ வானவில் மரம்’’ எனப்படுகின்றது. Eucalyptus deglupta  என்னும் தாவர அறிவியல் பெயருடைய மிர்டேசியே குடும்பத்தை…

தாவரவியல்1 min read
லலோகமாதேவி23 Sep 2021

மரண ஆப்பிள் மரம்

        கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியேவை  சேர்ந்த  manchineel tree  என்றழைக்கபடும் Hippomane mancinella என்னும் தாவர அறிவியல் பெயரைக்கொண்ட  மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை…

தாவரவியல்3 min read
லலோகமாதேவி9 Sep 2021

எருக்கு

      எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின்  கொழுக்கட்டை போன்ற   மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன்…

தாவரவியல்3 min read

More in தாவரவியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x