ச(
Writer NRM0000034

சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)

Member since August 2019Writes in தமிழ்

இலக்கிய, எழுத்துப்பணிகளில் சுமார் 52 வருடங்களாக ஈடுபாடு கொண்ட யான் சமயம், அரசியல், சமூகம், இலக்கியம், கல்வி மற்றும் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம் பற்றிய துறைகளில் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளேன். எனது கவிதைகள், இலங்கையின் புகழ்புத்த கவிஞர்களான நீலாவணன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் தலைமையில் கவி அரங்கேற்றம் பெற்றுள்ளன.இலங்கை வானொலியிலும் எனது கவிதைகள் ஒலித்தன. வீரகேசரி, சுதந்திரன், கலைவாணன், தினகரன் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. மாற்றம், கிழக்கொளி, இந்து தருமம், இளங்கதிர் சாயிமார்க்கம், யாழோசை, சமாதானம், நாணோசை, மருதம், அருந்ததி, தாயக ஒலி போன்ற சஞ்சிகைகள் எனது ஆக்கங்களைப்பிரசுரித்துள்ளன.ஆங்கிலத்திலும் பல கவிதைகளைப்படைத்துள்ளேன். பட்டய இயந்திரப்பொறியியலாளராகிய யான் தொழில்நுட்பம், விஞ்ஞானம் சார்ந்த கவிதைகளையும், ஆரய்ச்சிக்கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கவிதைநூல்களையும், தொழில்நுட்ப நூல்களையும் எழுதி ஆவணமாக்கி வைத்துள்ளேன்.அத்துடன் பல கவிதைகளை எனது குரலில் பதிவுசெய்து வைத்துள்ளேன். திருக்குறள்கள் அத்தனையையும் விருத்தப்பாவில் மாற்றி எழுதியுள்ளேன்.வெண்பா, விருத்தப்பா, ஆசிரியப்பா, கட்டளைக்கலித்துறை, குறும்பா வடிவில் கவிதைகளைப்படைக்கிறேன். பாடசாலைக்காலங்களில் தமிழ் ஆங்கில நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்கூத்திலும் பக்கப்பாடகராகப்பங்குபற்றியுள்ளேன். ஆலயங்களில் பஜனைப்பாடகராகவும் இருந்துள்ளேன். முகநூலில் சமூக, சமய, அரசியல், ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். சோதிட சாஸ்திரத்திலும் எனக்குப்பரிச்சயம் உண்டு. அக்கரைப்பற்று இராமகிருஷ; ண வித்தியாலயத்திலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்ற யான் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் இயந்திரப்பொறியியல் பட்டதாரியாவேன்.இலங்கைப்பொறியியலாளர் சங்கத்தின் பட்டய இயந்திரப்பொறியியலாளராகவும் உள்ளேன்.

தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்த யான், பேராதனைப்பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம், இரத்மலானை தொழில்நுட்பப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, இலங்கை சீமெந்துக்கூட்டுத்தாபன காங்கேசன் சீமெந்துத்தொழிற்சாலை என்பவற்றில் இயந்திரப்பொறியியலாளராகவும், யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி, மட்டக்குளி உயர் தொழில்நுட்பக்கல்லூரி என்பற்றில் வருகை தரு விரிவுரையாளராகவும், பெலவத்தை நிர்மாண இயந்திரோபகரண பயிற்சிநிலையத்தில் செயற்திட்டப் பொறியியலாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் பொறியியல் தொழில்நுட்பப்பகுதியில் செயற்றிட்ட அதிகாரியாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்.
கல்முனை பாண்டிருப்பைப்பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர் சைவப்புலவர் இளைப்பாறிய உதவி அதிபர் சே.சாமித்தம்பி-நாகம்மா தம்பதிகளின் சிரேஷ; ட புத்திரனான யான் சாவகச்சேரியைப்பிறப்பிடமாகக்கொண்ட பாக்கியலட்சுமி அவர்களைத்துணைவியாக வரித்துள்ளேன். யான் மூன்று ஆண் மக்களுக்குத் தந்தையாவேன்.
(2018-07-15) எமது 35ஆம் ஆண்டு திருமண நிறைவுநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனது 'இல்லறவாழ்வு இனிக்குமா? கசக்குமா? ' எனும் நூல் அருந்ததீ நிறுவனத்தினால் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.

  • 7Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by சா.சக்திதாசன்

7
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)4 Sep 2019

பிரச்சினைகளும் தீர்வுகளும்

பிரச்சினை என்பது எமது உடன்பிறப்பு. எமக்கு எது இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இல்லாத நாள் இல்லை. இல்லவேயில்லை. ஒட்டுண்ணிபோல் எப்படியோ பிரச்சினைகள் எம்மோடு சேர்ந்துகொண்டு எமது ஆற்றலின் சாரத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. வாழ்வின் அமைதியான போக்கினை தற்காலிகமாகவோ…

சமூகவியல்3 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)29 Aug 2019

ஏன் நடுக்கம் புவிமகளே!

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும் என்றேநீமனம் பதறி…

இயற்கை1 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)28 Aug 2019

அச்ச உணர்வு

தன் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரினங்களுக்கு இவ்வுணர்வு தம்மை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே பெரும்பாலும் தோன்றினாலும், ஆறறிவு ஜென்மமான மனிதனுக்கோ பல்வேறுபட்ட பரந்த வகைகளில்…

சமூகவியல்3 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)20 Aug 2019

மாற்றமும் விளைவுகளும்

இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி கோள்மண்டலங்களாக மாற்றப்படுகின்றன.…

ஆய்வுகள்2 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)14 Aug 2019

வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்

சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர் ஊற்றுக்களாகப்புறப்பட்டு வருகிறது.…

ஆய்வுகள்5 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)13 Aug 2019

உனக்கென்ன கவலை தம்பி?

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி? தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி நல்கும்கருங்காலி…

வாழ்வியல்1 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)13 Aug 2019

நாளையே எங்கள் நோக்கம்

எழுகின்றாய் வாலிபனே! ஏன் எழுந்தாய்? இந்நாட்டின்எதிர்காலம் உன்கையில் இருக்கின்றதென்கின்றஉணர்வினிலேஎழுந்தாயாசொல்!விழிக்கின்றாய் வாலிபனே! ஏன் விழித்தாய்? வீறாகவீட்டுக்கும் நாட்டுக்கும் வேண்டியதைஉடன் செய்யும்விருப்பத்தில் விழித்தாயாசொல்!பழிக்கின்றாய் பழைமைபிடித் துழல்பவரை! ஏன்பழித்தாய்?பங்கெடுத்துச்செயலாற்றும் பாங்குடையஉனைஅவர்கள்பார்க்கவேமறந்தாராசொல்!அளிக்கின்றாய் மரியாதைஅன்னைக்கு! ஏன் அளித்தாய்?அவளுன்னைநாட்டுக்காய் அர்ப்பணித்தபெருந்தன்மைஅறிந்ததும் மகிழ்வுகொண்டா? துடித்தாயேவாலிபனே! ஏன்…

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks