மௌனம் கலைப்போம் – வன்முறையற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவோம்
வன்முறை என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; அதைக்கண்டு அஞ்சி ஒதுங்குவது நமது இயலாமை; அந்தச் சுவர்களை உடைத்தெறிந்து நாம் எழுவதே நமது இலட்சியம்! மௌனம் கலைப்போம், வன்முறையற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவோம்.”
வன்முறை செய்பவர்கள் எப்போதுமே பலமானவர்கள் அல்ல; மாறாக அவர்கள் உள்ளுக்குள் கொண்டிருக்கும் பயத்தையும் பலவீனத்தையும் பிறர் மீது கட்டாயமாகத் திணிக்க முயல்கிறார்கள். வன்முறைகள் எப்போதும் பலவீனமான சமூகத்தையும் பலவீனமான நாட்டையுமே உருவாக்கும். எனவே வன்முறைகளை ஒழித்து வன்முறையற்ற நாட்டை உருவாக்குவதன் மூலமே பலமான சமூகத்தையும் பலமான இலங்கையையும் எம்மால் கட்டமைக்க முடியும்.
டொமினிக்கன் குடியரசை (Dominican Republic) 1930 முதல் 1961 வரை சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ (Rafael Trujillo) கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தார். அவரின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த மிராபல் சகோதரிகள் மூவரும் 1960-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் திகதி சர்வாதிகாரியின் ஆட்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அநீதிக்கு எதிராகப் போராடிய அந்தப் பெண்களின் தியாகம் வீண்போகவில்லை. அவர்களின் தியாகம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி, சர்வாதிகாரத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வித்திட்டது.
நவம்பர் – 25 (International Day for the Elimination of Violence Against Women) பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமாக ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இத்தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை எடுத்துநோக்குவோமானால் இத்தினம் நவம்பர் – 25 அன்று அனுஷ்டிக்கப்படுவதற்குப் பின்னால் ஒரு சோகமான மற்றும் வீரமிக்க வரலாறு உள்ளது.
டொமினிக்கன் குடியரசை (Dominican Republic) 1930 முதல் 1961 வரை சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ (Rafael Trujillo) கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தார். அவரின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த மிராபல் சகோதரிகள் மூவரும் 1960-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் திகதி சர்வாதிகாரியின் ஆட்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அநீதிக்கு எதிராகப் போராடிய அந்தப் பெண்களின் தியாகம் வீண்போகவில்லை. அவர்களின் தியாகம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி, சர்வாதிகாரத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வித்திட்டது.
நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம் வரை உலகம் முழுவதும் “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள்” (16 Days of Activism) கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றைய இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இன்னும் தீராத ஒரு சமூகப் பிரச்சினையாக நீடித்து வருவதை நாம் கண்கூடாகக் காணலாம். குடும்பம், பொதுவெளி, பணியிடம், பொதுப்போக்குவரத்து என இணையவழித் துன்புறுத்தல்கள் வரை இதன் நீட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இங்கு வன்முறை என்பது எவ்வாறான வடிவங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றது என்பதை நோக்குவோமேயானால்:
●பாலியல் ரீதியான வன்முறைகள் (Sexual Violence): பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல்கள்.
●உளவியல் மற்றும் உணர்வு ரீதியான வன்முறைகள் (Psychological & Emotional Abuse): வார்த்தைகளால் காயப்படுத்துதல், அவமானப்படுத்துதல், சுயமரியாதையைக் குலைத்தல், மிரட்டுதல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குதல் (உடல் காயங்களை விட இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது).
● பொருளாதார ரீதியான வன்முறைகள் (Economic Abuse): பெண்கள் கல்வி கற்பதையோ அல்லது வேலைக்குச் செல்வதையோ தடுத்தல், அவர்கள் உழைக்கும் பணத்தைப் பறித்துக்கொள்ளுதல் அல்லது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடப் பணம் கொடுக்காமல் நிதி ரீதியாக முடக்கி வைத்தல்.
● குடும்ப வன்முறை (Domestic Violence): பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய வீட்டுக்குள்ளேயே கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்படும் உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகள்.
●இணையவழி வன்முறைகள் (Cyber / Digital Violence): சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புதல், தனிப்பட்ட புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் மற்றும் இணையவழிப் பின்தொடர்தல் (Cyberstalking).
• சமூக மற்றும் கலாசார ரீதியான அடக்குமுறைகள் (Social & Cultural Restrictions): பாரம்பரியம் மற்றும் கௌரவம் என்ற பெயரில் பெண்களின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் முடிவு எடுக்கும் உரிமையைப் பறித்தல்.
இப்படியான கோணங்களில் இவை இன்னும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட சில வடிவங்கள் சிறுமிகள், யுவதிகளை நோக்கித் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. அதாவது பலவீனமான குடும்பப் பின்னணி மற்றும் எவ்வளவு உறுதியாக, பலமாக இருக்கக்கூடியவர்களையும் கூட தமது சொற்திறமையாலும், பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமும் தம் வலையில் வீழ்த்தி ஏமாற்றி தம் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள் சில பலவீனமானவர்கள்.
உண்மையில் இவர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பல இழிவான வார்த்தைகள் இருந்தும் அவற்றை விட்டுவிட்டு இங்கு “பலவீனமானவர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்தக் காரணம், வன்முறையாளர்கள் என்னும் பலவீனமானவர்கள் என்ற வார்த்தைக்கு மிகச் சரியான பொருத்தம் உடையவர்கள். அவர்கள் தம்மை பலமானவர்கள் என்றோ பெரியவர்கள் என்றோ தம்மை உயர்த்தி எண்ணிக்கொள்ளலாம்; ஆனால் அவர்களே அறியாத மிகப்பெரிய உண்மை அவர்கள் மிகப் பலவீனமானவர்கள் என்பதேயாகும்.
இத்தகைய வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து விடுபட்டு பாதுகாப்பையும் சமஉரிமையையும் பெறுவதற்கு ஆக்கபூர்வமான மாற்றங்கள் அவசியமாகின்றன. முதலாவது பெண்களுக்குத் தரமான கல்வியும் பொருளாதார சுயசார்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுமிகள், யுவதிகளுக்கு பாலியல் கல்வி, விழிப்புணர்வுச் செயல்திட்டம், சட்டப்பாதுகாப்பு, அவசர உதவி எண்கள் போன்றவை பற்றி அறிவூட்டப்பட வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் ஏற்படும்போது நாடக்கூடிய இலங்கையின் முக்கிய அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டியது அவசியமாகும்:
பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான முக்கிய அவசர உதவி எண்கள் (இலங்கை):
1938 — மகளிர் உதவி எண் (பெண்கள் விவகார அமைச்சின் தேசிய மகளிர் உதவிச் சேவை).
1929 — தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) அவசர உதவி எண்.
119 — பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு.
109 — பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் விசேட உதவி எண்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளநல ஆலோசனை குடும்ப மட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் முடங்காமல், மனதளவில் உடையாமல் அவற்றில் மிக உயரிய நிலையை அடைய வேண்டும். அண்மையில் வெளியான ‘யூபோரியா’ (Euphoria) திரைப்படத்தின் கதாநாயகி சாரா கதாபாத்திரம் எவ்வாறு சவால்களைத் தாண்டி தன் இலட்சியப் பயணத்தை மேற்கொண்டாரோ, அப்படியே ஒவ்வொரு பெண்ணும் எழுச்சியடைய வேண்டும்.
ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்களின் மௌனத்தின் பின்னும் சொல்லொணாத் துயரம் மறைக்கப்பட்டிருக்கும். குடும்ப கௌரவம் என்ற விலங்கு, சமூக அவமானத்திற்கும் குடும்ப கௌரவப் பாதிப்பு காரணமாகவும் பயம் காரணமாகவும் அஞ்சி பாதிக்கப்பட்ட பெண்கள் உண்மையை மறைப்பது, தற்கொலை முடிவுக்கு வருதல், மன அழுத்தத்திற்கு உள்ளாதல், தம்மை உணர்வுகள் ரீதியாக முடக்குதல், கல்வியை இடைநிறுத்தல், குடும்பப் பெண்கள் சுயாதீனமான வருமானம் இல்லாததால் வன்முறைகளைச் சகித்து வாழும் நிலை.
இதற்கு அடுத்ததாக சமூகத்தின் பாராமுகம்: அடுத்தவர் வீட்டுப் பிரச்சினை என ஒதுங்கிப் போகும் சமூக மனநிலை மற்றும் சட்ட நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை இன்னும் மோசமான நிலைமைக்குக் கொண்டு செல்லுகின்றது.
மௌனத்தைக் கலைத்து முன்னெடுக்க வேண்டியவைகளாக வீட்டிலிருந்து தொடங்கும் மாற்றம்:ஆண்பிள்ளைகளுக்குப் பெண்களை மதிக்கும் பண்பையும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பையும் கற்றுக்கொடுத்தல். மாற்றமானது ஒவ்வொரு தனிநபரிடமிருந்தே துவங்கி சமூகத்திற்கான, நாட்டிற்கான மாற்றமாக உருவாகும்.
பெண்ணுரிமை என்பது யாருடைய பிச்சையோ பரிசோ அல்ல; அது மனிதப்பிறவியாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணின் அடிப்படைச் சொத்து.
“நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”
என்ற வாக்கிற்கு இணங்க ஒவ்வொரு பெண்களும் எதற்கும் அஞ்சாமல் துணிந்தெழ வேண்டும். வெறும் அனுதாபங்களோடு நின்றுவிடாமல் ஒவ்வொருவரும் மௌனம் கலைத்து குரல் கொடுப்பதோடு மட்டும் நில்லாமல் சிந்தனை ரீதியாக ஆழமான மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.
இம்மாற்றமானது வன்முறையற்ற வளமான நாட்டை நோக்கிய அழகிய நகர்வாக இருக்கும். மௌனம் கலைத்து சிந்தித்து வன்முறையற்ற அழகிய இலங்கையைக் கட்டியெழுப்பச் செயலாற்றுவோம்.
This writing is the work of Kobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing