மாயோனின் செல்லம்மா (கவிதையில் கதை)

#மாயோனின் காதலி #செல்லம்மா#பாகம்#1( அயல்நாட்டிற்கு தன்னவனை தத்தம் கொடுத்த வலிகளின் சுவடுகள்)
செல்லம்மா பேசுகிறாள்
உனையன்றி நானிருப்பதுசாத்தியமில்லை..நீயின்றி நம் வாழ்வு மேலெழும்ப வாய்ப்பில்லை..அன்பே இருப்புக்கும் இழப்புக்கும்நடுவே உழன்று மடியாமல்..உன்னை விடுவிக்கிறேன்…காதலோடும் கனவோடும்உன்நிஜத்தோடு பிணைந்த நினைவுகளோடு குடித்தனம் நடத்திகொள்கிறேன்….நீ என்னினைவு வரும்போதெல்லாம்… உன் இதழ் முத்தத்தை அழுந்தகொடுத்தே அனுப்பி விடு..காற்றின் வேகத்தில் என் கன்ன தகிப்பில் ஈரம் காய்ந்து விட்டதாய் உன்னுள் என் மொத்தத்தை உறைய விடுகிறேன் உணர்வோடு..மாயோனே..ஒன்று மட்டும் சொல்கிறேன்..போகும் போது என் விழிகளைநேருக்கு நேர் சந்தித்து விடாதே..விலங்கிட்டு உடும்பாய் உடம்போடு ஒட்டிக் கொள்வேன்….ஆதலால் விழிவழி நெருங்கி விடாதே..நீயின்றி… உன் அணைப்பின்றி வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை..உன் வெறுமையை தாங்கா விடின் வறுமையின் பிடியில்உன்னை சார்ந்தவர்களும்….பணயம் வைக்கிறேன்..பத்திரமாக போய்வா..முற்றத்து நிலவிடம் சொல்லி வைக்கிறேன்…என்னை அவன் நினைக்கும் போதும்நான் அவனை நினைக்கும் போதும்கூடுவிட்டு கூடு பாய்ந்துகூடா இரவின் சாபம் தீர்த்து விடென….அடேய்.. இப்பொழுதே இதழ் தீண்டு…இதயகூட்டின் மேல் என் மூச்சு காற்றில் துயில் கொள்..நீயில்லாத இராத்திரிகள் என் வெப்பத்தில் இவ்வூரை கொளுத்தி விடக்கூடுமே..ஆதலால் என்னை விலகும் வரை.. விடியா இரவுகளைஒற்றை போர்வைக்குள்..சமைத்து விடு..ஓர் நாள் உணவு நீயாகஉண்பது நானாக….மறுநாள் நீ பசியாக..நான் உணவாக…மானசீகக் காதலோடுஇவள் மாயோனின் செல்லம்மா..
..வலம் வருவாள்… இனி…
This writing is the work of RithuSurya Riya, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments 6
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing







