உளவியல்

[ம.சு.கு]-வின் ; வெற்றியாளர்களின் பாதை !

Picture added by the writer, ம.சு.கு, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

வெற்றியாளர்களின் பாதை !

‘குறிக்கோள், திட்டமிடல், துவக்குதல்,

செயல்படுத்துதல், தொடர்தல்,

இலக்கை அடைதல்,

அடைந்தநிலையை தக்கவைத்தல்’

உலகின் யதார்த்தம்;

  • வெற்றிபெற்றவர்கள் யாவரும் மாபெரும் அறிவாளிகளாகவோ, பேராற்றல் படைத்தவர்களாகவோ இருப்பதில்லை.
  • பல வியாபார வெற்றியாளர்கள் பள்ளிக்கல்வியைக்கூட பூர்த்தி செய்யவில்லை.
  • பல கண்டுபிடிப்பாளர்கள், கல்லூரிகளில் கால்வைத்ததுகூட கிடையாது.

அதேசமயம், படிக்காதவர்கள் எல்லோருமே வெற்றிபெற்று விடுவதில்லை. இதுவுமில்லை அதுவுமில்லை என்கிறபோது, பின் வெற்றிக்கான வழிதான் என்ன ? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும்.

வெற்றிக்கான பதில் இன்னதென்று காலந்தொட்டு பல அறிஞர்கள் கூறிவருகின்றனர். பலரின் கருத்துக்களில் முயற்சி, பயிற்சி, அஞ்சாமை, சாமர்த்தியம் என்று எண்ணற்ற வழிமுறைகளை கேள்விப்பட்டிருக்கின்றோம். இவைகள் யாவற்றையும் பல வெற்றியாளர்களின் கதைகளோடு கேட்கும்போது மிகுந்த சுவாரஸ்யமானதாகவும், உத்வேகமுட்டுவதாகவும் இருக்கிறது. அதே சமயம் நம் குறிக்கோள் செயல்பாடு என்று வருகின்றபோது, இவைகள்  யாவற்றையும் நம்மால் எதிர்கொண்டு செயல்படித்தி வெற்றிக்கான இயலுவதில்லை. அப்படி நமக்கும், வெற்றியாளர்களுக்கும் இடையே என்னதான் வித்தியாசமோ? என்று நாம் பல சமயம் சிந்தித்து குழம்புகின்றோம்.

வெற்றியும் – அதிர்ஷ்டமும்;

நம் ஊரில் மருத்துவர்கள் இருப்பார்கள். ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே பிரசித்திபெற்று அதிகவருவாய் ஈட்டுகிறார்கள். கல்வியிலும், பயிற்சியிலும் சமமானவராயினும், ஒரு சிலரால் அந்த மேல்நிலையை அடைய முடிவதில்லை. இது மருத்துவத்துறையில் மட்டுமல்ல ! எல்லா துறைகளிலும் மேம்பட்ட அறிவுநிலை உடையவராயினும், சிலரால் அந்த வெற்றிநிலையை அடைய முடிவதில்லை (சட்டம், கலைகள்,….). வாழ்வின் யதார்த்தம் இவ்வாறு இருக்க, நம்மில் பலருக்கு வழக்கமாக எழும் கேள்வியும், அதற்கான சமாதானமும் பொதுவான ஒன்றே, ‘பெரிய வெற்றிகான ‘அதிர்ஷ்டம்’ வேண்டும்.

உண்மையில் ‘அதிர்ஷ்டம்’ வெற்றிக்கணையை தந்துவிடுமா ?

மேம்பட்ட கல்வியறிவு வெற்றியை உறுதிசெய்வதில்லை !

நிரூபிக்கப்பட்ட திறமைகளும் வெற்றியை உறுதிசெய்வதில்லை !

அதிர்ஷ்டமும் வெற்றியை உறுதிசெய்வதில்லை !

பின் வெற்றிக்கான வழிதான் என்ன? உண்மையில் சொன்னால், இந்த கேள்விக்கான நேரடி பதில் உலகில் எவரிடமும் இல்லை. எல்லா பதில்களும், விளக்கங்களும் பலரின் அனுபவம் சார்ந்த கருத்துக்களாகவே இருக்கின்றன.

வெற்றியும் – திறமையும்;

வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் எல்லா வெற்றியாளர்களும் திறமைசாலிகளாகவே உள்ளனர். ஆனால் இதன் எதிர்மறை வேறாக உள்ளது.

எல்லா திறமைசாலிகளும் வெற்றியாளராக இல்லை ? ஏன் ?

சில சமயங்களில், திறமை குறைந்தவர்களுக்கு வெற்றி அதிர்ஷ்டத்தில் கிட்டிவிடுகிறது. அது ஒருமுறை ஏற்படும் எதேட்சையான நிகழ்வுதானே தவிர, மீண்டும் மீண்டும் தொடர்வதல்ல. இந்த அசாதாரன நிகழ்வுகளைக்கொண்டு நாம் அதிர்ஷ்டமற்றவர் என்று எண்ணி மனம் துவள்வதில் எந்த பயனுமில்லை. இப்படி வெற்றியின் சூத்திரம் மிகவும் குழப்புவதாக இருக்கின்ற நிலையில், வெற்றியை சுவைக்க எண்ணும் ஒவ்வொருவரும் வெற்றிப் படிநிலைகளை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இந்த படிநிலைகளை பல வெற்றியாளர்களின் வாழ்க்கை பயணத்தில் இருக்கும் பொது நிலைமையை அறிவதில் துவங்குகிறது.

சராசரியைவிட ஒரு படி மேலே !!

முதலாவதாக, எல்லா வெற்றியாளர்களும் பொதுவில் சராசரியர்களைவிட சற்றே கூடுதல் திறன் படைத்தவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு வெற்றியாளரும் அவருடைய துறையில் சராசரியானவர்களை விட குறைந்தது ஒரு சதவிகிதமேனும் அறிவும், திறமையும் கூடுதலானவர்களாகவே உள்ளனர். வெற்றிக்கு முதல்படி, நாம் தேர்வுசெய்யும் துறையில் சராசரியானவர்களைக் காட்டிலும் சற்றேனும் முன்னிருக்க வேண்டும். அதாவது கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் அவசியமாகிறது.

கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் !!

நான் மருத்துவத்துறையில் வெற்றிபெற குறைந்தபட்சம் முதலில் ஒரு மருத்துவராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவ அறிவைக்கொண்டு, நான் அலோபதி மருத்துவத்துறையில் கோலோச்ச விரும்புவது முற்றிலும் அர்த்தமற்றது. அடிப்படை கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் வெற்றிக்கு முதல்படியாகிறது. குறைந்தபட்ச உடல் தகுதியில்லாமல் விளையாட்டில் சாதிக்க இயலாது.

இந்த கதவுநிலை தகுதியை கடந்தவர்கள் மட்டுமே வெற்றுயை தோக்கிய ஓட்டப்போட்டியின் தகுதிச்சுற்றிற்கு நுழைய முடிகிறது. இந்தநிலை வெறும் நழைவுச்சீட்டு மட்டுமே. வெற்றியின் உறுதிச்சான்றிதழ் அல்ல. இந்த தகுதிநிலையோடு நம்முன்னே நூறுபேர் நிற்பார்கள். இங்குதான் வெற்றியாளர்களுக்கும் ஏனையவர்களுக்குமான வேறுபாடு துவங்குகிறது.

விலகுபவர்கள் மத்தியில் தொடர்வது !

‘வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செய்வதைக் காட்டிலும், சாதாரண செயல்களையே வேறுபட்ட விதத்தில் செய்து வெற்றிகொள்கிறார்கள்.’

  • மற்றவர்கள் சோர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்தில், இவர்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள் !!
  • நாம் போகும் பாதை சரியா ? தவறா ? என்று சிலர் குழம்பியிருக்கும் தருணத்தில், இவர்கள் குழப்பமின்றி உழைக்கிறார்கள் !!
  • சிறு, சிறு தோல்வி கண்டு அஞ்சி விலகிபவர்கள் மத்தியில் இவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள் !!

எல்லா வெற்றியாளர்களின் இரண்டாவது பொதுநிலை இதுதான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தளர்ந்து ஒதுங்குகின்றபோது, இவர்கள் தங்களது முயற்சியையும், தன்னம்பிக்கையையும் தளரவிடாமல் தொடர்ந்து வெற்றியிலக்கை அடைகிறார்கள்.

தொடர் பயிற்சி வெற்றியை உறுதியாக்குமா ?

இப்படி இடைவிடாது தொடர்பவர்கள் எல்லோரும் வெற்றியை சுவைக்கின்றனரா ? என்று கேட்டால், கட்டாயம் வெற்றிபெறுகிறார்கள். இப்படி தொடர்ந்து பயிற்சித்துத்தான் இலட்சத்தில் ஒருத்தர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுகிறார். தொடர்ந்த பயிற்சி, மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றியை கொடுத்து ஒலிம்பிக்வரை அனுப்புகிறது. இப்படி கடுமையான பயிற்சியுடன் எல்லா நாட்டிலிருந்தும் எண்ணற்ற வீரர்கள் வருகின்றனர். எல்லோரிடைய கணவும் தங்க பதக்கம் வென்று தங்கள் நாட்டு தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய வேண்டுமென்பதே. எல்லாருமே கடுமையான பயிற்சி பெற்றவர்களாயிருந்தாலும் இறுதியில் ஒருவர் தான் வெற்றி பெறுகிறார். ஏன் அந்த இறுதி வெற்றிக்கணி மற்றவர்களுக்கு கிட்டுவதில்லை? அந்த இறுதி வெற்றிபெற்ற ஒருவர் அப்படி என்ன தனிபட்ட திறன் பெற்றள்ளார்?

தினமும் 1% ஆற்றலை மேம்படுத்துதல் !

வரலாற்றைப் பாருங்கள். நீச்சல் போட்டியில் தொடர்ந்து ஒருவரே தங்கங்களை வென்றுகுவிக்கிறார். தொடர்ந்து இரண்டு-மூன்று ஒலிம்பிக்குகளிலும் அவர் வெற்றிகொள்கிறார். இதை பல தடகள போட்டிகளில் தொடர்ந்து காண முடிகிறது. அந்த தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றியின் இரகசியம்தான் என்னவோ ? இந்த வெற்றியாளரிடம் தான் வெற்றியின் கடைசி சூத்திரம் உள்ளது. ஆம்!  தொடர்த்து பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு சதவிகிதமேனும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். எவனொருவன் அன்றாடப் பயிற்ச்சியில் தொடர்ந்து சிறு சிறு முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறானோ, அவனே போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடிகிறது.

ஆம் ! எல்லோரும் பிறக்கும் போதே பெறும் ஆற்றலுடன் பிறப்பதில்லை. அன்றாடம் நம் ஆற்றல்களை தொடர் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருமுறை பயிற்சி செய்யும்போதும், நமது இலக்கு நேற்றைய பயிற்சியைவிட 1% மேம்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சிறிய 1% மேம்பாடு, நாளடைவில் நமது திறனை பண்மடங்காக உயர்த்தியிருக்கும். நாம் ஒரு வருடத்தில் நமது திறனை குறைந்தபட்சம் 37 மடங்கு அதிகரித்திருக்கும்.

வெற்றிக்கான பாதை;

வெற்றிக்கான வழிமுறைகள் இன்னதென்று இலக்கணத்தை நம்முன்னோர் வகுத்து வைக்காவிடினும், பலரின் அன்பவங்கள் நம்மை அந்த பாதையை நோக்கி வழிநடத்தும். பல வெற்றியாளர்களிடம் பொதுவாக கண்ட வெற்றிபாதையின் படிகளானவை ;

  1. சராசரியைவிட ஒரு படி மேலே இருத்தல் !
  2. கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் !
  3. விலகுபவர்கள் மத்தியில் தொடர்வது !
  4. தினமும் 1% ஆற்றல் மேம்பாடு !

இவை நான்கும் வேதமொழிகள் அல்ல. அனுபவரீதியிலான வெற்றியாளர்களின் பொதுவுடைமைகள்.

இதை நாம் நமது வாழ்வில் எவ்வாறு செயல்படுத்தி வெற்றிகொள்கிறோம் என்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது.

–  ம.சு.கு

This writing is the work of ம.சு.கு, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from ம.சு.கு

மம.சு.கு15 Nov 2021

[ம.சு.கு]வின் : 80%–20% விதி – நம் வாழ்க்கை (Pareto Principle in Life)

எழுதப்பட்ட விதிமுறைகள்; மனிதயினம் ஒரு கூட்டமாய் வாழத் துவங்கிய நாள்முதல், நாம் என்றுமே தொடர்த்து ஏதேனும் ஒரு சட்டதிட்டம், நெறிமுறை, விதிகளின் படியே நமது வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். இந்த விதிமுறைகளிள் எண்ணற்றவை காலத்திற்கு ஏற்ப…

Articles & Research Essays5 min read
மம.சு.கு12 Nov 2021

[ம.சு.கு]வின் : ‘இல்லை’, ‘வேண்டாம்’ – என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் [Learn to Say “NO”]

நம் வாழ்க்கையில் எண்ணற்ற விஷயங்களை நாமே சிந்தித்து, உரிய வழிமுறையை ஆராய்ந்து செயல்படுத்துகிறோம். இப்படி சுயமாய் செய்யும் செயல்களைவிட அதிகமாக பிறர் கூறுவதற்காகவம், நிர்பந்தத்தின்பேரிலும் எண்ணற்ற செயல்களை செய்து சிலவற்றில் வெற்றியும், பலவற்றில் தோல்வியும் தழுவியிருப்போம்.…

Articles & Research Essays6 min read
நம் வாழ்க்கையில் எண்ணற்ற விஷயங்களை நாமே சிந்தித்து, உரிய வழிமுறையை ஆராய்ந்து செயல்படுத்துகிறோம். இப்படி சுயமாய் செய்யும் செயல்களைவிட…
மம.சு.கு10 Nov 2021

[ம.சு.கு]வின் : நமது நம்பிக்கை – எல்லாமே உண்மையா ?

1. கல்வி வெற்றியை தரும்; என் சிறுவயதில், என் பெற்றோர் தொடர்ந்து என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த ஒரு வரி ‘நீ நன்றாக படிக்க வேண்டும். படித்தால் தான் உனது வாழ்க்கை சிறப்பாக அமையும்’. இதை வெவ்வேறு வார்த்தைகளில்…

ஆய்வுகள்6 min read
மம.சு.கு27 Oct 2021

[ம.சு.கு]வின் : நினைவாற்றலை அதிகரிக்க முடியுமா ?

மனித இனத்தின் மிக நுட்பமான ஆற்றல்களில் நினைவாற்றல் வளம் முக்கியமான ஒன்றாகும். நினைவாற்றல் என்ற ஒன்றில்லாவிடில், மனித இனத்தின் ஆறாவது அறிவிற்கு வேலையே இல்லாமல் போயிருக்கும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நினைவாற்றல் வளம் மனிதனுக்கு மனிதன்…

Articles & Research Essays3 min read

More in உளவியல்

See all
நம் வாழ்க்கையில் எண்ணற்ற விஷயங்களை நாமே சிந்தித்து, உரிய வழிமுறையை ஆராய்ந்து செயல்படுத்துகிறோம். இப்படி சுயமாய் செய்யும் செயல்களைவிட…

[ம.சு.கு]வின் : ‘இல்லை’, ‘வேண்டாம்’ – என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் [Learn to Say “NO”]

ம.சு.கு