இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 05)

0
1279

 *பகுதி 05*

அவனை அப்படிப் பார்த்த பவித்ராவை என்னம்மா! மைடிய அரசி.  என்ன அப்படி பாக்குற என்று கேட்ட அவன்
 
“எனக்கு ஆடர் கிடச்சிடிசு. ஐயா கொடுத்த டிசைன் மோடல்ல யாராவது வேணாம் என்பாங்களா? நாளைக்கே அவங்க கம்பெனியில வந்து ஜொயின்ட் பண்ணட்டாம். பாவம் அந்த கம்பெனிக்காரன் நல்ல டிசைனர் இல்லாம காஞ்சு போய் இருக்கு அந்தக் கம்பெனி. ஐயா போய் ஐடியா சொன்னனா…. அவனுங்களுக்கு ரொம்ப புடிச்சு போய்ச்சு. முதல்ல சொன்ன மாதிரித்தான் இன்வஸ்மென்ட் எல்லாமே அவங்கட தான் ஆடரும் அவங்களே எடுத்துத் தருவாங்க. நாம புரடக்ட் பண்ணி கொடுத்தா மட்டும் காணும். பாரேன் இன்னும் ஆறே மாசத்துல ஐயாவே சொந்த இன்வஸ்மென்ட்ல ப்ரடெக்ட் பண்ணப்போறன்.”  
என்று கூறிக் கொண்டே அவள் முகம் நோக்கிப் அவள் பார்க்க இலேசான கோபத்துடன் கணவன் சொன்ன செய்தி கேட்டு மகிழ்வது போன்று தோன்ற இன்னும் கொஞ்சம் அவளை சீண்டிப் பார்க்க நினைத்த அவன் 
அது சரி ஐயாவோட பபோமன்ஸ் எப்படி? என்று ஒரு வித கிண்டல் தொனியில் கேட்டான். 
 
அவ்வளவு நேரமும் அவன் பேசிய பேச்சுக்களைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்திருந்த அவள் அவன் வீட்டிற்கு வரும்போது எப்படி வந்தான் என மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டு ஒரு நிமிடம் மௌனமடைந்து பின் அங்குமிங்கும் பார்த்தாள்.
 
கையில் கிடைத்தது அவன் கொண்டு சென்ற பைல்களே. அப் பைல்களை எடுத்த அவள் வீச்சரிவாளினைத் தூக்குவது போன்று தூக்கி அவன் அணிந்திருந்த சேட்டிற்கும் நோகாமல் அவனைத் தாக்கிக் கொண்டே இருந்தாள். 
 
[ பாருங்க வாசகர்களே நம்ம ஹிரோயினி அந்த நேரத்துல கூட தன் கணவன் மீது கொண்ட அன்ப. ஹ்ம்…. மனைவி என்டா இப்படி தான் இருக்கனுமில்ல. இப்படி அன்பு வெச்சி இருக்கிற மனைவி மேல ராஜேஷ் எப்படி அன்பு வெச்சி இருக்காரு என்பத இனி வரும் பகுதிகளில் பார்ப்போம் வாசகர்களே ] 
 
தொடரும்…
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments