அறிந்து கொள்வோம்

ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு #துஆ செய்த பிறகும் அந்த விடயத்தை பற்றிய மனக்கவலை ஏன் தொடர்கிறது?

ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு #துஆ செய்த பிறகும் அந்த விடயத்தை பற்றிய மனக்கவலை ஏன் தொடர்கிறது?

நீங்கள் தொழுகிறீர்கள்… துஆ செய்கிறீர்கள்… அல்லாஹ்விடம் உங்கள் கவலைகளை எல்லாம் சொல்லுகிறீர்கள்… ஆனால் தொழுகைக்குப் பிறகும் அதே கவலைகள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றனவா?

அப்படியென்றால் உங்கள் ஈமான் பலவீனமாக இருக்கிறதா?

இல்லை!

இந்த விஷயத்தை நாம் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.தொடர்ந்தும் வாசியுங்கள்!

நம்மில் பலர் ஒரு ஆழ்ந்த குழப்பத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நான் அல்லாஹ்வை நம்புகிறேன் என்றால் எனக்கு ஏன் பயம் வர வேண்டும்?

நான் துஆ செய்கிறேன் என்றால் ஏன் இன்னும் அதே விஷயத்துக்கு அழ வேண்டும்?

நான் தவக்குல் வைத்திருக்கிறேன் என்றால் ஏன் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட வேண்டும்?

சில நேரங்களில் இந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களைத் தேடுவதற்குப் பதிலாக, நம்முடைய நியாயமான உணர்வுகளுக்காக நம்மையே குற்றம் சொல்லத் தொடங்குகிறோம்.

ஆனால், உளவியல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் இது என்ன உண்மையைச் சொல்கிறது?

இறைநம்பிக்கை அதிகமாக இருப்பவர்களுக்கும் கவலை, சோகம் அல்லது மன உளைச்சல் ஏற்படலாம். அது அவருடைய ஈமான் குறைவாக இருக்கிறது என்பதற்கான ஆதாரம் அல்ல.

மனிதர்களாகிய நமக்கு பயம், சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் இயல்பாகவே ஏற்படக்கூடியவை. நம்முடைய மூளை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கிறது. சில நேரங்களில் ஒரு பிரச்சனை முடிந்த பிறகும், அதைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம். இதனை உளவியலில் Rumination என்று அழைக்கிறோம்.

இங்கே நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது:

* துஆ செய்வது உங்கள் ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதி.

* உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வது உங்கள் உளவியல் நலனின் ஒரு பகுதி.

இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல மாறாக இரண்டும் நம் நல்வாழ்விற்குத் தேவையானவையே.

அல்குர்ஆன் நமக்கு அழகிய வழிகாட்டலைத் தருகிறது. யூசுப் (அலை) அவர்களைப் பிரிந்து வாடிய நபி யஃகூப் (அலை) அவர்கள், தங்களுடைய துயரத்தையும் கவலையையும் அல்லாஹ்விடம் வெளிப்படுத்தினார்கள்.

அல்குர்ஆன் 12:86-ல் அவர்கள் கூறுகிறார்கள்:

“எனது துயரத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்.”

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

துயரத்தை உணர்வதும், அதை அல்லாஹ்விடம் வெளிப்படுத்துவதும் மனித இயல்புக்கு முரணானவை அல்ல. நம்பிக்கை கொண்டிருப்பது உணர்வுகளே இல்லாமல் வாழ்வது என்று அர்த்தமல்ல …

மனக்கவலை ஏற்படும்போது என்ன செய்யலாம்?

முதலாவது நீங்கள் செய்ய வேண்டியது எது ?

உங்கள் உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள்.

“நான் ஏன் இப்படி உணர்கிறேன்?” என்று உங்களைத் தண்டிக்காதீர்கள். “ஆம், இப்போது நான் கவலையாக இருக்கிறேன்” என்று உங்களை நீங்களே அன்போடு அடையாளம் காணுங்கள்.

அடுத்த விஷயம் என்னவென்றால், உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதைச் செய்யுங்கள்.

உங்களால் மாற்றக்கூடிய விஷயங்களில் முயற்சி செய்யுங்கள். முடியாதவற்றை மீண்டும் மீண்டும் சிந்தித்து உங்களைச் சோர்வடையச் செய்யாதீர்கள்.

அடுத்த முக்கியமான விஷயம் என்னவென்றால் உதவி கேட்கத் தயங்காதீர்கள்.

அதாவது, உங்கள் கவலை நீண்ட நாட்களாகத் தொடர்ந்தால், அது உங்கள் தூக்கம், வேலை, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றைப் பாதித்தால், தயங்காமல் ஒரு Mental Health Professional-ஐ அணுகுங்கள். உதவி பெறுவது நீங்கள் உங்களை நேசிப்பதன் அடையாளம்.

நீங்கள் அல்லாஹ்வை நம்புவதால் ஒருபோதும் அழக்கூடாது என்பதில்லை. நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும்போதும் இயல்பான மனித உணர்வுகளை அனுபவிக்கலாம்.
துஆ செய்யுங்கள். முயற்சி செய்யுங்கள். உங்களைப் புரிந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் உதவியும் நாடுங்கள். உங்கள் மனநலத்தைப் பாதுகாப்பதும் உங்களைப் பற்றிய ஒரு பொறுப்புதான்.

இந்தத் பதிவு பலருக்குப் பயனுள்ளதாக இருக்கலாம், பகிர்ந்துகொள்ளுங்கள்!

#IslamicPsychology #MentalHealthTamil #TamilPsychology #இஸ்லாமியஉளவியல் #மனநலம் #Tawakkul #EmotionalWellbeing #AsnaSueetha

This writing is the work of Asna Sueetha, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Asna Sueetha

More in அறிந்து கொள்வோம்

See all