அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 9
அவள் கோபத்துடன் கையை தட்டிவிட்டதும் சுயம் தெளிந்தவன் தான் செய்யப்போன செயலை உணர்ந்தான். ஏற்கனவே தன்னுடன் மல்லுக்கு நிற்பவள் இப்போது கழுத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவனின் மனம், " ஏன் உனக்கு இல்லாத உரிமையா " என கேட்டதில் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்து அவளைப் பார்த்தான்.
கோபத்தில் மூக்கு நுனி சிவக்க " தொட்டு பேசுற வேலை வெச்சுகிட்ட… " என கோபத்தில் விரல் நீட்டி எச்சரித்துக் கொண்டிருந்தவளை பார்த்து தற்போது அவனுக்கு சிரிப்பு வந்தது. அதில் கண்கள் குறும்பு கூத்தாட,
" தொட்டு தான பேசக்கூடாது..தொடாம பேசலாம் ல " என அவளிடம் அனுமதி கேட்பது போல் கேட்க அதில் ' ஐயோ ' என தலையில் அடித்துக் கொண்டவள்,
அவ்வளவு நேரம் இருந்த கோபம் மறைந்து இயலாமையுடன் அவன் முகம் பார்த்து, "அடேய்.. நான் ஏற்கனவே முடியாம இருக்கேன்டா நீ வேற படுத்தாதடா " என அழுகுரலில் கூறினாள். அவள் கூறிய தினுசில் சிரித்தவன் " ஓகே கூல்." என அவனின் நரம்போடிய கையை நீட்ட, அவனின் வலிமையான கையை புரியாது பார்த்தவளுக்கு
" நா ஹெல்ப் பண்றேன்.. என் கையப் பிடிச்சிக்கோ.." என மென்மையான குரலில் சொன்னான். அவனின் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த ஆத்யாவோ,
" நோ தேங்க்ஸ்..நா பாத்துக்கிறேன் " என மீண்டும் எழப்போக, அவ்வளவு நேரம் இருந்த மென்மை மறைந்து கோபத்தில் முகம் இறுக,
" இப்போ எதுக்கு அடம்பிடிக்கிற.. சொன்னா கேக்க மாட்டியா..திரும்ப விழுந்து தலைய உடைச்சிக்க போறியா.. இடியட் " என அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சீற, அவன் சீற்றத்தில் விழிகள் மிரண்டாலும் அதை காட்டிக் கொள்ளாது பதிலுக்கு அவளும் கத்தப் போக, சரியாக அந்நேரம் ரியா வந்துவிட்டாள்.
" ஹேய் ஆது என்னாச்சு.." என பதறியபடி வந்தவள் ஹரி பிரணவைப் பார்த்து யாரென முழிக்க,
" ஹலோ சிஸ்டர்..உங்க ஃப்ரெண்ட் விழுந்துட்டாங்க..அதான் ஹெல்ப்.." என அவன் கூறி முடிக்கவில்லை. தன் தோழி விழுந்துவிட்டாள் என அவன் சொன்னதுமே ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தவள் போல் சிரித்தாலே ஒரு சிரிப்பு. அவளின் நகைப்பில் ஆத்யாவோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தன் தோழியையே கண்களால் எரித்துக்கொண்டு இருந்தாள்.
" ஆது.. ஹா ஹா…எப்டி விழுந்த..பறந்து போய் விழுந்தியா.. ஹா ஹா.. " எனக் கேட்டு விட்டு அவள் மேலும் சிரிக்க, ஹரி பிரணவிற்கும் சிரிப்பு திமிறியது. அவனும் நண்பர்கள் விழுந்தால் கலாய்த்து சிரிப்பவன் தானே. இப்போது ரியா சிரிக்கவும் அவனும் சேர்ந்து சிரித்தபடி,
" ஆமா சிஸ்டர்…நீங்க மிஸ் பண்ணிட்டீங்க.." என அவன் ஓரக்கண்ணால் ஆத்யாவைப் பார்த்தபடி கூற, ரியாவோ " ப்ச் ஆமா அண்ணா பாருங்களேன்.." என அவனுக்கு ஒத்து ஊதினாள். அதில் ஆத்யாவுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது. அதைக்காட்ட முடியாமல் வலி அவளைப்படுத்தி எடுத்ததில் முகத்தை சுருக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
" வா பிரின்செஸ்..ஹாஸ்பிடல் போகலாம் " என சிரிப்பு மறைந்து தவிப்பான குரலில் அழைத்தான். அதில் சட்டென்று ரியா அவன் முகத்தைப் பார்க்க அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வில் புருவங்களை நெறித்தாள். ஆத்யாவோ தன் தோழியின் முன்னால் பிரின்செஸ் என்று அவன் அழைத்து வைத்ததில் திரு திரு வென முழிக்க, அதையும் தன் மனதில் குறித்துக் கொண்டவள் வெளியில் எதையும் காட்டாமல் நின்றாள்.
" ஹாஸ்பிடல்லாம் வேணாம்..ஒரு பெயின் கில்லர் போட்டா சரியாகிரும் " என ஆத்யா மறுத்துக் கூற, அதில் பல்லைக் கடித்தவன் ரியாவைப் பார்த்து," சிஸ்டர் அவள கூட்டிட்டு வாங்க.. ஹாஸ்பிடல் போகலாம் " என கூற, அவளுக்கும் அதுவே சரியென பட்டது.
" ஆது.. அடம்பிடிக்காம வாடி..கால் கொஞ்சம் கொஞ்சமா வீங்கிட்டு வருது.. ஹாஸ்பிடல் போய் என்னன்னு பாத்துட்டு வரலாம் " என ரியா கெஞ்ச , வின் வின்னென தெறித்த வலியில் மேற்கொண்டு மறுக்கத் தோன்றாது " சரி வா " என தோழியின் கையைப் பற்றிக் கொண்டவள் ஹரி பிரணவை பார்த்தபடியே ரியாவிடம் " நாம மட்டும் போகலாம் " எனக் கூற, ரியா சங்கடமாய் அவனைப் பார்த்தாள்.அவனுக்கு அவள் ஹாஸ்பிடல் செல்ல ஒத்துக் கொண்டதே போதும் என்றிருக்க, "இட்ஸ் ஓகே.. பத்திரமா கூட்டிப் போங்க " என மொழிந்தான்.
அதில் தோழியின் கையைப் பிடித்து மெல்ல அவளைக் கூட்டிக்கொண்டு வெளியில் வந்தவள் ஆட்டோ பிடிக்கப் பார்க்க, ஒன்றுக் கூட நிறுத்தாது சென்றதில் இருவருக்கும் எரிச்சலாய் இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரி பிரணவ் நேரம் ஆக ஆக அவளுக்கு வலி கூடும் என்பதை உணர்ந்து தன் காரை அவர்கள் முன் நிறுத்தினான். அதில், யாரென இருவரும் விழித்துப் பார்க்க, கார் கண்ணாடியை கீழிறக்கிய அவன் இருவரையும் பார்த்து,
" ஆட்டோ பிடிச்சது போதும்..கார்ல ஏறுங்க..பக்கத்துல ஹாஸ்பிடல் ஒன்னு இருக்கு.. நா கூட்டிட்டு போறேன்.." என ரியாவைப் பார்த்து சொன்னாலும் விழிகள் என்னவோ ஆத்யாவை தான் மொய்த்துக் கொண்டு இருந்தது. அவன் கூறியதில் ரியா அவளைப் பார்க்க,
" வேணாம் ரியா..இப்போ கால் கொஞ்சம் பெட்டரா இருக்கு..வீடு பக்கத்துல தானே..நாம நடந்தே போயிரலாம்.". என அவள் அவன் முகத்தைப் பார்க்காது சொல்ல, ரியாவோ இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தாள்.
அவனோ கோபத்தில் முகம் சிவக்க," இப்போ வந்து கார்ல ஏறுரியா.. இல்ல நானே வந்து தூக்கி கார்ல உக்கார வைக்கட்டுமா.. " என காரமாய் வினவ,ரியாவோ ' என்ன டா நடக்குது இங்க'என விழித்தப்படி பார்க்க, அப்போதும் மசியாத ஆத்யா ரியாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு,
" ரியா என்ன டி நின்னு முழிச்சிட்டு இருக்க..வா நாம வீட்டுக்கும் போலாம் " என அழைத்துக் கொண்டிருந்தாள். அதில் சட்டென்று ஹரி பிரணவ் காரில் இருந்து இறங்கினான்.அவன் இறங்கி வருவான் என எதிர்பார்க்காத ஆத்யா அவனை மிரட்சியுடன் பார்த்தாள். ரியாவோ, 'ஐயையோ ' என உள்ளுக்குள் அலறியபடி கார் கதவை திறந்து பின் சீட்டில் அவளை தள்ளி விட்டவள் அவளும் அமர்ந்துக் கொண்டாள். காரில் இருந்து இறங்கியிருந்தவன் ஆத்யாவை முறைத்தபடியே மீண்டும் வந்தமர்ந்து காரை கிளப்பினான்.
ஆத்யாவுக்கு தான் எரிச்சலாய் இருந்தது. இவன் யார் என்னை அதிகாரம் செய்ய..இவனுக்கு யாரிந்த உரிமையைக் கொடுத்தது என மனதிற்குள் பொருமிக் கொண்டே வர, ரியாவோ அவனின் அதிரடியில் சற்று மிரண்டு தான் போயிருந்தாள்.
நேரம் ஆக ஆக வலியும் கூட.. வலித்த இடையைப் பற்றியபடி சீட்டில் தலை சாய்த்து கண்களை மூடியிருந்தாள் ஆத்யா. அவளையே ரியர் வியூ மிரரின் வழியே பார்த்துக் கொண்டு வந்தவன் அவளின் முகம் வலியில் கலங்கி இருப்பதைப் பார்த்து தாளாதவனாய்," கொஞ்சம் பொறுத்துக்கோ பேபி..பக்கத்துல வந்துட்டோம் " என குரல் உள்ளிறங்க கூறினான். கார் அவன் கைகளில் பறந்ததில் ஹாஸ்பிடல் வந்து விட, பிடிக்க சென்ற ரியாவைத் தடுத்தவன் அவனே அவளின் இடையைச் சுற்றி கைப்போட்டு அவனுடன் சேர்த்தணைத்தபடி நடக்க வலியில் அதொன்றும் விளங்கவில்லை அவளுக்கு.
ஹாஸ்பிடலில் அவனைக் கண்டதும் செவிலியர்களில் இருந்து வைத்தியர்கள் வரை அலர்ட்டாகி வணக்கம் வைக்க, ஹாஸ்பிடல் மேனேஜர் ஓடி வந்து," குட் ஈவினிங் சார்..என்ன சார் நீங்களே வந்துருக்கீங்க.. " என அவன் திடீர் விஜயத்தில் எழுந்த பதட்டத்தை குரலில் தேக்கி கேட்க, அதற்கு பதில் கூறாது,
" முதல்ல இவங்களுக்கு ப்ரோபர் ட்ரீட்மெண்ட் குடுங்க " என்றான் அதிகாரமாய்.
" ஷுவர் சார்..நா டாக்டர் கிட்ட சொல்லிடறேன்…" என அரக்க பறக்க ஓடினார் ஹாஸ்பிடல் மேனேஜர். அங்கு அவனுக்கு கிடைத்த மரியாதையில் அவனின் செல்வாக்கு ரியாவுக்கு புரிந்திட, ஆத்யாவோ ஒன்றும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவளை ஒரு ரூமில் அமர வைத்து மருத்துவர்கள் பரிசோதிக்க, அவனோ பொறுமையின்றி,
" என்னாச்சு டாக்டர்..பெருசா ஏதாச்சும் ப்ராப்ளமா.. " எனக் குரலில் பதட்டத்தை தாங்கி கேட்டான் அவனின் பதட்ட குரலில் வியப்பான மருத்துவர் அதை தன் முகத்தில் காட்டாது,
" இல்ல சார்.. பேனிக் ஆகுற அளவுக்கு ஒன்னும் இல்ல..கால்ல கொஞ்சம் வீக்கமும் காயமும் இருக்கு.. அதுக்கு பேண்டேஜ் போட்டா சரியாகும் எண்ட் இப்போ கொடுக்குற ஜெல்ல பெயின் இருக்குற இடத்துல அப்ளை பண்ணா போதும்..மத்தபடி ஒன்னும் இல்ல" என மரியாதையாக கூற, அதை கவனமாய் கேட்டுக் கொண்டவன் நிம்மதியுடன் சரி என்னும் வகையில் தலையாட்டினான்.
கட்டு போடும் போது ஆத்யா வலியில் தேம்ப அவள் பக்கத்தில் அமர்ந்த ரியா அவளின் கையைப் பற்றியபடி,
" ரிலேக்ஸ் ஆது..கொஞ்சம் பொறுத்துக்கோ" என கவலை தோய்ந்த முகத்துடன் கூற, அவளின் மறு பக்கம் நின்றுக் கொண்டிருந்த ஹரி பிரணவ் அவள் அழுவதை காண சகியாதவனாய் அவளின் தோளைச் சுற்றி கைப்போட்டு அவளின் சற்று சதைப் பற்றாக இருந்த புஜத்தை ஆறுதலாய் தடவிக் கொடுத்தான்.
மருத்துவர் அவளுக்கு வலி குறைய மருந்துக் கொடுக்க அதை குடித்தவளுக்கு சிறிது நேரத்தில் வலி சற்று குறைந்தது போல் இருந்தது.
" இப்போ எப்டி இருக்கு டி " என்று கேட்ட ரியாவுக்கு சோர்ந்த புன்னகையை வழங்கியவள்," இப்போ கொஞ்சம் பரவால்ல டி " என்றாள். அப்போது தன் தோளை சுற்றி ஹரி பிரணவின் கையிருப்பதைப் பார்த்தவள் அதை பட்டென்று தட்டி விட்டு அவனை முறைக்க,
" என்ன முறைக்கிற.. டாக்டர கூப்பிட்டு ஊசி போட சொல்லுவேன் பாத்துக்கோ " என அவன் குறும்பாய் மிரட்ட, ஊசி என்றதில் அவள் கண்கள் அங்கும் இங்கும் உருண்டது. அதைப் பார்த்து சிரித்தவன்,"வாய் மட்டும் இருக்கு எட்டூருக்கு.. " என அவள் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டினான்.
அந்நேரம் அவனுக்கு அழைப்பொன்று வந்ததில் அந்த அறையை விட்டு வெளியே செல்ல ஆத்யாவோ, " வீட்டுக்கு போலாம் ரியா.." என சோர்வாக கூறினாள்.
" போலாம் ஆது.. இரு நா பில்ல கட்டிட்டு வீல்சேர் எடுத்துட்டு வரேன் " என நகரப் போக,
" வீல்சேர் வேணாம் ரியா..இப்போ கொஞ்சம் பெட்ரா இருக்கு..நா நடந்து வரேன் " என பெட்டில் இருந்து எழப்போக, அவளை தடுத்தவள்
" அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுடி..நா பில்ல கட்டிட்டு சீக்கிரம் வரேன் " என தோழியின் தூக்கம் சொக்கும் கண்களை பார்த்து சொல்லிவிட்டு வெளியில் வந்தாள். அங்கு அழைப்பை பேசி முடித்து மீண்டும் உள்ளே வர போன ஹரி பிரணவ் ரியா வேகவேகமாய் வருவதைப் பார்த்து,
" என்னாச்சு ரியா..அவ ஓகே தான " என பதட்டமாய் கேட்க, இடைப்பட்ட நேரத்தினுள் அவனின் பதட்டமும் அவளுக்கு பழகியிருந்தது.
" அவ ஓகே தான் அண்ணா..நா ஹாஸ்பிடல் பில் கட்ட போயிட்டு இருக்கேன்"
அதில் மறுப்பாய் தலையசைத்தவன், " ப்ச் அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. அவ ரொம்ப டயர்டா இருக்கா.. ஷீ ஷுட் கெட் சம் ரெஸ்ட்.. சோ வீட்ல உங்க ரெண்டு பேரையும் ட்ராப் பண்றேன் வாங்க " என கூறியபடி ஆத்யா இருக்கும் அறைக்கு வந்தான்.
அங்கு அவள் மெத்தையில் படுத்தபடி விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க, இவன் உள்ளே வந்ததும் மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்களால் களவாடியபடி தன் கையில் இருந்த ஜெல் டியூபை அவள் கையில் திணித்து,
" டெய்லி பெயின் இருக்க இடத்துல அப்ளை பண்ணு பிரின்செஸ்.. அண்ட்.. " என இழுத்தவன் அவள் காதருகே வந்து ரகசியக் குரலில்," அப்ளை சம் ஆன் யுவர் ஹிப் டூ..அந்த ப்ளேஸ் கொஞ்சம் கூட டேமேஜ் ஆகுறதுல எனக்கு இஷ்டமில்ல.." என்றான். அதில் அவனின் நெஞ்சில் கைவைத்து பின்னால் தள்ளியவள், அவனை முறைத்தபடி" ரியா போலாம் வாடி " என அவள் கையைப் பற்றியபடி மெல்ல நடக்க,
அவளின் முறைப்பில் அவளைப் பார்த்து உல்லாசமாய் சிரித்தபடி முன்னே சென்றான் அவன். ஹரி பிரணவின் சிரிப்பையும் ஆத்யாவின் முறைப்பையும் கண்டும் காணாததுப் போல் வந்தவள் இதைப்பற்றி தன் தோழியிடம் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அவன் காருடன் வந்ததும் ரியா அவளை ஏறச் சொல்ல,
" திரும்பவும் கார்லயா என்னால முடியாது. நாம ஆட்டோ ல போகலாம்.." என அடம்பிடித்தாள். ரியாவோ
" அடியே ஆது…ஏற்கனவே நீ டயர்டா இருக்க.. மழை வேற வர்ற மாறி இருக்கு டி..ஆட்டோ வருமான்னு கூட தெரில.. அடம்பிடிக்காம வாடி " எனக் கெஞ்ச, லேசாய் மழை தூறுவதுப் போல் இருக்கவும் வேண்டா வெறுப்பாய் வந்து காரில் அமர்ந்துக் கொண்டாள். ரியா பாதையை சொல்ல சொல்ல காரை செலுத்தியவன் வீட்டின் முன் காரை நிறுத்தி திரும்பிப் பார்க்க ஆத்யாவோ களைப்பில் நன்றாய் உறங்கி இருந்தாள். அதில் அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் ரியா அவளை எழுப்ப போனதில் அவளை தடுத்தான்.
" நோ நோ அவ தூங்கட்டும்..நா பாத்துக்கிறேன்.. " என அவளை கைகளில் ஏந்தப் போக, ரியாவோ பதறி, " அண்ணா வேணாம்.." என சொல்ல அதில் ரியாவைப் பார்த்தவன்,
" ஷி மீன்ஸ் த வேர்ல்ட் டு மீ ரியா.. ஐ லவ் ஹெர் சோ மச்.. இத கேக்குறத்துக்கு உனக்கு புதுசா இருக்கலாம்.. ஆனா என்னோட லவ் புதுசு இல்ல " எனக் கூறியபடி அவளை மென்மையாய் கையில் ஏந்திக் கொண்டவன் வீட்டை நோக்கி நடக்கலானான். அவன் கூறியதில் அவனின் நேசத்தின் ஆழத்தை கண்டவள் தன் தோழிக்கு நல்ல வாழ்க்கை அமையப்போவதை நினைத்து மகிழ்ந்தபடி அவன் பின்னே ஓடினாள்.
தன் பிஞ்சு முகத்தை அவன் கழுத்தில் பாந்தமாய் புதைத்தப்படி அவள் சீராய் விட்ட மூச்சுக்களில் சிலிர்த்த ஹரி பிரணவ் அவளின் தூக்கம் கலையாதவாறு மென்மையாய் கட்டிலில் கிடத்தினான். அவளின் அடிப்பட்ட காலை தலையணை ஒன்றில் வைத்தவன் போர்வையால் அவளைப் போர்த்துவிட்டு அவளின் கூந்தலை வருடியபடி நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தான். அங்கு நின்றிருந்த ரியாவைப் பார்த்தவன்,
" டேக் குட் கேர் ஆஃப் ஹெர் " என சொல்ல, அதில் தலையாட்டியவள், " ஷுவர் அண்ணா" என்றாள். அதில் அவளைப் பார்த்து நட்பாய் சிரித்து, " தேங்க் யூ " என கூறிவிட்டு சென்றுவிட்டான்.
தொடரும்…
This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing





