நீர்மை: எழுத்தின் வழியே சமூக மாற்றத்தை நோக்கி!
நீர்மை என்பது வெறுமனே வருமான நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதாரண தளம் அல்ல. இன்று வருமான நோக்கத்திற்காகச் சமூகத்தின் கட்டமைப்பையும் கலாசாரத்தையும் சிதைக்கின்ற பொழுதுபோக்குகளுக்கும் கேளிக்கைகளுக்குமான தளங்களும் சமூக ஊடகங்களுமே அனைவராலும் பேசப்படும், பயன்படுத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.சற்றே சிந்தித்துப் பாருங்கள்! நாம் எந்தளவு தூரம், எந்தப் பாதையில் எம்மையும் எமது சந்ததியினரையும் வழிநடத்திச் செல்கின்றோம் என்று.பேச்சின் மூலமான பயிற்றுவிப்பைவிட முன்மாதிரியின் மூலமான பயிற்றுவிப்பே மிகப் பலமானது. அப்படியானதொரு முன்மாதிரியான பயிற்றுவிப்புத் தளமாகவும், சமூக மாற்றத்தை எழுத்தின் வழியே சீரான பாதையில் கொண்டு செல்லப் பங்காற்றி வரும் ஒரு சிறந்த தளமாகவும் நீர்மை செயற்பட்டு வருகின்றது.
நல்ல வாசிப்பு, எழுத்து மற்றும் சிந்தனைப் பழக்கங்களைச் சமூகத்தில் வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், தங்களது சொந்தப் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு இலாப நோக்கமற்ற முயற்சியாகவும், ஏற்பாட்டுத் தளமாகவும் நீர்மை செயற்பட்டு வருகின்றது. NEERMAI,இது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள நோக்கம்தான் என்ன? இங்கு எழுத்தாளர்களாக இருப்பவர்களின் பங்களிப்பு என்ன? இதனைச் சமூக மட்டத்தில் அறியப்படுத்தி, பயன்பட வைப்பதன் அவசியம் என்ன? இதன் மூலமான சமூக மாற்றம் ஏன் முக்கியமானது? இதனைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதன் உன்னதமான எண்ணம் என்ன?ஒரு வாசிப்பாளராக, ஒரு எழுத்தாளராக, ஒரு தன்னார்வலராக நாம் இக்கேள்விகள் குறித்து ஆழமாகச் சிந்தித்து, அவற்றை விளங்கி, அதற்கேற்பச் செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.
இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில், தேவையற்ற அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு, தொடர்ச்சியாகக் குறுகிய காணொளிகளான Reels பார்ப்பது, தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்துவது போன்றவை மனிதர்களின் கவனம், சிந்தனை மற்றும் மனநலப் பழக்கவழக்கங்களில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.இதற்கு மாற்றாக, மக்கள் மத்தியில் வாசிக்கவும், எழுதவும், சிந்திக்கவும், தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் ஒரு சிறந்த தளத்தை உருவாக்க வேண்டும் என்பதே நீர்மையின் அடிப்படை நோக்கமாகும்.
அந்த வகையில், 2019 மே முதலாம் திகதி இலங்கையைச் சார்ந்த சுயாதீன இணையத்தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட நீர்மை, வாசிப்பு, எழுத்து, படைப்பாற்றல், அறிவுப் பகிர்வு, அனுபவங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் சிறந்த தளமாக உருவாக்கப்பட்டு, ஏழு வருடங்களுக்கு மேலாகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.
நீர்மையின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று, மொழி வேறுபாடின்றி எழுத்தாளர்களுக்கு இடமளிப்பதாகும். இங்கு எழுத்தாளராக இணைவதன் மூலம் தனிப்பட்ட எழுத்தாளர் சுயவிவரத்தை உருவாக்குதல், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்ற படைப்புகளை வெளியிடுதல், வாசகர்களைப் பெற்றுக்கொள்ளுதல், பிற எழுத்தாளர்களைப் பின்தொடர்தல், வாசகர்களிடமிருந்து கருத்துக்களையும் ஊக்கத்தையும் பெற்றுக்கொள்ளுதல், தமது படைப்புகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல், எழுத்துப் பங்களிப்புக்கான அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல், மேலும் தமது படைப்புகளைப் புத்தகமாக வெளியிடுதல் போன்ற வாய்ப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
மேலும், இன்றைய சூழ்நிலையில் பலர் தங்களது அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரத் தேவைகளிலும் கவனம் செலுத்துவது இயல்பானதொன்றாகும். இருப்பினும், பணத்தைத் தாண்டியும் சமூகத்திற்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் ஏதாவது ஒரு நல்ல பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உன்னதமான எண்ணத்துடன் தமது முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நீர்மை தளம் என்றும் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியதாகும்.
நீர்மையின் மென்மேலான வளர்ச்சிக்கும் அதன் நோக்கங்களை அடைவதற்கும் எமது பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவது ஒவ்வொருவரதும் கடமையும் பொறுப்புமாகும். அதுமட்டுமன்றி, நீர்மையின் இத்தகைய முயற்சிகளுக்கு எமது அன்பான ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம்.
நீர்மையின் இலட்சியமான “நல்ல வாசிப்பு, நல்ல எழுத்து, நல்லதொரு சமூகம்” என்பதற்கிணங்க, நீர்மையூடான எழுத்தின் வழியே சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தில் எமது பங்களிப்பையும் ஆதரவையும் நல்குவோம்.
வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது. ஒவ்வொரு பூரணமான மனிதனின் வாயிலாகவும் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவராலும் முடியும். இளம் சந்ததியினரிடையே படிப்படியாக அழிந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் வளர்ப்பதற்கான முயற்சியை எம்மிடமிருந்தே ஆரம்பிப்போம். நாம் அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து, வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் எழுத்தின் மீதான ஈடுபாட்டையும் வளர்த்து, சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.
This writing is the work of Kobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing