மருத்துவ குறிப்பு

தேன் வைத்தியம் – உறக்கத்தை தரும் தேன்

உறக்கம் வராமல் வருந்துவோரின் தொகைதான் எத்தனை? வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உறக்கம் என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறார். படுக்கையில் படுக்கின்றார் கண்கள் மூடுகின்றன. காலையிலிருந்து அவர் பார்த்த காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஆடிவிட்டு போகின்றன. திடுக்கிட்டு எழுகிறார். குயில் கூவிக் கொண்டிருக்கிறது பொழுது புலர்ந்து விட்டது பின்பு இதோ அவரே கூறுகிறார் உருக்கமாக.

“உறக்கமே! இப்படியே நேற்று இரவும் வருந்திப் புரண்டேன். முன்னிரண்டு இரவுகளும் கலங்கி தவித்தேன். இன்றாவது எப்படியாவது என்னை நோக்கி வந்து தழுவி அனைத்து தாலாட்ட மாட்டாயா? பகலுக்கு பகல்இடையே நின்று வாழ்விக்கும் புண்ணியமே வருக! வளமும் வனப்பும் பொருந்திய வாழ்வு நலத்தையும் தரும். அருள் கனிந்த அன்பு தாயே, வருக! இன்றாவது என்னை ஆட்கொள்.

இப்படி இந்த கவிஞர் ஒருவர் மட்டும்தானா? பலர் எண்ணிறந்த மக்கள் அவர்களுக்கும் உறக்கத்தை வரவழைக்கும் உறக்கம் வரவில்லை என்றாலும் சரி, நடு உறக்கத்தில் பிடித்து தூங்க முடியவில்லை என்றாலும் சரி, தேனை உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உறங்கப் போகும் போது ஒரு டம்ளர் வெந்நீரில் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து ஓர் 2 தேக்கரண்டி தேனையும் விட்டு நன்றாகக் கலக்கிக் குடித்து விடுங்கள். பின்பு தலையணையில் சாய்ந்தவுடன் இமைகளை உறக்கம் வருடும். கொஞ்சம் கொஞ்சமாய் இரவு உணவின்போது தேனை அருந்தும் பழக்கத்தை கை கொண்டு வரவேண்டும். ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தும் தூக்கம் வராத சிலர் இருப்பார்கள் மீண்டும் அவர்கள் ஒரு டம்ளர் தேனும் நீரும் எலுமிச்சை சாறும் கலந்த வெந்நீரை அருந்தட்டும். காசை கொட்டி நோயை தேடி உயிரையும் அரிக்கின்ற ‘அந்த அற்புத தாலாட்டு தூக்க மாத்திரைகள் தராத ஆழ்ந்த உறக்கத்தை தேன் தருவதை காண்பார்கள்.

Source : டாக்டர். இரத்தின சண்முகனார் (பதிவு பெற்ற சித்த மருத்துவர்) அவர்களின் தேன் வைத்தியம் என்ற நூலிலிருந்து

This writing is the work of Lakshmi Praba, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 163 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Lakshmi Praba

LPLakshmi Praba7 Mar 2020

பின்பற்றுவதற்கு சிறந்த சில காலைப் பழக்கங்கள்

வழக்கமாய் எழுவதை விட ஒரு கால் மணி நேரம் முன்னர் எழுந்து விடுதல் நல்ல மாற்றத்தை தரும். கூடுதல் நேரம் இருப்பது போலத் தோன்றும். எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் தலையணை, போர்வை , படுக்கையை…

அறிந்து கொள்வோம்1 min read
LPLakshmi Praba27 Dec 2019

டொனால்ட் ட்ரம்ப் பற்றி நம்ப முடியாத சுவாரஷ்யமான தகவல்கள் (The interesting & unbelievable facts about Donald Trump)

டொனால்ட் ட்ரம்ப் ஓர் அமெரிக்க தொழிலதிபர், தொலைக்காட்சி ஆளுமை, எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார். மேலும் 500 வணிக அமைப்புக்களைக் கொண்ட டிரம்ப் அமைப்பின் தலைவர்.…

பொதுவானவை2 min read
LPLakshmi Praba25 Nov 2019

எப்படி எழுதக்கூடாது – சுஜாதா

நான் எழுத ஆரம்பித்தபோது கூட, எப்படி எழுதுவது என்பது புரியவே இல்லை. எப்படி எழுதக்கூடாது என்றுதான் புரிந்தது. அதனால்தான் நான் ஒரு எழுத்தாளர் ஆனேன் என்றுகூட சொல்லலாம்.   நான் எழுத ஆரம்பித்தது நாலு வயதில்…

ஏனையவை4 min read
LPLakshmi Praba15 Nov 2019

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்!

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது.…

வணிகம்3 min read

More in மருத்துவ குறிப்பு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x