மிளகு வடை (Pepper Vada)

0
1666

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்

மிளகு – 1 டீஸ்பூன்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

நன்மைகள்:  மிளகு வடையில் உள்ள மிளகு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. வாய்வைக் கட்டுப்படுத்துகிறது.

Pepper Vada

செய்முறை:

  • உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.
  • மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் உளுத்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
  • எல்லா மாவையும் இப்படியே பொரித்தெடுக்கவும். பின்னர், மீண்டும் 4 அல்லது 5 பொரித்த வடைகளை எண்ணையில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். 
  • ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும்.  வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, அரை வேக்காடாகப் பொரித்தெடுக்கவும்.  
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments