அழுவது பலவீனமா?

அழுகை ஒரு பலவீனமா ?
அழுகை – ஓர் உளவியல் பார்வை
பகுதி 1.
நம்மில் சிலர் சிறிய விடயங்களுக்கு கூட அழுவதை பார்த்திருப்போம்
‘அழுது சமாளிக்கா …’
‘பொய்கி அழுற ‘
‘எல்லாத்துக்கும் அழுறது அவங்கடே weak point ‘
‘ஆம்புளே புள்ளைகள் அழப்போடாது’
இவ்வாறு பல பேர் பலவகையாக அழுகை பற்றி சொல்வதை கேட்டிருப்போம் .
மனிதர்களை பொறுத்தவரையில் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்படலாம் .இது பொதுவாக ஒரு இயல்பான அம்சமும் கூட. “உணர்ச்சிகளை வெளியிடுவதற்கும் கடினமான சூழ்நிலைகளைச் செயலாக்குவதற்கும் அழுகை ஒரு சிறந்த வழியாகும்” என்று NY Presbyterian மருத்துவமனை மனநல மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் கெயில் சால்ட்ஸ் கூறுகிறார்.அழுகை உணர்வுகளை சமாளிக்கும் ஒரு கருவியாக தொழில்பட்டாலும் எல்லோரும் அதனை ஒரே மாதிரியாக கையாளுவது இல்லை .சிலர் சிறிய விஷயங்களுக்கு கூட அதிகம் அழக்கூடியவர்கள்.
சில வேளைகளில் ஏற்படும் தொடர் கவலை உணர்ச்சி ரீதியாக நம்மை பாதிக்கலாம். இதனால் சில உணர்வுகளை சரியான முறையில் செயலாக்குவது கடினமாக இருக்கலாம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் நம்மை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ச்சியாக அழும் நிலை ஏற்படலாம்.
ஏன் இவ்வாறான நிலை ஏற்படுகிறது ?
.
நீங்கள் சமீபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி அழுகிறவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்கியிருந்தால், நீங்கள் வழக்கமானதை விட அடிக்கடி அழுவதைக் காணலாம்.mirror neurons. மூளையின் பகுதிகள் நாம் உணர்ச்சிவசப்படும்போது உணர்ச்சிவசப்படுவதைப் போல, ஒருவர் உணர்ச்சிவசப்படுவதைப் பார்க்கும்போது செயல்படுத்தப்படுகிறது. இதனால் மற்றவர்கள் அழும் போது நமக்கும் அழுகை ஏற்படலாம்.
வாழ்நாள் முழுவதும், கற்றுக்கொண்ட அனுபவங்கள் , கசப்பான நினைவுகள் சில தருணங்கள், பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றை நீங்கள் சோகத்துடன் அல்லது அழுகையுடன் தொடர்புபடுத்தினால், உங்கள் உடல் அதைப் பதிவுசெய்து, அந்த பாடல் / காட்சி ஒளிபரப்பாகும் போது நீங்கள் அழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் சிலர் பாடல் / படம் பார்க்கும்/ கேட்கும் போது அழுகிறார்கள். .
Neuroticism என்பது உணர்ச்சிக் கோளாறுகளுடன் தொடர்புடைய ஒரு குணாதிசயக் காரணியாகும்.மற்றவர்களை விட ஒருவர் அதிகமாக உணர்ச்சி நிலையை அனுபவிப்பதை குறிக்கும்.. “நியூரோடிசிசம் அதிகம் உள்ள பல நபர்கள் சோகம் போன்ற வலுவான உணர்ச்சிகளைத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள்,” என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது..
மனச்சோர்வு என்பது அசாதாரணமான அழுகைக்கு வழிவகுக்கும் சோகம் அல்லது உணர்வின்மை போன்ற உணர்வுகளால் குறிக்கப்படும் ஒரு மனநிலைக் கோளாறு ஆகும்.மன அழுத்தம் சோர்வை ஏற்படுத்துகிறது, இது சுய-கட்டுப்பாட்டு திறனைக் குறைக்கிறது. இது நம்மை உணர்ச்சி ரீதியிலான சோர்வுக்கு ஆளாக்குகிறது, இது நம்மை விரைவாக அழ வைக்கும்.
கவலைக் கோளாறால் அதிகப்படியான கவலை, எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் .அழுகை ஏற்படுகிறது. அமெரிக்காவின் கவலை மற்றும் மனச்சோர்வு சங்கத்தின் கூற்றுப்படி, கவலைக் கோளாறுகள் அமெரிக்காவில் மிகவும் பொதுவான மனநல நோயாகும், இது 18% க்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது.
தொடரும் .
Asna Sueetha Faizal
This writing is the work of Asna Sueetha, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing





