ஜின்கோ மரம் – Ginkgo Biloba

உணவு உடை இருப்பிடம் மட்டுமல்லாமல் மருந்துகளுக்காவும் தாவரங்களின் தேவை அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் Geriatrics எனப்படும் முதியோர் மருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகள் ’ஜின்கோபைலோபா’ (Ginkgo biloba) என்னும் மரத்திலிருந்து பெறப்படுகின்றது. இம்மரம் ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperms) எனப்படும் பூக்காத தாவரவகையைச்சேர்ந்தது
40 மீட்டர் உயரம் வரையிலும் வளரும், தடித்த சாம்பல் நிறமரப்பட்டைகளுடன் உள்ள இம்மரத்தில் அடர்பச்சைநிறத்தில்12 செமீ குறுக்களவுள்ள அழகிய கைவிசிறியினை போன்ற இரண்டு பிரிவுகளாக இருக்கும் இலைகளே பை-லோபா,‘’இரண்டாகப்பிளவுபட்ட’’எனப்பொருள் தரும் சிற்றினப்பெயருக்கு காரணமாகும். ஆண் பெண் மரங்கள் தனித்தனியாக இருக்கும். பழுத்த சதைப்பற்றுள்ள சூலகம் (ovary) ஆரஞ்சு நிறத்திலிருக்கும்.
350மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து எந்த மாற்றமும் இன்றி பூமியில் இருப்பதால் இவற்றிற்கு ’’வாழும் தொல்லுயிர்ப்படிமம்’’ (Living fossil) எனப்பெயருண்டு.

சீனாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் கடல்மட்டத்திலிருந்து 1,100 மீட்டருக்கு மேல் வளரக்கூடியது, .சீனாவில் இம்மரம் குட்டையாக கத்தரிக்கப்பட்டு அதிகம் வளர்க்கப்பட்டு மருந்துக்கான இடுபொருளாக விற்பனை செய்யப்படுகின்றது.
சீனா ஜப்பான் கொரியா ஆகியநாடுகளில் 1000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஜின்கோ பல்வேறு நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தபட்டு வருகின்றது
இதன் இலைகளிலிருந்தே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இலைகளில் உள்ள ஜின்கோலைடுகள் (ginkgolides) இரத்தஓட்டத்தை சீராக்கி மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். முதியோர்களுக்கு அதிகம் வரும் மறதி மற்றும் நாம்புத்தளர்ச்சியை பெருமளவில் குணமாக்கும்,
நினைவாற்றல் அதிகரிக்கவும், கண்காது இருதயம் நரம்பு மற்றும் உளவியல் தொடர்பான சிகிச்சைகளூக்கும் ஜின்கோவிலிருந்து மருந்துகள் பெறப்படுகின்றது.
ஜின்கோயேசியே குடும்பத்தின் ஒரேஒரு உயிருள்ள மரமான இதன் இலைகள் பழுத்த பின் அழகிய பொன்மஞ்சள் நிறத்திலிருப்பதால் தற்போது உலகெங்கிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றது வறட்சியைத்தாங்கி எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த ஜின்கோவின் 4 மரங்கள் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில்கூட சேதமடையாமல் இன்றும் அதே இடத்தில் இருக்கின்றது ஜப்பானியர்கள் இதை ’’ஐ சோ’ (“I-cho”)’ என்றழைத்து புனிதமரமாக வழிபடுகின்றனர்.. மாசடைந்த சூழலையும் தாங்கி வளரும் ஜின்கோ, பலநாடுகளில் சாலையோரங்களில் நிழல்தரும் பொருட்டு வளர்க்கப்படுகின்றது.
Encourage the writer
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing




