வாழ்வியல்

கெட்டவனின் டயரிக் குறிப்பு

Picture added by the writer, அரிஞ்சயன், who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

என்னை யாராலும்

புரிந்து கொள்ள முடியாது

என் கோபங்களில்

நியாயம் இல்லாமல் இருக்கலாம்

அதற்காக நான் மட்டுமே

அதெற்கெல்லாம் பொறுப்பாக

அமைந்து விடவும் முடியாது

சில சமயம் என்னை நானே

சந்தேகப்படுவதும் உண்டு

ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள்

என் நெஞ்சை அரிப்பதும் உண்டு

நில்லாமல் ஓடும் காலத்தில்

நான் செய்து விட்ட காரியங்கள்

ஓரிரு நொடிகளிலேயே என் மனதை

பாழ்படுத்துவதும் உண்டு

ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள்

என் கோபங்களுக்கும் செயல்களுக்கும்

நான் மட்டும் தான் பொறுப்பாளியா?

என் சிந்தனைகளும் என் எண்ணங்களும்

வெறிபுடித்துப் பாய

நான் மட்டும் தான் காரணமா?

என் மனதை அந்த எல்லைக்குள் நெருக்கும் போது

என்னால் வேறு எப்படி

என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று

எல்லோருக்கும் எண்ணத்தோன்றுகிறது?

நானும் மனிதன் தானே!

ஆசா பாச தழை கட்டுகளால்

இறுக்கப்பட்ட

மானுட ஜென்மம் தானே.

மனிதம் என்றாலே

உரிமை

ஆசை

சுயநலம்

ததும்பிய பிறவி தானே.

நான் மட்டும் என் உணர்வுகளை

புதைத்துக்கொள்ள வேண்டும் என்று

எதற்காக நினைக்கிறீர்கள்?.

எனக்கு உள்ளொன்று வைத்து

புறமொன்று கக்கி பழக்கமே இல்லை

என் மனதில் தோன்றுவதை

நேரிடையாய் பேசும் குணம்

அதற்கு இப்படியும் பெயர் வைக்கலாம்

காயப்படுத்துபவன்!

நீங்கள் என்ன சொன்னாலும் நான்..

நான் தான் நானே தான்!

என்னால் என்னை மாற்ற முடியும் என்று

எனக்கு சத்தியமாக தோன்றவில்லை

காலம் மாற்றினால் மாறுகிறேன்

இல்லை

காலம் முழுதும் இப்படியே

வாழ்ந்து மடிகிறேன்

உங்கள் பார்வையில்

நான் நாக்கினால் காயப்படுத்துபவன்..

கெட்டவன்..

என் பார்வையில் நான்

நானாகவே இருக்கிறேன்…

This writing is the work of அரிஞ்சயன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from அரிஞ்சயன்

அஅரிஞ்சயன்16 Oct 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

        உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக…

தொடர் கதைகள்5 min read
அஅரிஞ்சயன்18 Sep 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 06

          கே.கே யின் வீட்டிலிருந்து சற்றுத் தூரமாக ஒரு மரத்தடியில் வளையம் வளையமாக புகையை ஊதிக்கொண்டிருந்தான் சத்யா. இடையிடையே கடிகாரத்தைப் பார்த்தான். முட்கள் இரண்டும் தம்மிடையே நூற்றைம்பது பாகை கோணம்…

த்ரில்லர்5 min read
அஅரிஞ்சயன்14 Sep 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 05

பத்ரி உள்ளே வரும் போது சத்யாவின் முன்னால் இருந்த மேஜையில் அந்த ஒரு பக்கம் கடித்த ஆப்பிள் வெண்ணிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.  சத்யா தன்னுடைய லேப்டாப்பில் எதையோ துலாவிக் கொண்டிருந்தான். பத்ரி தான் கையில் கொண்டு வந்த…

தொடர் கதைகள்4 min read
அஅரிஞ்சயன்28 Aug 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 04

        கே.கே ஜுவல்லர்ஸின் முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் சத்யா அமர்ந்திருந்தான். காரின் ஜன்னல் ஊடாக கே.கே ஜுவல்லர்ஸ் வாயிலை நோட்டமிட்டான் பத்ரி. "பாஸ் நெக்ஸ்ட் என்ன…

த்ரில்லர்4 min read

More in வாழ்வியல்

See all