கவிதை

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ.
இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே….
உன் உதிரங்களை பாலாக்கி
என்னை ஒரு ஆளாக்கினாயே…
என் ஆடைகளின் சாயம் போக்கியவள்…
என் மனதின் காயம் போக்கியவள்…
என் உடல் நிலையின் உயர்வு நிலை அடையச்செய்தவள்…
இன்றோ உணர்வு இல்லாத நிலையை அடைந்திருக்கிறேனே ..
நீ சுற்றிய சேலை இன்று நான் சுற்றிக்கொண்டேன் உனது சுவாசத்திற்காக …..
எனக்காக பல தூக்கத்தை மறந்தவளின் ஏக்கத்தை என்னால் மறக்கமுடியவில்லையே…
என் அழுகை சத்தம் கேட்டு பல முறை நீ சிரித்து இருக்கிறாய் …
இன்றும் நான் அழுகின்றேன் ஆனால் சிரிக்க நீ இல்லையே…
எனக்கு ஆசை,
உன் காதணியாக தொங்கி உன் கண்ணத்தில் முத்தமிடவும்…
உன் காலணியாக இருந்து உன்னை தாங்கி விடவும்….
எனக்காக பல தொழுகைகளும் பல அழுகைகளும் தாங்கியவளுக்கு
என் வலிகள் கொண்டு என் வரிகள் கொண்டு
எழுதி விடுகின்றேன்…
அழுது விடுகின்றேன் …
எனது கவிதைகள் கொண்டு…

-மதுரைவிசை

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from மதுரைவிசை

மதுரைவிசை18 Jan 2024

ஆண்கள் கல்யாண கனவு

வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய நிலமை..பிரச்சனைகள் என்று…

உறவு1 min read
மதுரைவிசை25 Oct 2021

எல்லோருக்கும் ஆசை

உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
மதுரைவிசை11 Oct 2021

என் தந்தை

முகப்பூச்சு பூசாமல்புறம் பேச்சு பேசாமல் இருப்பவர்..அணிகலன் மீது ஆசை இருக்காது..பனியன் கூட வாங்க காசு இருக்காது...இருந்தாலும் வாங்க மனமிருக்காது....அன்பிர்க்கு உடன் பட்டவன்..உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்...குடும்பத்தினால் ஏழைகுடும்பத்திற்காக வேலைகுடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை முன்னேறி விடுவோம்…

உறவு1 min read

More in கவிதை

See all
0
Would love your thoughts, please comment.x
()
x