பிள்ளை வளர்ப்பு எனும் கலை 💚
பிள்ளை வளர்ப்பு எனும் கலை
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தன் பிள்ளை தன்னோடு நல்ல உறவில் இருக்கிறது என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியான ஒரு விடயமே !
ஒரு சில பெற்றோரின் எதிர்பார்ப்பும் கூட !
பிள்ளை வளர்ப்பில் தானும் ஒரு சாதனையாளன் என்ற உணர்வையும் இது ஏற்படுத்தலாம் ..
பெற்றோர்களுடன் நல்ல உறவை வளர்த்து கொள்வது பெற்றோர்களுக்கு மட்டுமா பயனளிக்கும்?
இல்லை , நிச்சயமாக அது பிள்ளைகளுக்கும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
உங்களுடன் உங்கள் பிள்ளையின் உணர்ச்சிபூர்வமான தொடர்பு, அவர்கள் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், புரிந்து கொள்ளப்படுவதையும் உறுதி செய்கிறது.
இவ்வாறான பிணைப்பு திடீரென உருவாக்க கூடிய ஒன்றும் அல்ல , ஆரம்பத்திலிருந்தே அடித்தளமிடப்பட வேண்டியே ஒன்றே !
உங்கள் பிள்ளையுடன் உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால்,
உங்கள் பிள்ளையுடன் முடிந்த அளவு நேரம் செலவிடுங்கள்.
சிறிய பிள்ளைகள் இருந்தால் சேர்ந்து விளையாடுங்கள் . குழந்தைகளுடன் இணைந்து மகிழ்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. குழந்தைகள் விளையாட்டின் மூலம் முக்கியமான வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் இதன்போது அவர்களிடம் தோற்கும் நிலை ஏற்பட்டால் தோல்வியை எவ்வாறு நேர்மறையாக் ஏற்றுக்கொள்வது , என்பதைக் கற்றுக்கொள்வது போன்ற நல்ல சமூக திறன்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் பணியாற்ற அவர்களை ஊக்குவிக்கவும்.
குழந்தைகள் தங்கள் கவனத்தை ஈர்க்கும் திறன், சமூக திறன்கள், படைப்பாற்றல், அவர்களின் உணர்ச்சிகளை செயலாக்கும் திறன் மற்றும் அறிவுசார் திறன்களை விளையாட்டின் மூலம் வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகிறது .
கூடுதலாக, உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களுக்கு தொடர்ந்து கட்டளைகளை இடும் எதிரியாக இல்லாமல் உங்களை ஒரு நண்பராக பார்க்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.
இருப்பினும், ஒரு விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் முன், உங்கள் பிள்ளை அதில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறதா ? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அது போல உங்கள் பிள்ளை கட்டிளமை பருவத்தை அடைந்தால் பேசுங்கள் , மனம் விட்டு பேசுங்கள் ..அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறியுங்கள் . தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதை நடை முறைப்படுத்துங்கள் .
அவர்களின் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுவதாக அவர்களை உணர வையுங்கள் .
அவர்களின் நாள் எப்படி சென்றது என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்வதை அவர்களுக்கும் உங்களுக்குமான நல்ல பிணைப்பை ஏற்படுத்துகிறது. பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து உணவு உண்ணும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கத்தை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது; (வலுவான மன, உணர்ச்சி மற்றும் சமூக திறன்கள்; சிறந்த நடத்தை; மற்றும் உயர் கல்வி சாதனை ).
நடைமுறைக்கு சாத்தியமான / யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருங்கள்
உங்கள் பிள்ளையை பற்றிய உங்கள் எதிர்கால கனவு உயர்வாக இருப்பதில் எந்த தவறும் இல்லை இருப்பினும் குழந்தைகளின் கல்வியில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது பாடசாலையில் சிறந்த முடிவுகளைப் பெற வழிவகுக்கும் மற்றும் கடினமான பணிகளில் குழந்தைகள் நீண்ட காலம் நீடிக்க உதவும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஆனாலும் அதிக எதிர்பார்ப்புகளும் சமூக பின்னடைவுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கிறது . உங்கள் பிள்ளையின் திறமையின் மீது எதிர்பார்ப்பை வையுங்கள் .
அவர்களின் செயலில் அதிகம் விமர்சனம் செய்யவே வேண்டாம் , அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் மட்டுமல்ல, அவர்கள் யார் என்பதன் அடிப்படையிலும் நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளை உணருவது முக்கியம்.
அவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பை வழங்குங்கள் .
அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள் . அவர்களின் தன்னம்பிக்கையை அது மெல்ல மெல்ல கொன்று விடும்.
.
உங்கள் பிள்ளையை உங்களின் பிரதிகள் என்பதாலேயே நீங்கள் நேசிக்கிண்றீர்கள் என உணரச் செய்யுங்கள்
தொடரும் .
Asna Sueetha Mohamed Faizal
This writing is the work of Asna Sueetha, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing