வாழ்வியல்

உறவு

அவள் பார்வை
எனை தீண்டாது
போயிருந்தால்
நான்
அந்த மஜ்னுவைப் போல
பித்துப் பிடித்தவனாய் மாறி
இன்று
இத்தனை கவிதைகளை
கிறுக்கிக்
கொண்டிருந்திருக்க மாட்டேன்
கஸல்களைப் படித்தபடி
நிலவையும்
தென்றலையும்
மாறும்
என் உணர்வுகளுக்கு
தோழமை என
எண்ணிக் கொண்டிருந்திருக்க
மாட்டேன்

அவளை நான் பார்க்காமலே
இருந்திருக்கலாம்

குறைந்தபட்சம்
என் ஹார்மோன்களாவது
சீராய் பயணித்திருக்கும்

பனிக்குடம் உடைக்க
போராடும்
குறைமாத குழந்தையைப் போல
அவளால்
என் இயல்புக்கும்
இயலாமைக்கும்
மிகப் பெரிய போராட்டம்
வலுத்திருக்காது

அவள் எனக்கென
படைக்கப்படாமல்
இருந்திருக்கலாம்

சட்டென சுண்டியிழுக்கும்
அவளுக்கேயான அவள் வாசனை
எனை தவிர்க்கச் செய்திருக்கலாம்

ஒட்டக் கத்தரிக்கும்
நகங்களைப் போல
என் பாதை விட்டு
அவள் விலகி
எங்கோ போயிருந்திருக்கலாம்

நான்
நானாகவே இருந்திருப்பேன்

அவளின் புன்னகையை
என் உதடுகள்
பிரதிபலிக்காது போயிருந்தால்
ஒரு ராட்சச மின்னலில்
பார்வை தொலைத்து விட்ட
துரதிர்ஷ்ட குருடனைப் போல்
நான் அலையாமல்
இருந்திருப்பேன்

சில நளினங்களிலிருந்து
விடுபட்ட
ஆண்மைக் குணத்தின்
சாயல் சரி
என்னை
கவராது போயிருந்தால்
ஒரு நெருக்கமான
தோழனுக்குரிய
இடத்தை அவள்
நிரப்பியிருந்திருக்க மாட்டாள்

என் வாழ்க்கை என்னிடத்தில்
எப்போதும் போல்
பத்திரமாகவே இருந்திருக்கும்

எல்லாமே விதிதான்
பாட்டாளியின் வியர்வைக்குரிய
கூலியையும்
விவசாயிக்குரிய கண்ணீரின் விலையையும்
நிச்சயிக்கும் அதே விதிதான்

எங்கோ ஒரு குடும்பத்தில்
பிறந்த எனக்கும்
அவளுக்கும் முடிச்சுப் போட்டு

இல்வாழ்க்கையில்
இவளின்றி அசையாது
ஓர் அணுவும் என
என் ஜட நிலைப் பிறழ்வுகளை
நிஷ்டூரப்படுத்தியது

என் மனித தர்மத்தின்
எல்லை நீட்டி
என் கர்வம் அழித்து
என்னை எனக்குள் புதுப்பித்து
எல்லாமே சரி என்ற
நேர் கோட்டில் பயணிக்கச் செய்திருக்கிறது

குறை தவிர்
மனமாளப் பழக்கியிருக்கிறது

என்னால் ஒன்றை
மட்டும் உறுதியாய் சொல்ல முடியும்

அவள் என்
வாழ்க்கை முழுமைக்குமான
அதிர்ஷ்டம்

குவளைகளில் நிரப்பப்படும்
உயர் வகை திராட்சை
மதுவைப் போல

பெண்ணால் ஓர் ஆணின்
வாழ்க்கையில் நிரப்பப்படும்
பரிபூரணம்

இறைவா
உனக்கு கோடி நன்றிகள்

என் விலா என்பு வழி
அவளைப் படைத்ததற்கு

என் துர்க்கிரித்தனம்
அவள் விடயத்தில்
தோற்றுப் போய் விடச் செய்ததற்கு

இறைவனே
உனக்கு கோடி நன்றிகள்

எனக்கு முன்
அவள் சுவாசம்
நிறுத்தப்பட்டிருந்தாலும்

இந்த அறுபது வயதின்
கனத்த தனிமையை
அவளுக்கு பதில்
எனக்குத் தந்ததற்கு

இளமையில் கொடுமை
வறுமை என்றால்
முதுமையின் கொடுமை
தன் துணையின்றி
மீதி நாட்கள் நகர்த்துவதுதான்…………………….

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Shafiya Cader

SCShafiya Cader31 Oct 2023

நீ – நான்

வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…

நேசம்1 min read
SCShafiya Cader7 Aug 2023

ஹலோ

  எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின் முதுகிற்குப்…

உறவு1 min read
SCShafiya Cader9 Apr 2023

சாளரம்

  ஒரே குகைஒரே இருட்டுஅதே வானம்அதே நீலம்அதே சாம்பல்அதே கரி வாசம்மெல்லத் திறந்தால்விழி நிறைய மலர்கள்கண்கள் மூடினால் அதே அலைஅதே சப்தம்பெருந் தடியாய்தவறுகள் கண்முன் நிழலாடுகையில்இறுக்கிக் கொள்ளும்பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா....?…

டயரிக் குறிப்பு1 min read
SCShafiya Cader7 May 2022

நீலக்குயிலே கண்ணம்மா

    என் தேசத்தில்என் தேகத்தில் தொலைந்து போன தேடல் நீஉயிரில் பிறிதொரு கயிறு திரிக்கத் தேவையிரா என் உள்ஊடுறுவிய ஆத்மம் நீஅன்பின் எல்லை நீமுடிவில்லா பந்தம் நீவேரறுக்கத்தெரியா தொப்புள்கொடி சொந்தம் நீதேடி நான் கண்ட…

டயரிக் குறிப்பு1 min read

More in வாழ்வியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x