மொபைல் தொழில்நுட்பம்

1G, 2G, 3G, 4G என்றால்……..

Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.
1G network 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced mobil phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும் sms போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
 
2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும்cdma (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
 
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
 
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 
4G Network: 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV
Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.
1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து வேறு இடத்திலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும்.
 
2.கட்டமைப்பு (Network)
 
2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, webborsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம்Voice vip ip என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்…LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி…ரயில் பாதை மட்டும் போதும்… ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).
 
3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
ஏதோ ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)

 

This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from GOBIKRISHNA D

GOBIKRISHNA D22 Oct 2026

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து துன்பங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானால், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அல்லது…

ஆய்வுகள்9 min read
GOBIKRISHNA D23 Feb 2026

மட்டக்களப்பு கடலில் மறைந்துள்ள வரலாற்றின் ஒரு அங்கம்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் HMS Hermes 1942 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தனது மிகருக்கமான கட்டத்திலிருந்தது. இத்தேர்க்கையின் முக்கியமான ஒரு பகுதி — இறுதிப் போரிடுதல் நிலையங்களை பாதுகாத்தல். இன்றைய இலங்கை…

ஆய்வுகள்3 min read
GOBIKRISHNA D22 Feb 2026

⚠️ மொபைல் – மறைமுக ஆபத்து

“என் குழந்தை ரொம்ப ஸ்மார்ட்… மொபைல் அவளே ஓபன் பண்ணி யூஸ் பண்ணிடுவாள்!”இது பெருமையாகச் சொல்லப்படும் ஒரு வசனம்.ஆனால் ஒரு உண்மை —மொபைலை பயன்படுத்தத் தெரிந்தது புத்திசாலித்தனம் அல்ல.அதை கட்டுப்படுத்தத் தெரிந்ததே உண்மையான அறிவு. 🔹…

அறிவியல்2 min read
GOBIKRISHNA D22 Feb 2026

அபுதாபியில் இந்து கோவில் கட்டிய முஸ்லிம் அரசர்

மத்திய கிழக்கின் பாலைவன நாட்டான ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஒரு வரலாற்றுச் சம்பவம் அமைதியாக நிகழ்ந்தது. அபுதாபி அரசின் தலைமையில், அதிபர் ஷேக் முகமது பின் ஸாயித் அல் நஹ்யான் அவர்களின் அனுமதியுடன், அபுதாபியில்…

பொதுவானவை2 min read

More in மொபைல் தொழில்நுட்பம்

See all