த்ரில்லர்

கடைசி நொடி பகுதி 1

சஹானா அவள்தான் இந்த கதையின் கதாநாயகி 

எப்பொழுதும் சஹானா அவளைப் பற்றி நினைப்பது என்னவென்றால் அவள் அதிஷ்டமிழந்தவள் இதுவரையில் அவள் வாழ்க்கையில் எதுவித சந்தோஷங்களுக்கும் இடமிருந்ததே இல்லை எந்த கெட்ட விஷயங்களுக்கும் அவளது துரதிஷ்டம்தான் காரணமென அவளை சுற்றி இருந்தவர்களின் கைகள் அவள் பக்கமே நீண்டன இதனாலயே எவ்வித நல்ல,கெட்ட காரியங்களிலும் கலந்து கொள்ள மாட்டாள்

ஆரம்பத்துல அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் போக போக அதுவே அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது

காலங்கள் கடந்தன  இப்பொழுது அவளொரு டீன்ஏஜ் கேர்ள் வேலைக்கு செல்லும் ஒரு பெண் ஆனால் அவள் அதிஷ்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை

அன்று டிசம்பர் 20 ஊரே பரபரப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகி கொண்டு இருந்தது ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது ப(b)ஸாரே ரொம்ப பி(b)ஸியாக இருந்தது

சரியாக கிறிஸ்துமஸ்ஸிற்கு 4 நாட்களே இருந்த நிலையில் சஹானாவின் ஆஃபிஸில் சிறியதொரு சுற்றுலா அர்ரெஞ்ச் செய்திருந்தனர் இந்த தடவை அவளும் அதில் கலந்து கொண்டிருந்தாள்

பல நாள் துன்பங்களுக்குப் பின் இது அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என கருதி நன்றாக எஞ்ஜாய் செய்ய காத்திருந்தாள் பயணமும் தொடங்கியது.தீடிரென சடர்ன் ஆ ஒரு ப்(b)ரேக் வேறெதுவுமில்லை வாகனத்தின் டயர்தான் பஞ்சர் அவளது அதிஷ்டம் வேலை செய்கின்றது என மனதுக்குள் எண்ணி இலேசாக சிரித்துக்கொண்டாள்.வாகனத்தை விட்டு எல்லோரும் கீழே இறங்கினர்,அது ஒரு ஒற்றையடி காட்டுப்பாதை அவ்வழியில் வாகன போக்குவரத்து அவ்வளவாக இல்லை மணிக்கு ஒரு அல்லது நாளுக்கு ஒரு வண்டிதான் செல்லும் மணி மதியம்  2 தாண்டியது எப்படியும் உதவி கிடைக்க விடியும் வரை காத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அடுத்த வண்டி வரும் வரை காத்திருக்க வேண்டும்.எல்லோரும் அப்பாதை ஓரமே இரவு தங்கலாம் என முடிவெடுக்க அதற்கு உண்டான டெண்ட் களை அமைக்க ஆரம்பித்தனர்.

சஹானா சுற்றிப் பார்த்தாள் “அடடே! வீவ் எவ்வளவு சூப்பரா இருக்கு இத கேப்ச்சர் பன்னா நல்லா இருக்குமே” என்று மனதுக்குள் எண்ணிய படி நண்பர்களிடம் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து தனியாக என்ஜாய் பண்ண ஆரம்பித்தால்.அப்படியே மெதுவாக காட்டிற்குள் சென்றாள் மிகவும் அமைதியான சூழல், எங்கும் சுற்றி பச்சை நிறம், பறவைகளின் சப்தம் மியூஸிக் அல்லா மெல்லிசையாக; சற்று நேரம் அவளை அவளே மெய்மறந்து இயற்கையொடு இயற்கையாய் கலந்து விட்டாள். சற்று தூரம் சென்று திரம்பியவளுக்கு வந்த வழி எதுவென்றே மறந்து விட்டது சுற்றி எல்லாமும் ஒரே போல் தோற்றமளித்தது.மணி 5 ஐ தாண்டியது இன்னும் சற்று நேரத்தில் இருட்டி விடும் எப்படியாவது வெளியேற வேண்டுமென வழியைத்தேட ஆரம்பித்தாள் ஆனால் அவளால் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை.சூரியன் மறைந்து மெது மெதுவாக நிலா எட்டிப்பார்த்தது வானத்தில் சோர்ந்து போன அவள் காட்டினுள்ளே தங்க முடிவெடுத்தால்.சற்று தூரத்தில் ஒரு பாலடைந்த கட்டிடம் அவள் கண்ணுக்கு தெரிந்தது இதுதான் தங்க சரியான இடம் என நினைத்தவள் அக்கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்;உள்ளே மெதுவாக அடியெடுத்து வைத்தாள்;உள்ளே சென்றவளுக்கு பெரும் ஆச்சரியம்!அவள் உள்ளே பார்த்த காட்சி அப்படி

அது பாலடைந்த கட்டிடம் அல்ல அங்கே அவள் பல மனிதர்களை பார்த்தாள் ஆண்,பெண் என இருபாலாரும் அங்கிருந்தனர் அது பார்க்க ஒரு ஹாஸ்டல்  அமைப்பில் இருந்தது மற்றும் அங்கிருந்த அனைவரும் வெளிநாட்டவர்கள்.அன்று அங்கே அவள் பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது

                                         தொடரும்……..

This writing is the work of Shifa Farwin, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Shifa Farwin

SFShifa Farwin28 May 2025

கடைசி நொடி பகுதி 4

துள்ளி எழுந்தாள், ஆமாம் அவள் கண்ட அத்தனை காட்சிகளும் கனவு. வியர்வை அருவி போல் அவள் உடலில் இருந்து ஓடிக்கொண்டிருந்தது.கட்டிலை விட்டு இறங்கி வந்து பயத்துடன் அவளது அலுமாரியை களைத்துக் கொண்டிருந்தாள், ஏதோ ஒன்றை தேடி;…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin20 Mar 2025

கடைசி நொடி பகுதி 3

நாட்கள் நகர்கின்றன சஹானாவின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை எவ்வளவு தூங்க முயன்றும் ஒரு நொடி கூட கண்ணை மூட முடியவில்லை அந்தப் பெண்ணின் அலறல் இன்னும் அவள் காதுகளில்…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin13 Mar 2025

காரிகை கனவு

  சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்,நிஜத்தின் சிதறலில் விழுந்திடும் சிறு துளி நிழல்கள் நினைவுகளைத் தாண்டி கொண்டு செல்லும் நிலையில்லா நிழல்களில் சிக்கித் திணறும் சிறு விம்பமாய்,நினைவுகளை தேடி கனவுலகில் மிதக்கிறேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…

சோகம்1 min read
SFShifa Farwin1 Mar 2025

கடைசி நொடி பகுதி 2

அவள் அங்கே பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது.எங்கும் அழும் சத்தங்கள்,அலறல்களால் அந்த கட்டிடம் முழுதாய் மூடப்பட்டிருந்தது.சற்று நேரம் சஹானாவிற்கு எதுவுமே புரியவில்லை கனவா நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்தாள். தரையில்,சுவரில் என பல இடங்களில்…

த்ரில்லர்1 min read

More in த்ரில்லர்

See all