மருத்துவ குறிப்பு

உலர் திராட்சையின் மருத்துவ குணம்!

 
பழங்கள் எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை தரக்கூடியதோ, அதே போல உலர் பழங்களிலும் சுவையும், சத்துக்களும் அதிகம் உள்ளன. உதாரணமாக நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது பல்வேறு மருத்து குணங்களை கொண்டது. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சை பழத்தில், திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இவை எம்மாதிரியான நலன்களை உடலுக்கு தருகின்றன என்று இப்போது பார்க்கலாம்!
ஒரு நாளைக்கு பத்து உலர் திராட்சை என்று மூன்று மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தோமானால், உடலில் ஆரோக்கியம் ஏற்படுவதை கண்கூடாக காண முடியும்.
உலர் திராட்சையானது தாமிர சத்துக்களை கொண்டுள்ளதால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் ரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகும்.
குழந்தைகளுக்கு தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன் பாலுடன் உலர்திராட்சையை சேர்த்து காய்ச்சி கொடுத்தால் தேகம் வலுப்பெறும்.
கர்ப்பிணி பெண்கள் பாலுடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தார்களேயானால் பிறக்கும் குழந்தை மேலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
உலர் திராட்சையில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்தோமானால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும்.
 
உடல் வலிக்கும் உலர் திராட்சை மருந்தாக பயன்படுகிறது. சுக்கு, பெருஞ்சீரகம் மற்றும் உலர் திராட்சையை தண்ணீர் சேர்த்து காய்ச்சி குடித்தால் உடல் வலி தீரும்.
பாலுடன் மிளகு, உலர் திராட்சையை சேர்த்து காய்ச்சி பருகினால் தொண்டை கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் தீரும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகை பிடிக்கத்தோன்றும் போது மாற்றாக உலர் திராட்சை பழங்களை சாப்பிட்டால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன
 

This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from GOBIKRISHNA D

GOBIKRISHNA D22 Oct 2026

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து துன்பங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானால், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அல்லது…

ஆய்வுகள்9 min read
GOBIKRISHNA D23 Feb 2026

மட்டக்களப்பு கடலில் மறைந்துள்ள வரலாற்றின் ஒரு அங்கம்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் HMS Hermes 1942 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தனது மிகருக்கமான கட்டத்திலிருந்தது. இத்தேர்க்கையின் முக்கியமான ஒரு பகுதி — இறுதிப் போரிடுதல் நிலையங்களை பாதுகாத்தல். இன்றைய இலங்கை…

ஆய்வுகள்3 min read
GOBIKRISHNA D22 Feb 2026

⚠️ மொபைல் – மறைமுக ஆபத்து

“என் குழந்தை ரொம்ப ஸ்மார்ட்… மொபைல் அவளே ஓபன் பண்ணி யூஸ் பண்ணிடுவாள்!”இது பெருமையாகச் சொல்லப்படும் ஒரு வசனம்.ஆனால் ஒரு உண்மை —மொபைலை பயன்படுத்தத் தெரிந்தது புத்திசாலித்தனம் அல்ல.அதை கட்டுப்படுத்தத் தெரிந்ததே உண்மையான அறிவு. 🔹…

அறிவியல்2 min read
GOBIKRISHNA D22 Feb 2026

அபுதாபியில் இந்து கோவில் கட்டிய முஸ்லிம் அரசர்

மத்திய கிழக்கின் பாலைவன நாட்டான ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஒரு வரலாற்றுச் சம்பவம் அமைதியாக நிகழ்ந்தது. அபுதாபி அரசின் தலைமையில், அதிபர் ஷேக் முகமது பின் ஸாயித் அல் நஹ்யான் அவர்களின் அனுமதியுடன், அபுதாபியில்…

பொதுவானவை2 min read

More in மருத்துவ குறிப்பு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x