இக
Writer NRM0000028

இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்

Member since July 2019Writes in தமிழ்

எனது பெயர் இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்.
ஏழுகழுதை வயதையும் என்றோ தாண்டிய ஒரு கொள்ளுத்தாத்தா நான்.

என்னை. எழுத்தாளன் (Writer) என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் எனது எழுத்தாள நண்பர்கள் கொஞ்சம் நமுட்டாக சிரித்துக் கொள்வார்கள்.

அதனால் எனது பேத்தி பேரன்களின் திருப்திக்காக 'கதைசொல்பவன்' Story Teller என்று மட்டும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ( எனது வீட்டுக்காரம்மா என்னை 'கதை-விடுபவன்' என்பார்கள்! )

பதினைந்து வருடங்களுக்கு முன் உலகத்தின் முதல்; இயற்தேயிலை நிறுவனத்தில் சமூகஅபிவிருத்தி அதிகாரியாக சம்பளத்திற்கு வேலைப்பார்த்தவன் என்ற பெருமை எனக்குள் உண்டு
சிலகாலம் இலங்கை மனநோயாளர்கள் அரச நிறுவகத்தில் பகுதிநேர ஆற்றுப்படுத்துனராக பணிபுரிந்தும் எனது கிறுக்குத்தனத்தை வீட்டுக்காரம்மாவுக்கு நிரூபித்துள்ளேன்.

வெள்ளைக்காரர்களுக்கு அடங்கி வேலைப் பார்த்த எங்களைப் போன்ற 'தோட்டக்காட்டான்களுக்கு' இருக்கும் ஒரு பலகீனம் எனக்கும் அதிகமாகவே உள்ளது
அது மனவோட்டங்களை ஆங்கிலத்தில் நினைத்து அவற்றினை முக்கால்வாசி தமிழிலும் முடிந்தால் மிகுதியை சிங்களத்திலும் சொற்களாக வெளிக்கொணரும் தடுமாற்றம்-சாமர்த்தியம் எனக்கும் இருக்கின்றது. ( எனவே கிறுக்கல்களை சகித்துக்கொள்வது வாசகர்களின் விதி )
நான் ஒரு Typical ஊர்சுற்றி. இலங்கை முழுவதும் மட்டுமல்ல ஐரோப்பா, ஆபிரிக்கா என்றும் ஒரு 'கால்' பார்த்திருக்கின்றேன்.

சிறுவயது முதலே எனது இளம்வயது விதவைத் தாய்க்கு அடங்கிய அம்மாகோண்டு நான். எனது அம்மா மீனா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டேன்.

அந்த படிதாண்டா குணம் எனது துணைவியாக இருக்கும் வீட்டுக்கார அம்மா முதல் மகள்மார், மருமகள், பேத்திகள், அக்கா, தங்கை என்று அனைவருக்கும் இன்றுவரை வசதியாக இருக்கின்றது. ஆக ஒரு Model Henpecked சேவல் நான்.

நான் ஜென் பௌத்தத்தை கடைபிடிக்கும் ஒரு சைவக்கிறிஸ்தவன் சூபி இஸ்லாமிய கீர்த்தனைகள் மிகவும் பிடிக்கும். காயத்ரிசித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷியின் வரலாற்றினை எனது குருவும் எசமானனுமாகிய லெப்டினன்ட் கர்னல் ஜெயக்குமார் அவர்களின் ஆணைப்படி எழுதி புத்தகமாக வெளியிடும் பிராப்தம் எனக்கு கிடைத்தது. காயத்ரி-சித்தம் என்ற ஆன்மீக இதழின் ஆசிரியனும் நான்தான் .

அறிமுகத் தகவல்கள் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் யாராவது வாசகர், வாசகிகள் சிக்குவார்களா என்று நப்பாசைதான்.

(இந்த 'பெருசுகள்' ஒருபோதும் உருப்பாடாது என்று நீங்கள் சொல்வது எனது செவிட்டுக் காதில் விழுகிறது. ஏனென்றால் ஐம்பது வருடங்களுக்கு முன் இதே வார்த்தைகளை நாங்களும் சொன்னோம்.)

  • 2Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by இராஜேந்திரநாத்

2
இகஇராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்3 Aug 2019

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான இருபத்தொன்னில்…

தாய்மை1 min read
இகஇராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்28 Jul 2019

அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி. இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று. நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
Enable Notifications OK No thanks