உறவு

காணாமல் போன காதலி …

கண்ணுக்குள்ள இருந்தவளை
காணாம தொலைச்சேனே!!!
கைப்பிடிச்சு திருஞ்சவள
கை கூப்பி தேடுறனே !
நெஞ்செல்லாம் நிறைஞ்சவள
விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே !
தேடி சலிச்சுப்புட்டேன்
திசையேதும் தெரியலையே …

நின்னா அவ நினைப்பு
நிக்காம சுத்துதுங்க ..
நடந்தா அவ நினைப்பு
நிழலா என்னை தொடருதுங்க …
படுத்தா அவ நினைப்பு
கனவா வந்து ஓடுதுங்க …
கரையேதும் தெரியாம
கண் கலங்கி நிக்கிறேங்க …

காலம் கடத்துறேன்னு
கழட்டி விட்டு போனாளோ ?
காசு பணம் தேடி
கடல் கடந்து போனாளோ ?
கல்யாணம் கட்டிக்கிட்டு
கணவனோடு போனாளோ ?
எதுவும் புரியலையே !
என்னாச்சு தெரியலையே ???…

தெரிஞ்சவங்க சொல்லுங்களே
தினம்தோறும் சகுறேன்னு !
தின்னா  இறங்கவில்லை
திரை மூடி தூங்கவில்லை
தினமும் அவ நெனப்பு
தீயா எரிக்குதுன்னு …

மனசெல்லாம் நெறைஞ்சவள
மறக்கத்தான் முடியலையே !
மண்ணுக்குள்ள போற வரை
மனசுக்குள்ள நிப்பாளே !
மரணமும் வந்து அவளை
மறக்கத்தான் செய்திடுமோ ???…

சேர்ந்து சாவமுன்னு
சத்தியம் தான் செஞ்சாளே !
சத்தியமும் செத்துத்தான்
போயிடுச்சோ ?
போனவளும் வருவாளோ
போகும் உசுர பிடிப்பாளோ???…

பிடிக்காம போயிருந்தா
பிழை ஏதும் இல்லையடி? .
பிள்ளைக்கு பேரு வச்சு
பிறவிப்பயன் தந்திடுடி !…

பிள்ளையா இருந்துன்ன
பிரியமா பார்த்திடுவேன்
பின்னும் ஓர் பிறவிக்கொண்டு
பிரியாம சேர்ந்திடுவேன் …

இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
கோவை

This writing is the work of மகோ, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from மகோ

மகோ4 Nov 2022

உன்னை கேள்

ஓயாது நீ போடும் சண்டைகளால் உறங்காது நான் தொலைக்கும் இரவுகள் ஏராளம் ... எதுவும் செய்யாதோர் எல்லாம் உயர்வாய் தோன்றும் உனக்கு எல்லாம் செய்த நான் மட்டும் தவறாய் போனதும் எப்படியோ ???... உண்மையாய் உன்னை…

உறவு1 min read
மகோ28 Oct 2021

வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை

கேள்விகளால் நிறைந்தது தான் இந்த உலகம் ... உலகமே இப்படியிருக்க நம் வாழ்க்கை மட்டும் என்ன விதிவிலக்கா ???... நம்மை சுற்றி ஆயிரம் கேள்விகள் ... நமக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் ... அந்த ஆயிரத்தில் பதில்…

இயற்கை1 min read
மகோ12 Oct 2021

எது வரை யார் …

எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில்  ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…

இயற்கை1 min read
மகோ12 Oct 2021

வலிகளை மறைக்கப்பழகு

வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…

சோகம்1 min read

More in உறவு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x