அழகு

பச்சையுலகம்

மின்னலின் மேனியுடன்
மின்னிக்கொள்ளும் தன்னழகை
சில்லென்று சிலிர்த்திடும்
அந்தப் பனித்துளியுடன்
சிரித்து மகிழ்ந்திடும்
காலை…

மொட்டுக்குள்
விறைந்திட முன் கரைத்தே
மீண்டும் நீரிற்குள் மீட்கும்
ஞாயிறின் ஒளியில்
மிதந்திடும் பொற்கரைசல்
அந்திக்கடல்..

எத்துனை வெப்பத்திலும்
சிறு இடைவெளியொன்றில்
வந்து ஓயும் அந்த
தென்றலின் மெல்லிய
அரவணைப்பில் அத்துனை
வெப்பமும் மொத்தமாய்த்
தனிகிறது….

இத்துனை வெப்பத்திலும்
வேகிறதென்று பொய்க்கணக்குப் போடாமல் தன் குஞ்சுகளிற்குத்
தீனி தேடித் திரிந்து
இறைவனுக்களித்த ஒப்பந்தத்தை கச்சிதமாய் நிறைவேற்றும்
அந்த சிட்டுக்கும் ஓர்
இரசிகன்…

யுகங்கள் நவீனத்தின்
கடலிற்குள் புதையுண்டுள்ள
இந்த செக்கனிலும்
விருட்சகத்தின் விருந்தாளியாய்
சுற்றித் திரியும்
இந்த பட்ஷிகளைப்
பார்த்துப் பரவசமடையும்
விழிகளை நேசிக்கும்
மனிதர்களைக் காண
விளைகிறது இந்த
பச்சையுலகம்..
-நாஓஷி-

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Binth Fauzar

BFBinth Fauzar11 Mar 2021

உன் வாழ்க்கை

உங்களைப் பற்றிய அழுக்குப் படிந்த உள்ளங்களின் எண்ணங்களை விட்டும் உங்களது உள்ளங்களைத் தள்ளி வையுங்கள்.வாழ்வில் நிறைய சாதிக்க முடியும். #BinthFauzar

அனுபவப் பகிர்வுகள்1 min read
BFBinth Fauzar9 Mar 2021

தோல்வி?

வாழ்க்கையில் அதிகம் நம்மை வருத்துவதுதான் இந்தத் தோல்வி.அன்று தொட்டு இன்று வரை அனைவராலும் சொல்லப்படும் வாசகமொன்றுதான் 'தோல்வி என்பது வெற்றியின் முதல் படி' இருந்தாலும்  அத்தனை சுலபமாக வெற்றியின் படியைத் தொட்டுவிட்டவர்கள் இங்கே யார்? நீ…

ஆய்வுகள்2 min read
BFBinth Fauzar8 Mar 2021

சமூக மாற்றத்தில் பெண்கள்

நாள்தோரும் சிறந்திட நல்லதொரு நிகழ்வு நடந்திட வேண்டும்.அந்நிகழ்வுக்கொரு காரண கர்த்தா இருந்தாக வேண்டும்.சமூகம் வேண்டும் நல்லவற்றை நிகழ்த்திட மங்கையவளால் நிச்சயமாக முடியும். ஆரம்பந்தொட்டு இன்று வரை எதிர்ப்புக்கு என்றும் பழகிப்போனவர்களாக பெண்களைக் குறித்துக்காட்டுவது தவறாக மாட்டாது.அதனை…

ஆய்வுகள்2 min read

More in அழகு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks