கதைகள்

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

Picture added by the writer, கவியாழினி, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

அன்பு 11

" ஹலோ விக்கி கண்ணா..எங்கப்பா இருக்க.. " என அன்பொழுக கேட்ட வினிதாவின் குரலில் விக்கி அண்ணாந்து வானத்தைப் பார்க்க, அந்த பக்கமோ வினிதா ' ஹலோ ஹலோ ' வென கத்திக் கொண்டிருந்தாள்.

" சொல்லு கா.."

" எவ்ளோ நேரமாப்பா கூப்பிட்டு இருக்கேன்.. பிசியா இருக்கியா.." என்ற சாந்தமான குரலில்,

' என்ன எலி அம்மணமா ஓடுது ' என நினைத்த விக்கி " அதொன்னும் இல்ல திடீர்னு நீ பாசமா பேசவும் மழ வருதான்னு பாத்தேன்..சொல்லு என்ன வேணும்" என கேலி செய்தவன் நேரடியாக விஷயத்திற்கு வர, அவன் சொன்னதில் அசடு வழிந்த வினிதா

" அது ஒன்னும் இல்லடா கேஸ் விஷயமா உன் மாமா மும்பைக்கு போயிருக்காரு ல.."

" ஆமா "

" பக்கத்துல இருக்க டைலரிங் ஷாப்ல தான் என் ஜாக்கெட் தைக்க கொடுத்தேன்."

" சரி..அதுக்கு "

" உன் மாமா இருந்தா எடுத்து வந்து கொடுத்திருப்பாரு…அவர் வேற ஊர்ல இல்ல ல..நீ கொஞ்சம் ஆபீஸ் விட்டு வர வழியில வாங்கிட்டு வரியாப்பா " என சாந்தத்தின் மறு உருவாய் கேட்க,

" அதானே பார்த்தேன் எலி என்ன அம்மணமா ஓடுதுன்னு.. நேத்து ஒரு வாய் பிரியாணி செஞ்சு கேட்டதுக்கு என்ன அலைய விட்டேல.. ஜாக்கெட் எல்லாம் எடுத்து வந்து கொடுக்க முடியாது.. ப்பே.. "

" விக்கி விக்கி.. ப்ளீஸ் விக்கி..எனக்கு உன்ன விட்டா வேற யாருடா இருக்கா " என பாவமாய் கேட்டாள் வினிதா.

' ஐம்பது ரூபாக்கு நடிக்க சொன்னா ஐயாயிரம் ரூபாக்கு நடிக்கிது பாரு.. ' என வாயில் கைவைத்தவன்,

" நீ இப்டி அப்பாவியா பேசினா..நா எடுத்து வந்து கொடுப்பேன்னு நெனச்சிட்டியா.. சில்லி கேர்ள்..அதெல்லாம் கொடுக்க முடியாது..நா போன வெக்கிறேன்.. " என அழைப்பேசியை வைக்கப் போக, அதில் பதறிய வினிதா

" டேய் டேய் விக்கி இரு டா…நானே ரொம்ப கஷ்டப்பட்டு பொறுமையா பேசிட்டு இருக்கேன்..நீ வேற டென்ஷன் ஏத்திட்டு இருக்க..ரொம்ப ஓவரா பேசாத..என் புருஷன் சிபிஐ ஆபீசர் தெரியும்ல..உன்ன போட்டு தள்ளிர சொல்லுவேன்..ஜாக்கிரத.." என வினிதா கத்த,

" அதானே பார்த்தேன்..கொஞ்சம் நேரம் கூட உன்னாலே அமைதியா பேச முடியாதுல..பாவம் என மாமா எப்டி தான் உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ… மோர் ஓவர் உன் ஜாக்கட்ட எடுத்து வந்து கொடுக்கலாம்னு தான் நெனச்சேன்..ஆன நீ ஓவரா பேசிட்ட. அதுனால உன் சிபிஐ புருஷனுக்கே எடுத்து வந்து கொடுக்க சொல்லு ஓகே.." என அவளை வம்பிழுத்துவிட்டு சிரிப்புடன் போனை வைத்தவனுக்கு அவள் அங்கு கத்துவது இங்கு வரை கேட்டது.

தமக்கையை டென்ஷனாக்கி பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட விக்கியோ மாலை நேர தென்றல் காற்றை சுகமாய் அனுபவித்தப்படி டெய்லரிங் ஷாப்பிற்கு வண்டியை விட்டான் .

அதே டெய்லரிங் ஷாப்பில் தான் டெய்லருடன் மல்லுக்கு நின்றுக் கொண்டிருந்தாள் ரியா.

" அக்கா..நா ஜாக்கெட் தைக்க கொடுத்து ஒரு வாரம் ஆகுது.. இன்னும் ரெடி ஆகலன்னு சொல்றீங்க.." என மூக்கை சுருக்கி வினவியவளைப் பார்த்த அந்த பெண்ணோ,

" இல்ல பாப்பா..உனக்கு முன்னாடியே நிறைய ஆர்டர்ஸ் வந்திருச்சு டா..அதெல்லாம் நா முடிக்கணும் ல " என பாவமாய் முகத்தை சுருக்கி சொல்ல,

" என்ன இருந்தாலும் நா உங்க ரெகுலர் கஸ்டமர் ல..எனக்கு இப்டி பண்ணலாமா நீங்க " என மூக்கை உறிஞ்சியவளை செய்வதறியாது பார்த்தவர்,

" ப்ளீஸ் பாப்பா.. புரிஞ்சிக்கோயேன்.." என கெஞ்சலாய்ப் பார்த்தவரை உதட்டை சுழித்தப்படி பார்த்தவள்,

" சரி அப்போ எப்போ கொடுப்பீங்க… " என அரை மனதாய் கேட்க, அதில் நிம்மதியாய் சிரித்த அந்த பெண்,

" ரெண்டு நாள்ல கண்டிப்பா உன் கைல ஜாக்கெட் இருக்கும்.." என உறுதியாய் சொன்னாள்.அதில் புருவம் உயர்த்தி பார்த்த ரியா,

" உங்கள நம்புறேன்..இன்னும் எண்ணி ரெண்டு நாள்ல ஜாக்கெட் என் கைக்கு வரல..இந்த பன்னு மாறி இருக்க கன்னத்த கடிச்சிருவேன்.." என மிரட்டி விட்டு சென்றவளைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது அந்த தையல்காரப் பெண்ணிற்கு.

டெய்லரிங் ஷாப்பில் இருந்து வெளியேறியவளின் கைப்பை தெரியாமல் கீழே விழ, திறந்திருந்த ஜிப்பின் வழியே வெளிய விழுந்த பர்ஸை கவனிக்க தவறி விட்டாள் அவள். வேகமாய் கைப்பையை மாட்டிக்கொண்டு கடையை தாண்டி அவள் செல்லவும் விக்கி வந்து பைக்கை நிறுத்தவும் சரியாக இருந்தது. பைக்கில் இருந்து இறங்கி சாவியை ஆள்காட்டி விரலில் ஸ்டைலாய் சுழற்றியபடி உள்ளே செல்லப் போக, அப்போது தான் கீழே விழுந்து கிடந்த பர்ஸை கவனித்தான்.

" யாரோட பர்ஸ் இது " என புலம்பியவாறு அதைக் குனிந்து எடுத்தவன் அதில் இருந்த வெளியில் எட்டிப் பார்த்த ஆதார் கார்டை கையில் எடுத்துப் பார்க்க அதில் தெரிந்த ரியாவின் படத்தை பார்த்து புருவங்களை உயர்த்தினான்.

' அட..கிறுக்கச்சி..' என உள்ளுக்குள் வியந்தவாரே அவள் தென்படுகிறாளா என சுற்றும் முற்றும் கண்களால் அலச, சற்று தூரத்தில் அவள் ' வெக்கு வெக்கு ' என நடந்து செல்வது கண்ணில் பட்டது.

' பர்ஸ் கீழ விழுந்ததும் தெரியாம, எப்டி கைய ஆட்கிட்டு போகுது பாரு ' என உள்ளுக்குள் அவளைத் திட்டியபடி அவள் நோக்கி நடந்தான்.

" ஏய்.. கிறு.." என கத்த வந்தவன், ' அதான் ஆதார் கார்ட் இருக்கே ' என நினைத்தபடி அதில் அவளின் பெயரைப் பார்க்க, அதில் இருந்த பெயரை வாசித்து,' ஓ..அம்மணி பெயர் ரியாவோ..' என தனக்குள் சொல்லிக் கொண்டவன் ' பேரு நல்லா இல்ல.. நாம வெச்ச பேரு தான் சூப்பரா இருக்கு ' என உள்ளுக்குள் கேலியாய் சிரித்தபடி,

" ஓய்..கிறுக்கச்சி.." என கத்த, அவளோ அவன் கத்தியது எதுவும் உரைக்காது அவள் பாட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தாள். அதில் கடியாகி வேக வேகமாய் அவளை நோக்கி விரைய, அவளை சற்று நெருங்கியிருந்தவன் பாதையில் வீற்றிருந்த கல்லைப் பார்க்க தவறி விட்டான். அவளை அழைக்க வாய் திறந்த நேரம் அந்த கல்லுக்கு இடறி அவள் முதுகோடு அவன் சென்று விழ, அவனின் கையோ எக்குத்தப்பாய் அவளின் இடையில் பட்டது.

திடீரென தன் மேல் யாரோ விழுந்தது மட்டுமல்லாது இடையில் வேறு கை வைத்ததில் விதிவிதிர்த்தவள் திரும்பி 'பளார் ' என அறைய, விக்கியோ தன் மீது விழுந்த எதிர்பாராத அறையில் விக்கித்து நின்றான். ரியாவும் அந்த இடத்தில் விக்கியை எதிர்பார்க்காது திகைத்ததெல்லாம் சில நொடிகள் தான் பின் மீண்டும் சினம் தலைத் தூக்க,

" ச்சீ மனுஷனா நீயெல்லாம்..என் மேல இருக்க கோபத்த இப்டி பொறுக்கித் தனம் பண்ணித்தான் காமிப்பியா.. அசிங்கமா இல்ல..என்ன ஒன்னுமே பண்ணாத பாப்பா மாதிரி முழிக்கிற..இப்டி மூஞ்ச வெச்சா உன் மேல தப்பில்லன்னு நா நம்பனுமா..ச்சே.. உன் கிட்ட போய் சாரி கேக்கணும்ன்னு நெனச்சேனே..பொறுக்கி " என கலங்கிய கண்களுடன் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்ப, அவ்வளவு நேரம் உறைந்து போய் இருந்தவன் அவள் கூறிய வார்த்தைகளை கேட்டு கோபம் உச்சிக்கேற, பதிலுக்கு அவளை அறையப் போனவன், அவளின் பயந்த விழிகளைக் கண்டு கையை கீழிறக்கினான்.

" என்ன டி சொன்ன..பொறுக்கியா..அடிச்சு மூஞ்ச உடைச்சிருவேன்..பொறுக்கி சொல்ற மூஞ்ச பாரு.. " என அவன் பதிலுக்கு பாய, அந்த பக்கம் சென்ற ஒருவனோ
" என்ன மேடம் ரோட் ல வம்பு பண்றானா.." என கேட்டப்படி விக்கியை நோக்கி சண்டைக்கு வருவதைப் போல் வர, அதில் பயந்த ரியா,

" இல்ல அண்ணா..அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..நாங்க பாத்துக்கிறோம்" என சொன்னதில் அவன்," ச்சே..இந்த காலத்து பொண்ணுங்களே இப்டி தான்..வம்பு பண்ணவனுங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு திரியுதுங்க.. இதுங்கள நம்பி பேச போனா நம்ம தல தான் உருளும் " என அவளை வசைப்பாடி விட்டு சென்று விட்டான்.

ரியாவோ கலங்கி சிவந்த கண்களுடன் விக்கியைப் பார்க்க, அவனோ கோபத்தில் சிவந்த கண்களுடன் அவளை ஏறிட்டான்.

" நா ஒன்னும் ஆசைப்பட்டு வந்து உன் மேல விழல..இதோ உன் கண்ண விரிச்சு நல்லா பாரு..இது தடுக்கி தான் விழுந்துட்டேன்.." என அவன் காட்டிய திசையில் நோக்கியவள் அங்கு பெரிதாய் கல்லொன்று வீற்றிருப்பதை பார்த்து கோபத்தில் இருந்தவள் நிதானித்தாள்.' ஐயையோ அவசரப்பட்டு விட்டோமோ' என்றிருந்தது அவளுக்கு. கோபம் மறைந்து சுண்டிய முகத்துடன் அவனை ஏறிட, அவனோ பர்ஸை அவள் கையில் திணித்து விட்டு,

" இதா புடி.. உன் பர்ஸ்..கீழேயே கெடக்கட்டும்ன்னு விட்டுடு போயிருக்கணும்..நல்லது செய்யப் போறேன்னு, நடு ரோட் ல பொறுக்கி பட்டம் வாங்கினது தான் மிச்சம் " என உணர்வற்ற குரலில் சொன்னான். அவன் தன் கையில் திணித்ததை புரியாமல் பார்த்தவள், சட்டென்று தன் கைப்பையில் கையை விட்டு துழாவ அங்கு அவளின் பர்ஸ் இல்லாதிருப்பதில் திகைத்தவளுக்கு அப்போது தான் புரிந்தது, கைப்பை கீழே விழுந்ததால் சிதறிய தன் பர்ஸை பத்திரமாய் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறான் என.

அதில் குற்றவுணர்ச்சி தலைதூக்க " சா.." என மன்னிப்பு கேட்க விளைந்தவளை கை நீட்டி தடுத்தவன், அவளை ஒரு முறை முறைத்து விட்டு, ' விறு விறு ' வென சென்று விட்டான். போகும் அவனையே கண்களில் கண்ணீருடன் வெறித்துக் கொண்டிருந்தாள் ரியா.

'தேவை தான் எனக்கு ' என மனதினுள் தன்னையே சாடிக் கொண்டே, வந்த வேலையை மறந்து வண்டியை அதிவேகத்தில் விரட்டிக்கொண்டு இருந்தவனுக்கு மனமெல்லாம் எறிந்தது.
காலிங் பெல் உடையுமளவிற்கு அழுத்திக் கொண்டிருந்தவன் வினிதா கதவைத் திறந்ததும்,

" இவ்ளோ நேரம் ஒருத்தன் காலிங் பெல் அடிச்சிட்டு இருக்கேன்..உன் காது என்ன செவிடா..உள்ள என்ன புடுங்கிட்டு இருக்க..ச்சே.." என ஆபீஸ் பேக்கை சோஃபாவில் எறிந்து விட்டு அறையினுள் சென்று கதவை அறைந்து சாத்தியவனை விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வினிதா. இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள் தான்.. ஆனால் ஒரு நாளும் அவள் மேல் இப்டி எறிந்து விழுந்தது இல்லை. அவன் கத்தியதில் தன்னாலேயே அவளின் கண்கள் கலங்க, சட்டென்று சுதாரித்தவள்,'ஆபீஸ் டென்ஷனா இருக்கும் ' என தன்னை தேற்றிக்கொண்டாள்.

இங்கு உடையைக் கூட மாற்றாது கட்டிலில் அமர்ந்திருந்த விக்கியின் மனது ஏனென்று தெரியாது வலித்தது.அவளை முதன் முதலில் சந்தித்ததில் இருந்து ஏதோ ஓர் உணர்வு அவள் மேல். அதுவும் தன் மேல் தான் தவறென்று தெரிந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வாயாடியவளைப் பார்த்து முதலில் எரிச்சல் வந்தாலும் முறைக்கும் கண்களையும் துடிக்கும் உதடுகளையும் பார்த்தவனுக்கு வந்த எரிச்சலெல்லாம் மாயமாய் மறைந்து சுவாரசியம் குடிக்கொண்டது.. அடுத்தடுத்து நேர்ந்த அவளுடனான சந்திப்புகளில் அந்த சுவாரசியம் படிப்படியாய் மாறி ஏதோ சொல்ல முடியாத உணர்வொன்றில் கொண்டுவந்து நிறுத்த அதை சுகமாய் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருதவனுக்கு, இன்று அவள் உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டு கோபத்தையும் தாண்டி ஒரு வித வருத்தமே மனமெங்கும் வேரோடியது.

" நா பொறுக்கியா..சொல்லு நா பொறுக்கியா..இட்ஸ் ரியலி ஹர்டிங் கிறுக்கச்சி.." என அவளின் முகத்தை தன் மனக்கண்ணில் நிறுத்தி உரைத்தவன் தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.

தொடரும்…

This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கவியாழினி

கவியாழினி3 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 10தன் சுடிதார் டாப்பை மேலே உயர்த்தி அடிபட்டு கன்றி போயிருந்த தன் இடைக்கு ஜெல்லை தடவிக் கொண்டிருந்தாள் ஆத்யா.டாக்டர் கொடுத்த மருந்துகளையும் அந்தக் களிம்பையும் பூசிக் கொண்டவளுக்கு இருந்ததை விட வலி சற்று மட்டுபட்டிருந்தது.அதில்…

கதைகள்6 min read
கவியாழினி6 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 9அவள் கோபத்துடன் கையை தட்டிவிட்டதும் சுயம் தெளிந்தவன் தான் செய்யப்போன செயலை உணர்ந்தான். ஏற்கனவே தன்னுடன் மல்லுக்கு நிற்பவள் இப்போது கழுத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவனின் மனம், "…

கதைகள்8 min read
கவியாழினி13 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 8ஆத்யா இன்டர்வியூ சென்று வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அது தொடர்பில் எந்த ஒரு பதிலும் வராதிருந்ததில் வாடியவள் மனம் தளராது மீண்டும் வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து கொண்டே இருந்தாள்.ஆனால் அவளுக்கு அந்த…

கதைகள்6 min read
கவியாழினி12 Nov 2026

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 7பசியால் தலை கிறுகிறுக்க வீட்டில் நுழைந்ததுமே முதல் வேலையாய் தட்டு உடையும் அளவிற்கு சோற்றை போட்டுக் கொண்டு, சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் ஆத்யா.ஒரு வாய் சாப்பிட்டதும் அடைத்திருந்த காதும், மங்கலாய் தெரிந்த…

கதைகள்8 min read

More in கதைகள்

See all