உங்களை உண்மையிலே உடையச் செய்வது நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளா?

உங்களை உண்மையிலே உடையச் செய்வது நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளா?
அல்லது
அதனை கையாளும் வழிமுறைகளா?
பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது..
ஆனால் உளவியல் என்ன சொல்கிறது என்றால் , நம்மை உடைக்கும் காரியம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையோ அதனால் உண்டாகும் stress ஓ அல்ல, குறிப்பிட்ட பிரச்சினைகளை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்,எப்படி கையாள்கின்றோம் என்பதிலே தான் தங்கியுள்ளது என்கிறது.
Cognitive appraisal என்ற கோட்பாட்டு கூட சொல்கிறது:
ஒரே சூழ்நிலை
• ஒருவருக்கு “அழுத்தம்” என்றும்,
• அதே சூழ்நிலை மற்றொருவருக்கு “சவால்” என்றும் தோன்றவைப்பது வேறொன்றுமில்லை நம்முடைய சிந்தனை தான் .
அதனால் சுமையை அகற்ற முடியாவிட்டாலும்,
அதைப் பற்றிய நம் மனநிலையை மாற்ற முடியும்.
சுமை மாறாமல் இருந்தாலும், சமநிலை மாறினால் வாழ்க்கை மாறும் என்ற முடிவிற்கு வர வேண்டும்.
நம்மை உடைப்பது நாம் சுமக்கும் சுமை அல்ல… மாறாக அதை சுமக்கும் விதம் தான் என்பதை மனதில் கொள்க.
Asna Sueetha Faizal
#மனநலம் #உளவியல் #StressManagement #MindfulnessTamil #Resilience #MentalHealthTamil #SelfCareTamil #EmotionalHealing #LifeBalance #InnerStrength #PsychologyTamil
This writing is the work of Asna Sueetha, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
Happy Deepavali from NEERMAI
May the festival of lights bring peace, joy and new stories to you and your family.








