29.2 C
Batticaloa
Thursday, July 30, 2026
முகப்பு கவிதைகள் இயற்கை விடியும் ஒரு நாள்

விடியும் ஒரு நாள்

0
142
1001644457-50kb

நிச்சயம் விடியும்
​வாழ்க்கை சில நேரங்களில்
இருண்ட குகையைப்
போலத் தோன்றலாம்…

வழி தெரியாத காடு போல
மனம் அலைபாயலாம்
​கண்ணீர் கன்னத்தை
நனைக்கும் போது
இறைவன் உங்களைக்
கைவிட்டு விட்டதாக
எண்ணிவிடாதீர்கள்…

மேகங்கள் கலைந்தால் ஒழிய
வானம் தெரிவதில்லை!
​உள்ளே பூட்டி
வைத்திருக்கும் வலியும்,
யாரும் அறியாத
உங்கள் மௌனமும்,
இறைவன் அறியாதது அல்ல…

அவன் கஷ்டங்களைக் கொடுப்பது
உங்களை உடைக்க அல்ல…
உள்ளிருக்கும் வைரத்தை மெருகேற்றத்தான்!

​பொறுமை எனும் கயிற்றைப்
பிடித்துக் கொள்ளுங்கள்,
இன்றைய கண்ணீர்…
நாளை ஒரு புன்னகையாய்
மாறலாம்…

ஏனெனில் ஒவ்வொரு
சிரமத்திற்கு பின்னரும்
நிம்மதி உண்டென
இறைவன் வாக்களித்து
விட்டான்…

அவனிடம் நாம் பொறுப்பை
ஒப்படைத்து விட்ட பிறகு
ஏன் இந்தக் கவலை?
ஏன் இந்தக் கண்ணீர்?
ஏன் இந்த விரக்தி?

ஹஸீதா அபுசாலி
பொத்துவில்


0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks