ஒரு சோடி கண்கள்

"என்னைக்கும் போல வழமையான நாள்னு சொல்ல முடியாது…",
பைத்தியகார பிரெண்ட் சொல்ல ஆரம்பிச்சான்.
"அன்னைக்கு சரியா என்ன நாள்னு தெரியல. சனிக்கிழமைணு நம்புறேன். அன்னைக்கு ஆஃப்டெர்னூன்( afternoon). பகலா? இல்லனா அந்தியா? அதுவும் சரியா தெரியல. ஆனா ஒன்னு, நல்லா வெயில் அடிச்சது. ஆனா அவ்வளவு சூடா எல்லாம் இருக்கல. செகண்ட் இயரால எந்த நாளும் டியூஷன் கிளாஸ் (Tution class) போய்கிட்டுதான் இருந்தேன். அன்னைக்கும் வழம மாதிரிதான் அகடமிக்கு கிளாஸ் போனேன். என்ன கிளாஸ்னும் ஜாபகம் இல்ல. மொத என்ன நாள்னே எனக்கு தெரியல, இதுல எங்க இருந்து என்ன கிளாஸ்னு எல்லாம் ஜாபகம் இருக்க போகுது. வழமையாவே சதுர்ஷன் ஓட சேர்ந்து தான் இங்க இருந்து கிளாஸ் போறது வாரது எல்லாம். ஒவ்வொரு நேரம் கிரனும் வருவான். வழமையா பிரவுன் ரோட் ஓடதான் வாரது. ஏன்னா… அப்புடியே வந்தா ஒரே பஸ்ல வந்துடலாம். அன்னைக்கு என்னானே தெரியல, கிளாஸ் முடிய இங்குட்டு பஸ் ஏறாம, டவுனுக்கு போயிட்டு அங்க இருந்து அப்பிடியே மறுபடி பஸ் புடிச்சு வீட்டுக்கு வந்துருவோம்கிற பிளான் போல, நா டவுனுக்கு பஸ் ஏறி போயிட்டேன். ஏன் ஒரேதா வீட்டுக்கு வராம டவுன் போனேன்னும் தெரியல. ராய் அப்படியே போய் வீட்டுக்கு போவோம்னு சொன்னதால போனேனா… இல்ல வேற எதுனாலும் போனேனா…அதுவும் தெரியல. கூட சதுவும், கிரனும் வந்தாய்ங்களானும் ஜாபகம் இல்ல. ஒண்ணுமே தெரியல. ஆன டவுனுக்கு போயிட்டும், ஒழுங்கா பஸ் ஏறி வீடு வராம பஸ் ஸ்டாண்டிலேயே ( Bus stand ) நின்றுகிட்டு இருந்தேன். அது ஏன் எண்டும் சத்தியமா எனக்கு தெரியல. யாராச்சும் வார வர நின்றேநா… இல்ல கிரவுட் ( crowd) இல்லாத பஸ் ஏற நின்றேநா. தனியாவ நின்றேன் இல்ல கம்பெனி கொடுக்க யாரும் கூட நின்றாங்களா, ஒரு கூந்தலும் ஜாபகம் இல்ல. ஆனா ஒண்ணு மட்டும் தெரியும், பஸ் ஸ்டாண்ட சுத்தி இருக்க மொத்த கிரவுட்டயும் நோட்டம் விட்டு பாத்துக்கிட்டே ,அதுல இருக்கவங்களோட என்ன கம்ப்யார் ( compare ) பண்ணி மனசுக்குள்ள லோ கி… ( Low-key ) கண்டிப்பா என்னையே நா தாழ்த்தி நெனச்சிருப்பேன். இந்த டயம் ( Time ) தான் மின்னல் அடிச்சது எனக்கு. உண்மையில மின்னலே அடிக்கல எனக்கு, ஆன மின்னல் அடிச்சது. அது தான், அது, அந்த தண்டர் ஸ்ட்ரைக் ( Thunder strike). கோட் பாதர்ல ( God father) துவங்கி வாரணம் ஆயிரம் தொட்டு எங்க அம்மா எங்க அப்பாவா பாத்ததா எனக்கு சொன்ன அந்த கதை வழியே நான் கேட்ட , படங்கள்ல பார்த்த , புக்கள்ல( Book ) வாசிச்ச அதே மின்னல். அதுதான் உனக்கு நடந்துசுனு, உனக்கு எப்பிடி உறுதியா தெரியும்னு கேட்டியனா, ஃபர்ஸ்ட் எனக்கு அடிச்சது அந்த மின்னல் தான், செகண்ட் இதுக்கு முன்னால அப்புடி ஒண்ணு எனக்கு நடந்ததே இல்ல. இல்ல இல்ல. இதுக்கு முன்னுக்கு வந்துச்சு ஆன அது இது இல்ல. ஆதி காலத்துல, மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருந்திருப்பேன். அம்மா எனக்கு போட்டுவிட்ட செக்-செக் டீ ஷார்ட் போட்டுகிட்டு, தம்பியையும் கூட கூட்டிகிட்டு சர்ச் (Church ) போனேன். வழமையா சர்ச்சுக்கு போற மாதிரி தான் உடுத்திட்டு போயிருந்தோம். அப்பா ஏற்கனவே சர்ச்ல இருந்தாரு, நாங்க வாரத பாத்ததும் அவரு முகம் சுருங்கிருச்சு. சர்ச்ல இருக்குறவங்க எல்லாம் கலர் கலரா உடுத்தி வாரங்க. ஏன்னா… அன்னைக்கு பெரிய வியாழன். ஃபேமஸ் ஆன அந்த இறுதி இரா போஜனம் 2000 வருசம் முன்னால, இன்னைக்கு தான் நடந்தது. நானும் தம்பியும் மட்டும் ரொம்ப சாதாரணமா இருந்தோம் அன்னைக்கு. சரி…. நா உண்மைய சொல்றேன். எங்க அம்மா வேற்று மதம். அதால அவுங்களுக்கு இந்த சம்பிரதாயங்கள் பற்றி எல்லாம் தெரியாது. அவுங்க அப்பா திடீர்னு கால்(call) பண்ணி,எங்கள சர்ச்க்கு அனுப்ப சொல்லவும், அன்னைக்கு ஞாயிறும் கிடையாதா, அதால எங்கள சாதாரணமா சர்ச்சுக்கு ஏதும் எடுபுடி வேலைக்கு வர சொல்லி இருப்பாருனு, ரொம்ப சுமாரான உடுப்பு உடுத்தி அனுப்பிவிட்டாங்க. எனக்கும் அன்னைக்கு என்னா விஷேஷம்னு சர்ச் போற வர தெரியாது. சர்ச்சுக்கு போன பிறகு தான் தெரிஞ்சது இப்பிடி ஒரு நாள் இருக்கு, இன்னைக்கு வழமைய விட ரொம்ப நீட்டா ( Neat) உடுத்திட்டு வரணும்கிறதே. நானும் தம்பியும் மட்டும் ரொம்ப சுமாரா இருந்தோம். அப்புறம், பிறகு என்ன பண்ணுறது, வீட்டுக்கு போயி டிரஸ் மாத்திட்டு வர எல்லாம் டயம் இல்ல. அப்புறம் அப்பாவோட சேர்ந்து முன்னால இருக்கிற பெரிய பெஞ்ச்ல போயி உட்கார்ந்துகிட்டோம். வீட்டுல வந்து இத பத்தி அப்பா அம்மாகிட்ட ஏன் இப்பிடி உடுத்தி அனுப்புனீங்கனு மட்டும் தான் கேட்டாரு. வேற ஒன்னும் அத பற்றி கதைக்கல. ஏனா அதுக்கு மேல தான் அவருக்கு அங்க ஒன்னும் கேக்க முடியாதே.
நாங்க போட்டு இருந்த உடுப்ப பற்றி அவர் யோசிச்சிருப்பாரா இருக்கும் ஆனா எங்களுக்கு அதபற்றி துளியளவு கவலையே இல்ல. விளையாடிட்டு இருந்த எங்கள புடிச்சு சர்ச்சுக்கு இழுத்துட்டு வந்தாங்களேகிற கவலை மட்டும் தான் அப்போ இருந்துச்சு. பூஜையோட ஒரு கட்டத்துல எல்லாரும் எழுந்து நிற்க, பெயருக்கு நானும் தம்பியுமே எழுந்து நின்றோம். எழுந்தும் சும்மா நிற்கல கிறுக்குதனம் பண்ணிக்கிட்டு தான் இருந்தோம். பெஞ்ச்ல சாஞ்சிக்கிட்டும், விளையாட்டு போட்டுகிட்டும் தான் இருந்தோம். எல்லாரும் பூஜையில கவனமா இருந்ததால குள்ளமா இருந்த எங்கள கவனிக்கலை. இப்பிடியே செஞ்சுக்கிட்டு இருந்தவாக்குல , இடது பக்கம், அந்த பக்கமா தான் கோயர் குரூப்பூம் ( Choirs group) பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க அத பாக்க திரும்பின நேரம், என் முன்னால ஏஞ்சல்.
( குறித்த இந்த பெண்ணை , எனது மற்றுமொரு நண்பன் வெகுகாலத்திற்கு பின் ஒருதலை காதல் செய்தான். அதன் போது குறித்த அந்த பெண்ணை எங்கள் உரையாடல்களில் ' ஏஞ்சல் ' என்ற துணை பெயர் கொண்டு, உண்மை அடையாளம் வெளிபடாதவாறு அழைப்போம். )
இடைவெளி விட்டு பக்கமா இருந்த அந்த பெஞ்ச் வரிசையில இருந்து என்ன பார்த்தாள். நானும் பார்த்தேன். எனக்கு சரியா ஜாபகம் இல்ல. ஆன, வயலட் இல்லனா மெரூன் கலர். இதுக்குள்ளதான் அவள் உடுத்தியிருந்த பிராக்ட (Frock) கலரூம் இருக்கும். நா பார்த்தேன். அவளை பார்த்துகிட்டே தான் இருந்தேன், ரொம்ப நேரத்திற்கு, எல்லோரும் திரும்பி உட்காருற வர. அவ்வளவு அழகா இருந்தாள். அவள் அப்படியே கண் முன் வந்து நிற்க, பிரீஸ் ( Freez) ஆகிட்டேன். நீர் வீழ்ச்சியல இருந்து பறந்து வார தண்ணி உடல நனைக்குற மாதிரி. அந்த டைம் எனக்கு வந்த அந்த பீல்ல( Feel ) தான் இதுவர காலமும் லவ் ஓட பீலிங்கா நெனச்சி வந்தேன். ஆன அன்னைக்கு வந்த உணர்வு இது இல்ல. இத சரி எனக்கு வாய்வழியே சொல்ல முடியுது ஆனா அந்த பீல்லா, பீல் பண்ண மட்டும் தான் முடிஞ்ஞது. நீ அதா உணர்ந்தான் புரியும். அப்போ அப்பிடியே பஸ் ஸ்டான்ட்ல நிக்கிறேன், சொன்ன மாதிரி அப்புடி எனக்கு ஆகுது, என்னடா இதுனு சொல்லிட்டு டக்குனு எனக்கு திரும்புறேன், அப்பதான், நா உண்மையான தேவதையையே பாத்தேன். சும்மா எல்லாம் அந்த பொண்ண தேவதையினு சொல்லல, உண்மையிலும் தேவதை மாதிரி தான் இருந்தாள். மாதிரி என்ன அவள் தேவதை தான். ஸ்டாண்டுக்கு சைட்டா இருக்கிற ரோட்ல இருந்து நடந்து வந்து கொண்டு இருந்தாள். கையில ஒரு பேக் ( Bag) இருந்துச்சு. டெக்ஸ்டைல் பேக் மாதிரிதான் இருந்துச்சு சரியா கவனிக்கலை ஆன அது வைட் பேக், அது ஞாபகம் இருக்கு. பிறகு…. வைட் டிரஸ். வைட் டிரஸ் போட்டிருந்தாள். அது எப்படியான வைட் டிரஸ்னு கூட ஜாபகம் இல்ல ஆன அந்த டிரஸ்ல பார்க்க ரொம்ப சிம்பிளா இருந்தாள். ரொம்ப லைட் ஹா தெரிந்தாள். அப்படியே பறக்கிற மாதிரி. ஒரு பறவை மாதிரி. ஒரு வெள்ளை பறவை மாதிரி. ஒரு…ஒரு…கொ;இல்ல இல்ல கொக்கு மாதிரி இல்ல. அன்னம் மாதிரி. அன்னம் மாதிரி இருந்தாள். அவள் கொக்கு மாதிரி அவ்ளோ உயரமா எல்லாம் இருக்கல சாதாரண உயரம் தான். முகம். ரொம்ப ரொம்ப இயல்பான முகபாவனை. அந்த…அந்த முகவழகுல, கடவுள காணலாம். ஏன்னா… நா கண்டேன். ஆனாலும் எனக்கு அந்த முகம் முழுவதும் ஞாபகம் இல்ல. ஞாபகம் இல்லனா, ஞாபகம் இருக்கு ஆன ஒழுங்கா ஞாபகம் இல்ல. எப்படி சொல்றது… ஹ…. ஹா ! நிலா. நிலாவ எடுத்துகிட்ட அது அழகா இருக்கு. இப்போ நம்ம இன்னைக்கு பாத்தாலும் நிலா அழகாதான் இருக்கும் அடுத்த வருஷம் பாத்தாலும் அழகாதான் இருக்கும். ஆன இன்னைக்கு முழுசா தெரிய நிலா நாளைக்கு முழுசா தெரியுமானா ? இல்ல. தெரியாது. அது மாதிரி தான். எனக்கு முகம் எப்புடி இருந்துச்சுனு ஞாபகம் இருக்கு ஆன எது முகம்னு ஞாபகம் இல்ல. எப்புடீனா, நிலாவ தேய் பிறைல பார்த்தது மாதிரி. ஏன்னா, ஏன் அந்த முகம் எனக்கு எதுன்னு ஞாபகம் இல்லனா, அவளோட கண்கள். அந்த கண்கள். அந்த ரெண்டு கண்கள். நானும் கெண்டை விழி, வேல் விழி என்றெல்லா இலக்கியத்துல படிச்சி இருக்கேன், ஆனா, அது இந்தளவு இருக்கும்னு நா கனவுல கூட நினைச்சது இல்ல. அந்த கெண்டை விழி, வேல் விழி என்டு கதை விட்டவங்களெல்லாரையும் கொண்டு வந்து இந்த கண்ண காட்டி முடிஞ்சா இத எழுதுங்கடானு சொன்னா அவங்களுக்கும் அத மொத மாதிரி எழுத தெரியாதுனுதான் நினைக்கிறேன். ஏன்னா அந்த கண்ணு ரெண்டும் அப்புடி இருந்துச்சு. எப்புடீனா…. அப்புடி இருந்துச்சு. அத, அத சொல்ல முடியாது பாக்க மட்டும் தான் முடியும். இல்ல.இல்ல. அத பார்த்தாலும் புரியாது. ஏன்னா அந்த ரெண்டு கண்ணும் அப்புடி இருந்துச்சு. பச்சை. பச்சை கலர் கண். லைட் பச்சை. அப்படியே இந்த கண்ணோட மெதுவா நடந்து வாரத பார்த்தா காலமே ஒரு கணம் நிண்டு வேடிக்கை பார்த்திட்டு போகும், அப்படியிருந்துச்சு. பிரம்மா உள்ள அப்புடி ஒரு திறமையானு ஆச்சரியப்பட்டு போக வச்சிருச்சு. இதெல்லாம் என்ன ? ஜுஜுபி. அடுத்து ஒண்ணு நடந்துச்சு. ஹார்ட் பம்ப் பண்ணுற ரத்தம் காது வழியே வந்துரும்.
ஐ காண்டேக்ட்( eye contact ) . நா எல்லாம் செதெரிட்டேன். அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க நிலமதான். அத வார்த்தையால கூட யாராலும் ஏன் என்னால கூட வர்ணிக்க முடியாது. ஏன்னா அந்த மாதிரி ரெண்டு கண்ண பார்த்தவன் நா, எனக்கே அந்த நிலைமைய சொல்ல தெரியல. அந்த கண்கள பாக்காதவங்கலாலா எப்படினு சொல்ல முடியும். ரெண்டு செகண்ட் சரி பார்த்திருப்போம். அந்த ரெண்டு செகண்டும் எனக்கு ஏதோ பல யுகம் மாதிரி இருந்துச்சு. எப்படா வேற பக்கம் பாப்ப… என்கிற மாதிரி ஆகிறுச்சு. அப்படியே உள்ளுக்குள்ள எல்லாம் ஏதோ பண்ணிருச்சு. இதெல்லாம் ஒன்னும் இல்ல இனிமேதான் ஆரம்பம் என்ற மாதிரி ஒரு சம்பவம். அந்த ஐ காண்டேக்ட் ஓட அப்படியே நடந்து வார நேரம், அவள் நடந்து வார அந்த ரோட் முழுக்க சுற்றியிருந்த பில்டிங் ( Building ) ஆல சாதாரணமா நிழலா இருக்க அந்த ரோட்டுட ஒரு ஏரியால (Area) மட்டும் சும்மா மஞ்ச மஞ்சேனு வெயில் மங்களகரமா வீசிகிட்டு இருந்துச்சு.
அப்படியே அவள் அந்த வெயில் ஏரியாவ க்ராஸ் (Cross) பண்ணுற நேரம், அந்த ரெண்டு கண்ணும் அப்படியே மின்னி போச்சி. செதரி சேர்ந்த ந, மறுபடியும் செதரிட்டேன். ஒரு…ஒரு டைமன் மாதிரி.இல்ல இல்ல மின்மினி மாதிரி. இல்ல அதுக்கும் மேல. இதையும் வார்த்தையில சொல்ல முடியாதுனு நினைக்கிறேன் . இனி ஒவ்வொரு முறை மழை டயமும் வீட்டுல அங்க இங்கன்னு மின்மினி பறந்து திரியுரத கண்டா இனி இந்த ஞாபகம் தான் வருமா இருக்கும். சாதாரணமான கண்களா இருந்த சரி வேள் பாரில வெங்கடேசன் நாகர்களுக்கு சொன்ன மாதிரி சரி சொல்லிடலாம். ஆன இது அப்புடி முடியாது. கார்ஜியஸ் ( gorgeos – 2026) படத்துல, இந்த பக்கம் இருக்க ஹீரோ தூர இருந்தே ஹீரோயின பார்த்துட்டு அந்த பக்கம் கிட்ட போய் பாக்குற நேரம் ஹீரோயிங்கிட்ட சொல்லுவாரு தெரியுமா ,
" There's more green in your eyes than I expected" என்டு. அந்த மாதிரி தான் எனக்கு இருந்துச்சு. அந்த மின்னுற ஜொலிக்கிற பளபளக்குற எப்பிடிவெனாலும் சொல்லலாம்.அந்த கண்கள பார்த்தவுடனே எனக்கு ஒண்ணு மட்டும் தான் மைண்ட் ( mind) உள்ள ஓடுனுச்சு, இந்த அழக பாக்குறதுக்கு எனக்கு தகுதி இல்ல என்றது மட்டும் தான். அப்படியே டக்குனு திரும்பி தலைய கீழ போட்டுட்டேன். முன்னால நின்னுகிட்டு இருந்த பஸ் டயர் ஹ பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு , அந்த பொண்ணு. இல்ல இல்ல தேவதை. அப்படியே மெல்ல நடந்து நா இருக்கிற பக்கமா பஸ் ஸ்டான்ட் ஓட என்ன அப்புடியே பாஸ் ( pass) பண்ணி தான் போனாள். நிலத்த பார்த்துகிட்டு இருந்தாலும் அவள் என்ன தாண்டி போனது எனக்கு நல்லா விளங்குனது. அவள் கால்களை பார்க்க முடிஞ்சி. தண்ணியில நடக்கிற மாதிரி இருந்துச்சு. அவள் அப்புடியே என்ன தாண்டி போற நேரம் திரும்பி அவள ஒரு முறை பாருன்னு மனம் சொல்லிச்சு மறுபக்கம் நீ அவள பாக்க கூட லாய்க்கு இல்லாதவண்டானு சொல்லுச்சு. திரும்பி பார்க்கிறதா இல்லையான்னு ஒன்னும் புரியாம அப்படியே அந்த பஸ் டயர்ல தலைய வச்ச மாதிரி இருந்துச்சு. ஆனா கடைசி வரையும் அவள் போற வர அவளை திரும்பி நா பாக்கல. என்ன கடந்து அவள் போயும் கொஞ்ச நேரம் வர அந்த டயரையே தான் பார்த்துகிட்டு இருந்தேன். பிறகு அந்த பக்கமா திரும்பி பார்த்தேன் ஆன நா தேவதைய காணல. எப்புடி தெரிவாள். அவள் தான் போயிட்டாளே. ஆன பிறகு தான் புரிஞ்சிச்சு ஏன் என்னால அவள பாக்க முடியலனு , ஏன்னா அவள் ஒரு தேவதை. அதால தான் அவள் முகமும் ஞாபகம் இல்ல போல. நினைவில் நிறுத்த முடியாத நிலவு. ஹா. ஆன இப்போ வர எனக்குள்ள ஒரே ஒரு கேள்வி தான். அவள் என்ன பாஸ் பண்ணி போகும் போது என்ன அவள் திரும்பி பார்த்து இருப்பாளா ? இல்லையா ? எனக்கு அடிச்ச அதே மின்னல் அவளுக்கும் அடிச்சி இருக்குமா ? இல்லையா ? என் கண்ணுல இருந்த காதல்ல அவள் பார்த்திருப்பாளா ? மாட்டாளா ? உள்ளுணர்வு ஆமா என்கிறது, மறு பக்கம் இல்ல என்கிறது.
கடைசி வரைக்குமே இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமலே நான் இருக்க போறேன் எனா ? "
This writing is the work of Idhayam murali, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing





