பெண்மை

கூடைபோட்ட குடும்பப் பெண்

Picture added by the writer, சிவசூரியன் வினோதன், who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

மா நிற மேனியுடன்
கருத்த அருவி கொண்ட
நீண்ட கூந்தலும்
முழுநிலவில் வெட்டி எடுத்த
அரை நிலவின் நெற்றியும்
அதற்கும் அழகூட்ட வைக்கப்பட்ட
குங்குமச் சிவப்பும்
நீண்டு புடைத்த
சாய் கோபுரம் கொண்ட
அவளின் மூக்கும்இ
அதற்கும் கிரீடம் வைத்த
அவளின் மூக்குத்தியும்
பெண்மையின் இரகசியத்தை
பேசிக் கொண்டே இருக்கிறது இன்றும் கூட
ரவிக்கை அணியாத பெண்ணாக இருந்தவள்
சேலையால் சுற்றி
உடலை மறைக்கும் உயர்ந்தவள்
தனது கற்பின் இரகசியத்தை காப்பாற்றுபவள்
அதனால் தான் இவள்
கற்புக்கரசியாகிறாள்.
கரம் எடுத்து
விரல் கோர்த்து
பச்சைமணி இலைகளை
பக்குவமாய் கிள்ளி எடுத்து
மல்லிகையும் நாணத்தால்
தலைகுனியும்
கூந்தலுக்குள் சொருகி
அப் பச்சை மலரினை
பத்திரமாய் வைக்கிறாள்.
அழகின் இனிப்பு
மிதமிஞ்சி சென்றதனால்
பச்சை மணி இலைகள்
பத்திரமாய் கூடையில் விழுகிறது
நிரம்பி வழியும்
நீர் குடம் போல்
தலையில் போட்ட
கூடை கொழுந்தின்
நிறையால் நிறைந்திருக்கும்
ராத்தலின் நிறைக்காக காத்திருக்கும்.

பத்தாம் திகதி வந்தாச்சு
இரத்தத்தை உறிஞ்சிய சம்பளம் கிடைச்சாச்சு
கடன் கொடுத்த காரன் எல்லாம்
காலை ஆட்டி நின்றாச்சி
யார் சொல்லியும் கேட்கவில்லை
பத்து ரூபாய் கூட
இப்பாவி கையில் தங்கவில்லை
என் மகனும் சொல்லி இருந்தான்
‘உனக்கு சோறு போட நான் இருக்க
நீ ஏன் கஷ்டப்பட வேண்டும்’என்று
என்ன செய்ய
நான் பெற்ற சாபம்
கடனை
என் பிள்ளையை கொண்டு
அடைக்கக்கூடாது என்பதற்காக
எனக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறேன்
என் சாபக் கடனை!

This writing is the work of சிவசூரியன் வினோதன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from சிவசூரியன் வினோதன்

சவசிவசூரியன் வினோதன்20 May 2020

பாதையை மாற்றும் போதை

வர்ண வகைப் போத்தல்அதை உள்ளே விட்டால்அவர்கள் எடுப்பதோபெறும் ஆத்தல்புரியாத சொற்கள் தான் புரிந்து கொள்ளதான் வேண்டும். கொண்டாட்டக் குடிகுதுகலமாய் இருக்க எடுப்பதோமுதற் படிகவலைக் குடி கண்ணீருக்காகன உச்சப்படிவட்ட மேசை, வசதிக் குடிஅலங்கார குடிஇ அதிகார குடிவிருந்திற்கு…

கவிதை - ஜூன் 20201 min read
சவசிவசூரியன் வினோதன்12 Apr 2020

கடலினில் மிதக்கிறேன்

வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி அந்தி மாலையும் ஆனதடிஅம்புயம்…

இயற்கை1 min read
சவசிவசூரியன் வினோதன்17 Jul 2019

அப்படி என்ன சொன்னாய்?

வானத்தின் விண்மீன்கள் வைகை ஆற்றில் மிதக்கிறதுஉன் மெளன மொழியின் சொல்லைக் கேட்டு சந்திரனும் சலனமில்லாது குளிக்கிறான் உன் சாந்தமான சொல்லைக் கேட்டுபகலில் பூத்த மலர்களும் இரவில் பூக்கிறதுஅப்படி என்ன சொன்னாய் உன் அமிர்த வாயாலே... தென்றலுக்கு…

நேசம்1 min read
சவசிவசூரியன் வினோதன்16 Jul 2019

உருகிப்போன என் காதலி

என்னுடன் உரையாடிய என் பேனை என்னோடு உறவாடியது என்-காதலியாக. வானத்தின் சாயத்தினை களவெடுத்துஉன்-கற்பனையின் கவி வரியை களங்கமில்லாமல் எழுத என்னையும் உருவாக்கினாய் மை கொட்டும் பேனையாக. முழு நிலவில் வெட்டியெடுத்த வெண் நிற தாளில் நான்…

நேசம்1 min read

More in பெண்மை

See all