அந்த இளவேனில் சூர்யோதயம்

இன்னும் "மணி 3. 00" ஆகவில்லை இப்போ "12.30 "தான் ஆகிறது… இது வரை இவ்வாறு நான் ஆர்வத்தோடு இருந்ததில்லை.. நேற்று இரவு போனில் பேசியது இன்னும் நினைவு இருக்கு.. அவள் இப்போ போய் இப்படி சொல்லலாமா…? ச்ச
சரி, எப்படி இருந்தாலும் நாளைக்கு நான் கண்டிப்பா போகிறது தான் அதில் மாற்ற மில்லை யார் வந்தாலும் வராவிட்டாலும்,
ம்.. ஆமா..அலாரம் அடித்தது..அவ்வளவு தான் எழுந்ததும் குளித்து கிளம்பியதும் நினைவு இல்லை இதுவரை, இவ்ளோ சீக்கிரமா நா கிளம்பியதில்லை..
அதோ அந்த பஸ் தான். கரைட்டா வந்து கூட்டிகொண்டு சென்றது என்னை. ஏறி உட்கார்ந்ததும் தான் நிம்மதி..
விடியற்காலை 3.30 என் முதல் தனியான பயணம், ஒரு 5 ஸ்டாப் தள்ளி சிந்து வந்துடுவா அப்புறம் மாரத்தான் 'கு போயிடலாம்..
"என்ன ஒரு நம்பிக்கை? ஆனால் ஏதோ ஒரு வகையில், அவள் வருவதாலே, நான் இப்படி தனியா பஸ் புடிச்சி போறேன்"…
"இல்லனா… அம்மா தான் வரணும், சிந்து பேர சொல்லி தான் அம்மா இப்படி விட்டாங்க என்னை,….."ஆனால் அவளே, பாதி வழியில் தான் வருவாள் என்று நான் கூறவில்லை, அம்மா' விடம் பஸ் ஸ்டான்ட்க்கே வருவாள் என்றல்லவா உருட்டி விட்டேன் .."
சரி சரி…. அதெல்லாம் இப்போ எதற்கு . "ஜன்னல் வழி யே அந்த குளிர்ந்த காலை 4 மணிக்கு ஒன்னுமே தெரியவில்லை….."ஆனால் "நேரமாக நேரமாக சூரியன் உதயம் என்ன ஒரு ரம்யமான காட்சி".. அப்போ மேம்பாலத்தில் பஸ்சென்று கொண்டிருந்தது……'அந்த "குளிர்ச்சியும் மெல்லிய சூரிய வெப்பமும் கொஞ்சம் நேரம் என் பயத்தை மறக்கடித்தது…."ஆ… ஆமா' ல..!!!
சிந்து பஸ்ல ஏறல….!!!!!!!!!!!!"அட கடவுளே.".!!!….. அதை நான் கவனிக்கவே இல்ல….!!!
"போச்சி போ.. "!!…இப்போ எப்படி நா தனியா போவேன்..?..( கொஞ்ச நேரத்தில ஈர கொளய நடுங்கீடுச்சி..).எப்படியோ….. "என்னை நானே.. ஆசுவாசபடுத்தகிட்டு, அவ கிட்ட போன் பன்னினா,… அவ வேற போனை எடுக்க மாட்றா..ஆஆஆ…?!!
ம்… சரி…"ஏன்னவானாலும் யார் வரலனாலும்.. கண்டிப்பா நான் போவேன்' னு உள்ளுக்குள்ள திருப்பி "சொல்லிகிட்டன்..(நல்ல வேளைக்கு சரியா பஸ் ஸ்டான்ல இருந்து தான் மாரத்தான் ஆரம்பம்)இது நேர திருச்சி போற பஸ் தானே, அப்புறம் என்ன….இருந்தாலும்…. ம்…(எனது முதல் பயணம் அல்லவா)இடம் வரும் போதே தெரிஞ்சிடுச்சி அங்க தான் ஏற்பாடு என்று,எல்லாம் நடந்து கொண்டே இருக்க நான் பஸ் விட்டு கீழே இறங்கி அங்கே போனதும் முதலில் போனைஎடுத்தேன்..
கண் முன்னாடி வந்து நின்றா சிந்து…நான் :"ஏன்டி போனை எடுக்கல.?". சாரி டி,நான் பஸ்'ஸ மிஸ் பண்ணிட்டன்"அந்த பதட்டதுல, ஏடுக்கல வேற பஸ் ஏறி மாத்திட்டு வந்தேன் நேரமா வரணும் னு…நான் : 'ம்ம்ம் சரி விடு….நாங்க ரெண்டு பேரும் போய் ….பேர் குடுத்துட்டு அப்படியே அவங்க குடுத்த டீசர்ட் அ வாங்கி கொண்டு பாத்ரூம்' ல அப்படியே சுடிதார் மேல போட்டுட்டு வந்து ( மாரத்தான் ஆரம்பம் ஆயிடுச்சு..)ஓட ஆரம்பச்சிட்டோம்.. "நல்லா வேலை பெரிய பை எதுவும் எடுத்துட்டு வரல.. சின்ன நீளமான குட்டி கைபைய சைடா சோல்டர்' ல போட்டு கொண்டு ஓடி னோம்.. கொஞ்ச நேரத்தில எல்லாரும் மெதுவா ஒட ஆரம்பிச்சாங்க…" போலிஸ் கூட எங்களுக்கு 'பந்தேபஸ்து ''குடுத்து இருந்தாங்க"நான் :….ஒரு நிமிடம் அது அவ தானே திவ்யா தான… சிந்து : ம்ம்….ஆமாம் டி அது அவளே தான்..பாரேன் கூட ப்ரித்தா கூட வந்து இருக்க நான் : அவ எப்படி டி வருவா நேத்து நைட்டு நான் கேட்டப்ப எனக்கு ப்பிரியடு டி நா வரல 'னு சொன்ன… சிந்து : நாம வரது அவளுக்கு பிடிக்கல போல.. நான் : அவ என்னைக்கு நாம்மலை ஒன்னா பாத்திருக்கா. சரி விடு டி கிளாஸ்'ல "3 வதா "வந்தால..அதான் ஓவர் சீன் தான் அவ எப்பவும்.. விடு….கொஞ்ச நேரத்துல நாங்கள் எல்லாரும் ஏப்படியோ …பார்த்து பேசிக்கிட்டோம்..திவ்யா. :எப்படி வந்திங்க..சிந்து : எப்படி வருவாங்க, ஏரோபிளன்ல தான்….திவ்யா :இல்ல எப்ப வந்திங்க 'னு சிந்து : எப்போ மாரத்தான் ஆரம்பிச்சுதோ அப்போ..ப்ரித்தா : சாரி டி……. நா ப்ரியட் ஆகல, "ப்ரியட் கொஞ்சம் முன்ன பின்ன" தானே ஆகும்…அதான் நா வந்துட்டேன்..நான் : ஓகே ஓகே…..டி…..இது 'ல என்ன இருக்கு… கொஞ்ச நேரத்தில கும்பல் கூடிடுச்சி.. நாங்க முடிக்கும் இடத்திற்கு அருகில் வந்திட்டோம்…எல்லாரும் பிரிஞ்சிட்டோம் கும்பல்ல.. ஆனால் போலிசார் மட்டும் எல்லோரையும் லையன் பண்ணி. அனுப்பவுமா போறதுமா இருந்தாங்க….
அங்கே உள்ளே பார்த்தால்.. பெரிய கல்லூரி.தான் .. மணி 9.45 ஆச்சு ஆனா பசி எடுக்கல.. அங்க இரண்டு இடத்தில் வந்தவர்களுக்கு சான்வஜ் கொடுத்தாங்க.. நானும் போய் வாங்கிட்டன்இது தான்…. முதல் முறை "சான்வஜ்…சாப்டறது.".. ஆனா வாயில் வைத்ததும் வந்த சந்தோசம் போயிடுச்சி.. என்ன ஒரு "டேஸ்ட் லஸ் "உணவு. இதுல கோஸ வேற அப்படியே வச்சி இருக்காங்க.. சரி'னு … பாதி' ய கடிச்சு மென்னியும் மென்னாமலும் முழுங்கியாச்சி.. யப்பா சாமி…..இதுக்கு "ஒரு டி குடுத்து இருக்கலாம் "னு மனசு ஏங்க…..திடீர்னு வந்த கும்பல் எல்லாம் ஒன்னு கூடிருச்சி … ஒரே சத்தம்.. சுத்தமா ஒன்னுமே கேக்கல… அப்புறம் தான் தெரிஞ்சதுநடிகர் பரத் வந்து இருக்காரு னு 🙄… (நான் ஒரு சினிமா நடிகர், நடிகை.. ஏன் சீரியல் நடிகைய கூட ஒரு தடவை கூட நேர்ல பாத்ததில்ல) ஆனாலும் விழுந்து அடித்து கும்பல் ல போய் பார்க்கர ஆர்வமும் இல்ல.. சரி……வந்த வேலை முடிந்தது….கிளம்பலாம் பார்த்த…. "காலெஜ் உள்ள ஏதோ சிலை இருக்கறமாறி இருந்தது.". என்ன ன்னு போய்ட்டு பாத்துட்டு வந்துடலாம்.. இவ்ளோ தூரம் வந்ததற்கு…அட.. ப்ரித்தா.. கூட ஏதோ பையன்…. ஓகோ இதுக்கு தான் அப்போ பொய் சொன்னாலோ…இது கூட பரவால… இங்கேயும் இந்த திவ்யா விடல .. 3 ம் சேந்து சுத்தி பார்க்க போறாங்க .. போல…..அதே மாறி மூன்று பேரும் கிளம்பிட்டாங்க… எப்படி தான் இப்படி இருக்கா..????…திவ்யா தான் இப்படி சிரிச்சு சிரிச்சு பேசறான. …..அந்த "ப்ரித்த பேக்கு' கு பெருமை வேற.. ஏன் னா அவ எங்க போனாலும் திவ்யா வருவ… ல..பெஸ்டி' னு இப்போ உள்ள வார்த்தை இந்த "திவ்யா, ப்ரித்தா "கு தான் பொருந்தும்…நமக்கு 'லாம் நல்ல வேலை" மானம்,ரோசம்…..லாம் "இருக்கு…மம் அப்போ "மாரத்தான் 'ல வெற்றி பெற்றவர்'கு கோப்பைகளை வழங்க ஆரம்பிட்டாங்க"…..திடீர்னு ஒரு கை வேகமா பிடிச்சு இழுக்க….சிந்து : இங்க என்ன டி பண்ணிட்டு இருக்க… வா அங்க ஆக்டர் பரத் வந்து இருக்காரு கூடவே சூப்பர் சிங்கர் ஜெய் வந்து இருக்கார். னு கூட்டத்தில் இழுத்துட்டு போறப்பவே……. அங்க "ஜெய் பாட்டு பாட ஆரம்பிச்சுட்டார்.." மீண்டும் முதல் முறை நேரடியாக பாடல் கேட்கறேன்… சூப்பர் சிங்கர் ல பாடியவரிடம் இருந்து… ஆகா பரத் கூட அவங்க மனைவியும் வந்து இருந்தாங்க..அவ்வளவு தான் "அடுத்த நிமிடம் அங்க இருந்து தள்ளி எறியப்பட்டோம்"…….. எப்படியோ நேர்'ல பாத்தாச்சு……அங்க வித்துட்டு இருந்த ஐஸ் கிரிமா 2 வாங்கி சாப்டுட்டு.. வந்ததற்கு காலேஜ் முழுசா 2 ரவுண்டு சுத்திட்டு கிளம்பிட்டோம்….இப்போ தான் மணி1 ஆன மாறி இருந்தது….. பஸ் ஏறி சீட்டு 'ல உட்காந்தப்ப மணி 4 ஆச்சு…."என்ன வேகம்…….மாரத்தான் வீரர்களை விட வேகமா ஓடுது மணி.". அந்தி வானம் 'ஆரஞ்சு கலர் 'ல ஜன்னல் தெரிஞ்ச சூரியன்…காலை எங்க இருந்து வந்தாரோ அங்கயே போனாரு….எங்களை போல…………..
ஆனால் காலை பஸ் யாருமே இல்ல ஒரு 3 , பேர் 'ஐ தவிர ஆனால் இப்போ அவ்வளவு கும்பல் இல்லை…..ஆனால்" எல்லா சீட்டும் நிறைஞ்சி இருக்கு..". வீட்டுக்கு "போனதும்…….படுத்ததும்…. தூங்கியதும்………….. கூட நினைவு இல்லை."……….."அந்த நாளை போல"…. அவ்வளவு முக்கியமா இல்லாததால்…. எனது முதல் தன்னிச்சையான முடிவு எடுத்து தனியா போன முதல் பயணம்…. அதனாலே என்னவோ இன்று வரை.. நினைவில் உள்ளது…
This writing is the work of Sobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
Happy Deepavali from NEERMAI
May the festival of lights bring peace, joy and new stories to you and your family.










