பொதுவானவை

E-Mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழ் பேசுபவர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இமெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெய்து பார்க்க முடியவில்லை அல்லவா…

அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? ஆம்! அதுதான் உண்மை. இன்று உலகையே ஒருவலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இமெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி.ஏ.சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பது வயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.


இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: “, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார்.

நேவார்க் நகர உயர் நிலைப் பள்ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில் களை தொடங்கும் வகையிலும் இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணை யாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக்கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது.

அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/தளத்தில் தெரிந்து கொள்ளலாம். —

This writing is the work of ஷக்தி பாலன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 166 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from ஷக்தி பாலன்

ஷபஷக்தி பாலன்2 Jun 2023

சிறந்த முத்தம் (Best Kiss)

'சிறந்த முத்தம்' என்ற கருத்து தனிப்பட்ட விருப்பங்களையும் நுண்ணிய உணர்வுகளையும், தனிப்பட்ட அனுபவங்களையும் சார்ந்து இருப்பதால், நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். இருப்பினும், சில வகையான முத்தங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் பலரால் மறக்கமுடியாத அல்லது…

ஏனையவை1 min read
ஷபஷக்தி பாலன்28 May 2020

மீள்

மரங்களை விட்டு தூரப்படும் மரங்கொத்தி என நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே நினைக்கிறது மனது மனம் என்பதே ஓர் ரெண்டுங்கெட்டான் சில நேரம் கொஞ்சும் அதட்டும் அழும் அடம்பிடிக்கும் பிடிக்காததையும் செய்யும் அப்படியே கரைந்து மறைந்திடவும்…

கவிதை - ஜூன் 20201 min read
ஷபஷக்தி பாலன்30 Apr 2020

விட்டமின் E கேப்ஸ்யூலை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா?

விட்டமின் E கேப்சூலானது பொதுவாக பச்சை மற்றும் கோல்டன் நிறத்தில் கிடைக்கும். விட்டமின் E ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதுமாகும். இது பல ஆண்டுகளாக தோல் பராமரிப்பு உற்பத்தியில் பிரபலமான ஒரு பொருளாக…

டிப்ஸ்3 min read

More in பொதுவானவை

See all
0
Would love your thoughts, please comment.x
()
x