கட்டுரைகள்

ஆங்கிலம் கற்பிக்கும் புதிய பரிமாணம்! ஆளுமையை வளர்க்கும் தனித்துவமான பயணம்! New Institute of English (NIE) Located in Manipay road, Anaikoddai, Jaffna, Sri Lanka.

மொழி என்பது வெறும் தொடர்பாடலுக்கான கருவி மட்டுமல்ல; அது ஒருவரின் அறிவையும் ஆளுமையையும் உலகத்துடனான தொடர்பையும் விரிவுபடுத்தும் ஒரு திறவுகோலாகும். அந்த வகையில், இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழியறிவானது கல்வி, தொழில் வாய்ப்புகள், சமூகத் தொடர்பாடல் மற்றும் சர்வதேச வாய்ப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் நாம் பிரகாசிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றாகத் திகழ்கின்றது.
நம்மவர்கள் மத்தியில் ஆங்கில மொழி மிகவும் கடினமானது என்ற எண்ணம் பரவலாக விதைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் ஆங்கில மொழி மிகவும் இலகுவான ஒன்றாகும். அதனை நாம் எவ்வாறு அணுகுகின்றோம்? எத்தகைய கற்றல் முறைகளைப் பின்பற்றுகின்றோம்? அதனைக் கற்றுக்கொள்வதில் எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டுகின்றோம்? நமது மொழியறிவைப் பரீட்சித்துப் பார்க்க எந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்கின்றோம்? என்பவற்றிலேயே அதன் இலகுத்தன்மை தங்கியுள்ளது.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு இலக்கண விதிகளை மனப்பாடம் செய்வதும், சொற்களைத் தனித்தனியாகக் கற்றுக்கொள்வதும் மட்டுமே போதுமானதல்ல. அன்றாட வாழ்வில் அம்மொழியை உரிய நேரத்திலும் பொருத்தமான சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திப் பழகுவதன் மூலமே அம் மொழியில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அதற்கான பொருத்தமான தளமும், நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய களமும் அவசியமாகும். வெறுமனே மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போதுமானதல்ல; அந்த ஆர்வத்தைச் சரியான வழியில் வளர்த்து, கற்றுக்கொண்டவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஒரு சிறந்த கற்றல் சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறானதொரு பொருத்தமான கற்றல் தளத்தைத் தெரிவுசெய்வதன் மூலமே மொழியறிவை மேம்படுத்துவதுடன், அம் மொழியில் சிறந்த தேர்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில், “ஆங்கிலம் கற்பிக்கும் புதிய பரிமாணம்; ஆளுமையை வளர்க்கும் தனித்துவமான பயணம்” என்ற இத்தலைப்புக்கு அமைவாக, ஆங்கில மொழியறிவை மாணவர்கள் மத்தியில் புதியதொரு கற்றல் பரிமாணத்தின் ஊடாகக் கொண்டுசெல்வதுடன், தனித்துவமான கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் செயற்பாட்டு முறைகளின் மூலம் அவர்களின் ஆளுமைத் திறன்களையும் வளர்ப்பதற்கான களத்தை அமைத்துக்கொடுத்து வருகின்றது New Institute of English (NIE).

New Institute of English (NIE) எனும் இந்நிறுவனம், இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்,  மானிப்பாய் வீதியில் ஆனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆங்கிலக் கல்வி நிலையமாகும். 2012ஆம் ஆண்டு முதல் தனது கல்விச் சேவையை முன்னெடுத்து வரும் இந்நிறுவனம், வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதுடன், அவர்களின் பேச்சாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன்களை மேம்படுத்துவதற்கான செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது.

ஒரு தனித்துவமான கற்பித்தல் அணுகுமுறையும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியரும்!
இன்றைய சூழலில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் காணப்பட்டாலும், New Institute of English (NIE) நிறுவனத்தை இக்கட்டுரையில் சிறப்பாக முன்னிலைப்படுத்துவதற்குப் பல தனித்துவமான காரணங்களும் சிறப்பம்சங்களும் உள்ளன.
“Spoken English for You in a New Way” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, ஆங்கில வாய்மொழிக் கல்வியைப் புதியதொரு கற்றல் அணுகுமுறையினூடாக மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.இக்கல்விப் பயணத்தின் பின்னணியில், அனைவராலும் அன்புடன் ‘ரமேஷ் Sir’ என அழைக்கப்படும் ஆசிரியர் ரமேஷ்குமார் அவர்களின் அர்ப்பணிப்பும் கற்பித்தல் மீதான பேரார்வமும் குறிப்பிடத்தக்கவை. அனைத்து மாணவர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றிச் சமமாக மதித்து நடத்தும் உயரிய ஆசிரியப் பண்புகளைத் தன்னகத்தே கொண்டவர். ஆங்கில மொழியின் மீதான ஆழ்ந்த ஈடுபாடும், அதனை மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வமும் இவரது கற்பித்தல் பணியில் வெளிப்படுகின்றன. வெறுமனே பாடங்களைக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு மாணவரிடமும் மறைந்திருக்கும் தனித்திறன்களைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவித்து வளர்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றார். மாணவர்கள் தயக்கமின்றித் தமது கருத்துக்களை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் ஊக்கமளிக்கும் இவரது அணுகுமுறை, இந்நிறுவனத்தின் கற்றல் பயணத்தில் முக்கியமானதொரு சிறப்பம்சமாக அமைகின்றது.

செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையும் தனித்துவமான பயிற்சிகளும்!
இந்நிறுவனத்தின் கற்றல் முறைமையானது வழமையான வகுப்பறைக் கற்பித்தலைக் கடந்து, மாணவர்களின் மொழியாற்றலையும் ஆளுமைத் திறன்களையும் ஒருங்கே வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டு மூன்று கற்றல் பிரிவுகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன.  மாணவர்கள் வகுப்பு ஆரம்பமாவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்னதாகவே வருகை தர வேண்டும். இதன் மூலம் நேர முகாமைத்துவத்தின் முக்கியத்துவமும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றது.
இங்கு பின்பற்றப்படும் மற்றுமொரு சிறப்பான நடைமுறையாக, வகுப்புகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிந்தனைப் பயிற்சியைக் குறிப்பிடலாம். வகுப்பறையில் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிந்தனைகள் மற்றும் பொன்மொழிகளில் ஒன்றை மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாசித்து, அதன் கருத்தைப் புரிந்துகொண்டு மனப்பாடம் செய்கின்றனர். வகுப்பு ஆரம்பமானதும் ஒவ்வொரு மாணவரும்  அதனை ஒப்புவிக்க வேண்டும். அவர்களின் ஒப்புவிக்கும் திறன், நினைவாற்றல் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றை ஆசிரியர் மதிப்பீடு செய்கின்றார். இச்செயற்பாடு தனிநபர் திறன்களை வளர்ப்பதுடன், மாணவர்களிடையே ஒற்றுமையையும் கூட்டாகக் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் உருவாக்குகின்றது.

அத்துடன்,  ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் Verb List பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றைச் சரியான உச்சரிப்புடன் மனப்பாடம் செய்து பயன்படுத்துவதற்கான பயிற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், இலக்கணப் பகுதிகளும் முறையாகக் கற்பிக்கப்படுவதுடன், ஒவ்வொரு கற்றல் பிரிவின் நிறைவிலும் முக்கியமான பாடப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை மீட்டுப் பார்க்கவும், தமது முன்னேற்றத்தை மதிப்பிட்டுக்கொள்ளவும் வாய்ப்புப் பெறுகின்றனர்.

இவற்றைக் கடந்து, மாணவர்கள் ஆங்கிலத்தை நடைமுறை வாழ்வில் சரளமாகப் பயன்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. ஒலிவாங்கியைப் பயன்படுத்தி மேடையில் உரையாற்றுதல், சுய அறிமுகம் (Self Introduction), விளக்கவுரை (Presentation), உடனடிப் பேச்சு (On-the-Spot Speech), பொதுமேடைப் பேச்சு (Public Speaking), கதை சொல்லுதல் (Storytelling), செவிமடுத்தல் செயற்பாடுகள் (Listening Activities), நாடகம் (Drama), பாத்திரமேற்று நடித்தல் (Role Play), நேர்முகத் தேர்வுப் பயிற்சிகள் (Interviews) Short filmஎனப் பல்வேறு செயற்பாடுகள் மாணவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தகைய பயிற்சிகள் வெறுமனே ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்பை மட்டுமன்றி, பிறர் முன்னிலையில் தயக்கமின்றிக் கருத்துக்களை வெளிப்படுத்தும் திறனையும் வளர்க்கின்றன. குறிப்பாக, மேடைப் பயம், கூச்சம் மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்ற தடைகளைக் கடந்து, கல்வி மற்றும் தொழில்சார் சூழல்களில் தங்களைத் திறம்பட வெளிப்படுத்துவதற்கான அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகின்றன.

மேலும், வகுப்பில் கற்றுக்கொள்ளும் பாடங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்வதற்காக வீட்டுப்பாடங்களும் (Homework) வழங்கப்படுகின்றன. இதற்கெனத் தனியான பயிற்சிக் கொப்பியைப் பயன்படுத்தி, கற்றவற்றை மீட்டல் செய்வதற்கும் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் மூலம் வகுப்பறைக் கற்றல் வீட்டிலும் தொடரும் ஒரு ஒழுங்கான கற்றல் பழக்கம் உருவாக்கப்படுகின்றது.

இவ்வாறு இலக்கண அறிவு, சொற்களஞ்சியம், உச்சரிப்பு, செவிமடுத்தல், பேச்சாற்றல் மற்றும் மேடை ஆளுமை எனப் பல்வேறு திறன்களை ஒருங்கிணைத்துக் கற்பிக்கும் இம்முறை, குறைந்த கட்டணத்தில் நிறைவான ஆங்கிலக் கற்றல் வாய்ப்பை வழங்கும் தனித்துவமான அணுகுமுறையாக அமைகின்றது. குறிப்பாக, உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்துறையில் கால்பதிக்கத் தயாராகும் இளைஞர்கள் எனப் பலருக்கும் இத்தகைய பயிற்சிகள் பயனுள்ளதாக அமையக்கூடும். கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களில் ஆங்கிலத்தைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவதில் இத்தகைய கற்றல் அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கற்பித்தல் ஊடாகக் கற்றல் – மற்றுமொரு தனித்துவமான அணுகுமுறை!
இந்நிறுவனத்தின் கற்றல் முறையில் காணப்படும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், கற்பித்தல் ஊடாகக் கற்றல் (Learning by Teaching) என்ற நடைமுறையாகும். குறிப்பிட்ட சில கற்றல் அமர்வுகள் நிறைவடைந்த பின்னர், ஆசிரியரால் முன்கூட்டியே தெரிவு செய்யப்பட்ட ஒரு நாளில், மாணவர்களில் ஒருவர் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, தாம் கற்றுக்கொண்ட பாடப்பகுதிகளை ஏனைய மாணவர்களுக்கு விளக்கிக் கற்பிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். இத்தகைய அணுகுமுறை மாணவர்கள் கற்றவற்றை மீளாய்வு செய்து ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், பிறருக்கு விளக்கிக் கூறும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் வழிவகுக்கின்றது. அதேவேளை, தலைமைத்துவம், பொறுப்புணர்வு, தொடர்பாடல் திறன் மற்றும் தன்னம்பிக்கை போன்ற ஆளுமைப் பண்புகளையும் வளர்ப்பதற்கான சிறந்த களமாக இது அமைகின்றது.

நான் ஏற்கனவே பெற்றுக்கொண்ட கற்றல் அனுபவங்களின் அடிப்படையில், New Institute of English (NIE) ஒரு சிறந்த கற்றல் தளமாக விளங்குகின்றது என்ற எனது தனிப்பட்ட கருத்தைப் பரந்த வாசகர் வட்டத்தினரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இக்கட்டுரையை எழுதுகின்றேன். இது எவ்வித விளம்பர நோக்கத்துடனும் அல்லது விளம்பர ஏற்பாட்டின் அடிப்படையிலும் எழுதப்பட்டதல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இந்நிறுவனத்தின் மற்றுமொரு தனித்துவமான சிறப்பம்சமாக, சான்றிதழைத் தாண்டிய , நடைமுறைப் பயிற்சிகளின் ஊடாக ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொள்வதையும், ஏற்கனவே பெற்றுக்கொண்ட மொழியறிவைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு மேலும் மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள கற்றல் அணுகுமுறையைக் குறிப்பிடலாம்.

எனது சாதாரண குடும்பச் சூழ்நிலைக்கு மத்தியிலும், ஆங்கில மொழியறிவையும் நடைமுறைப் பயிற்சி அனுபவங்களையும் வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கிய New Institute of English (NIE) நிறுவனத்திற்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டி வரும் ஆசிரியர் ரமேஷ்குமார் அவர்களுக்கும் இக்கட்டுரையின் ஊடாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை,
இந்தக் கட்டுரையை எழுதுவதன் உன்னத நோக்கம், என்னைப் போன்ற சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்களும் ஆங்கில மொழியறிவை முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் கொண்டவர்களும், இத்தகைய கற்றல் வாய்ப்புகள் குறித்து ஒரு தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். எனது சொந்தக் கற்றல் அனுபவங்களை இக்கட்டுரையின் ஊடாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம், ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் பலரும் என்னைப் போன்று இவ்வாறான வாய்ப்புகளை அறிந்து, அவற்றைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டும் என்பதே எனது உண்மையானதும் உயரியதுமான நோக்கமாகும்.

இந்நிறுவனம் எவ்வித விளம்பரச் செயற்பாடுகளிலும் நேரடியாக ஈடுபடுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிறுவனத்தைப் பொறுத்தவரையில், உண்மையான விளம்பரம் என்பது அங்கு கல்வி பயின்ற மாணவர்கள் தாம் பெற்றுக்கொண்ட நேர்மையான மற்றும் அனுபவபூர்வமான கற்றல் அனுபவங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் ஊடாகவே அமைய வேண்டும் என்பதாகும். அவ்வாறான அனுபவப் பகிர்வுகளின் மூலம் மற்றுமொரு மாணவர் இந்நிறுவனத்தைப் பற்றி அறிந்துகொண்டு, அதன் கற்றல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருவதே இதன் உயரிய நோக்கமாக அமைகின்றது. அந்த வகையில், எனது இந்தக் கட்டுரையும் இந்நிறுவனத்தைப் பற்றிய எனது நேரடி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் ஊடாக, ஆங்கில மொழியறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் தேவையுடையவர்கள் இதன் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே எழுதப்படுகின்றது.

இறுதியாக, இந்நிறுவனத்தின் கற்றல் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கில மொழியறிவையும் ஆளுமைத்திறன்களையும் வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரும் இதன் மூலம் பயனடைய வேண்டும் என மனதார விரும்புகின்றேன். இத்தகையதொரு சிறந்த கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக NEERMAI தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதுடன், இங்கு கற்றுப் பயிலும் அனைவரும் ஆங்கில மொழியறிவிலும் ஆளுமை வளர்ச்சியிலும் சிறந்து விளங்க எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

This writing is the work of Kobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 179 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Kobi

KKobi9 hours ago

நீர்மை: எழுத்தின் வழியே சமூக மாற்றத்தை நோக்கி!

நீர்மை என்பது வெறுமனே வருமான நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதாரண தளம் அல்ல. இன்று வருமான நோக்கத்திற்காகச் சமூகத்தின் கட்டமைப்பையும் கலாசாரத்தையும் சிதைக்கின்ற பொழுதுபோக்குகளுக்கும் கேளிக்கைகளுக்குமான தளங்களும் சமூக ஊடகங்களுமே அனைவராலும் பேசப்படும், பயன்படுத்தப்படும் துர்ப்பாக்கிய…

கட்டுரைகள்2 min read
நீர்மை என்பது வெறுமனே வருமான நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சாதாரண தளம் அல்ல. இன்று வருமான நோக்கத்திற்காகச் சமூகத்தின்…
KKobi1 day ago

மௌனம் கலைப்போம் – வன்முறையற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவோம்

வன்முறை என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; அதைக்கண்டு அஞ்சி ஒதுங்குவது நமது இயலாமை; அந்தச் சுவர்களை உடைத்தெறிந்து நாம் எழுவதே நமது இலட்சியம்! மௌனம் கலைப்போம், வன்முறையற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவோம்.”வன்முறை செய்பவர்கள் எப்போதுமே பலமானவர்கள் அல்ல; மாறாக…

கட்டுரைகள்4 min read
வன்முறை என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; அதைக்கண்டு அஞ்சி ஒதுங்குவது நமது இயலாமை; அந்தச் சுவர்களை உடைத்தெறிந்து நாம் எழுவதே…
KKobi2 days ago

அன்பு ; மனிதம் பேசும் மௌன மொழி

அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு உயரிய மனிதப் பண்பு, உன்னதமான மனநிலை, அற்புதமான வாழ்வியல் நெறி. மனிதநேயத்தின் அடிப்படைச் சாரமாகவும், இயற்கையின் உன்னதமான வாழ்வியல் உணர்வாகவும் அன்பு திகழ்கின்றது.இந்த அன்பெனும்…

கட்டுரைகள்2 min read
அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு உயரிய மனிதப் பண்பு, உன்னதமான மனநிலை, அற்புதமான…

More in கட்டுரைகள்

See all
வன்முறை என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; அதைக்கண்டு அஞ்சி ஒதுங்குவது நமது இயலாமை; அந்தச் சுவர்களை உடைத்தெறிந்து நாம் எழுவதே…

மௌனம் கலைப்போம் – வன்முறையற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவோம்

Kobi
"காலமாற்றத்தில் கரைந்துபோகும் உண்மையான நட்பும், கணக்குப் போடும் உறவுகளும்ஒரு காலத்தில் இலக்கியங்களிலும், சினிமாக்களிலும், நிஜ வாழ்க்கையிலும் காதலுக்கு இணையாகவும்,…

நட்பிற்காக ஏங்கிய கூட்டம் இது

Sobi