ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27
தொடர் போரினால் நலிந்த ஈராக் திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு. ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும்,…
அனுபவப் பகிர்வுகள்4 min read








