கதைகள்

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 7

பசியால் தலை கிறுகிறுக்க வீட்டில் நுழைந்ததுமே முதல் வேலையாய் தட்டு உடையும் அளவிற்கு சோற்றை போட்டுக் கொண்டு, சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள் ஆத்யா.

ஒரு வாய் சாப்பிட்டதும் அடைத்திருந்த காதும், மங்கலாய் தெரிந்த கண்ணும் பழைய நிலைக்கு திரும்பி விட,' அப்பாடா ' என நிம்மதியாய் மூச்சுவிட்டபடி சாப்பிட்டு முடித்துவளுக்கு கண்கள் சுழற்றியபடி வந்ததில் சோஃபாவிலே கால்களை நீட்டி உறங்கிவிட்டாள்.

அர்த்தமே இல்லாது தோன்றிய கனவுகளுடன் சுகமாய் சஞ்சரித்தபடி துயில் கொண்டிருந்தவள் மீது ஏதோ ஜில்லென்று விழுந்ததில் பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் தன் முன்னே கையில் ஜக்குடன் முறைத்துக் கொண்டிருந்த ரியாவை பார்த்து விழித்தாள்.

" ஹே.. ஆபீஸ் டைம் ல இங்க என்னடி பண்ற.." என தூக்கம் கலையாத விழிகளுடன் கேட்க,

" என்னது ஆபீஸ் டைமா.. சாயந்திரம் ஆறு மணியாகுது..இங்க ஒருத்தி டென்ஷன்ல இருக்கேன்… உனக்கு தூக்கம் கேக்குதோ " என 'படபட' வென பொறிந்தாள் ரியா.

" டென்ஷனா என்ன டென்ஷன் டி " என தலையை சொரிந்தபடி ரியாவை பார்த்தவளுக்கு தூக்க கலக்கமெல்லாம் பறந்து விட்டது. " அடியே ரியா… என்ன டி கோலம் இது" என அதிர்ச்சியுடன் கேட்டபடி அவளை மேலும் கீழுமாய் பார்த்தாள்.

தலை முடியில், முகத்தில், ஆஃபீஸ் உடையிலென எல்லா இடத்திலும் சேறு அப்பியிருக்க, ஏதோ சேற்றில் புரண்ட ஜீரோ சைஸ் கரடி போல் இருந்தவளை பார்த்ததும் 'குபுக் ' என சிரிப்பு வந்து விட்டது அவளுக்கு.

எங்கே சிரித்தாள் கையில் வைத்திருக்கும் ஜக்கினாலேயே தன் தோழி மண்டையை பதம் பார்த்து விடுவாள் என்ற பயத்தில் வந்த சிரிப்பை விழுங்கிக் கொண்டாள்.

தோழி கேட்ட கேள்வியில் கடியான ரியாவோ , " ஆஆ..அரிசி மா கோலம்.. கேக்குது பாரு கேள்வி..நா பாட்டுக்கு சிவனேன்னு தான் டி இருந்தேன்..அவன் தான்.." என கண்ணை கசக்கியவளை புரியாது பார்த்தவள்,

" அவன்னா எவன் டி "

" அதான் டி..அன்னைக்கு சொன்னேனே.. ஷாப்பிங் ஆர்வத்துல கவனிக்காம ரோட க்ராஸ் பண்ணி அந்த பல்சர் ல வந்த பன்னிக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்னு..அவன் தான் டி " என சொல்லிவிட்டு கண்ணைக் கசக்குவதை தொடர, ஆத்யாவுக்கோ தலையும் புரியாது வாலும் புரியாத நிலை.

" அவன திரும்ப பாத்தியா "

" பாத்ததுனால தானே சேத்துல அடி வாங்கிட்டு நிக்கிறேன் "

" ஐயோ சொல்றத தெளிவா தான் சொல்லேன்..ஒரு மண்ணும் புரியல " என ஆத்யா கடுப்பாகி கத்தி விட்டாள்.
அவளின் கத்தலில் நடந்ததை கூறத் தொடங்கினாள் ரியா.

ஆபீஸ் முடிந்து பஸ் ஸ்டேண்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்தவளுக்கு சாலையை கடக்கும் போது ஏனென்று தெரியாது அன்று நடந்த நிகழ்வு நினைவில் வந்தது.அதில் மூக்கு நுனி சிவக்க,

" அன்னைக்கு என்னைய ரோட்ல வெச்சி அசிங்கப்படுத்திட்டேல..இரு எனக்கொரு சான்ஸ் கிடைக்கட்டும்.. உன்ன வச்சி செய்றேன்.அப்போ தெரியும் இந்த ரியா யாருன்னு " என வீரமாக முணுமுணுத்துக் கொண்டு நடந்தவள் ' தடால் ' என கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டபடி திரும்பிப் பார்த்தாள்.

சற்று தூரத்தில் வீதியில் பைக் ஒன்றுடன் ஒரு ஆடவனும் விழுந்துக் கிடக்க, அதில் பதறிய ரியாவும் ஓடினாள் அவ்விடத்தை நோக்கி. அருகில் சென்றவளுக்கு அது அந்த பல்சர் ஆசாமி என்று தெரிந்ததும் வியப்பில் கண்ணை விரித்தவள் பின் ' கெக்க பெக்க ' வென சிரிக்க ஆரம்பித்தாள்.

தன்னருகே கேட்ட சிரிப்பு சத்ததில் வலியில் முகம் சுருக்கி இருந்தவன் நிமிர்ந்து பார்க்க அங்கு ரியாவைக் கண்டதும் வியப்பில் புருவங்களை உயர்த்தியவன் அவள் சிரித்ததில் கண்களை சுருக்கி முறைத்தான்.
அவளோ சிரித்தப்படி," என்ன முறைக்கிற..அன்னைக்கு இதே ரோட் ல தானே என்ன அந்த திட்டு திட்டின..இப்போ பாத்தியா " என மீண்டும் கேலி செய்து நகைக்க ஆரம்பித்தாள்.

அவனின் கைகளோ நன்றாய் சிராய்ந்து இருக்க அவன் காலொன்றில் பல்சர் மொத்தமாய் விழுந்திருந்தது.அதைப் பார்த்ததும் அவள் என்ன நினைத்தாளோ,

" பைக்க வச்சுகிட்டு சர்க்கஸ் காட்டினா இப்டி தான் ஆகும்..என்னமோ இவங்கிட்ட மட்டும்தான் பைக் இருக்க மாறி " என அவனை வம்பிழுத்தப்படி தட்டு தடுமாறி பைக்கை மெல்ல தூக்க ஆரம்பித்தாள்.

அவள் கூறியது அவன் காதில் விழுந்து தொலைத்ததில் ஏற்கனவே கைகளின் எரிச்சலிலும் அவளின் சிரிப்பிலும் கொதித்து போயிருந்தவன்,

" ஏய் கிறுக்கச்சி.. நீ பாத்தியா நா சர்க்கஸ் காமிக்கிறத…அன்னைக்கு நீ பாஞ்சியே நாய் மாறி..அதே மாறி இன்னைக்கு ஒரிஜினல் நாய் பாஞ்சிருச்சு… அதுல கண்ட்ரோல் மிஸ்ஸாகி விழுந்துட்டேன்.. ச்சே எல்லாம் என் தலையெழுத்து " என தலையில் அடித்துக்கொண்டான்.அவ்வளவு நேரம் சிரமப்பட்டு பைக்கை பாதி வரை தூக்கி இருந்தவள் அவன் தன்னை நாய் என்றதும் மீண்டும் அதை அவன் காலிலே போட்டாள்.

" ஐயோ அம்மா…அடியே பைத்தியக்காரி " என அவன் அலற, ரியாவோ கோபத்தில் மூசு மூசென மூச்சு வாங்கியப்படி," ஏன்டா… என்ன பாத்தா நாய் மாறி இருக்கா.. போனா போகுதுன்னு ஹெல்ப் பண்ண வந்தா..ரொம்ப தான் பேசுற..இங்கேயே கெடந்து சாவு" என கருவியப்படி நடக்க ஆரம்பித்தாள்.

அவனுக்கோ வலி உயிர் போனது. அந்த நேரத்தை பார்த்து சாலையில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாதிருக்க " ஷிட் " என முனகியபடி மெல்ல மெல்ல பைக்கை அப்புறப்படுத்தி எழுந்து நின்றான். பைக் விழுந்த காலை உதறிக் கொண்டவன் வண்டியில் ஏறி அமர்ந்தபடி,

"பழிவாங்கிறிச்சு பிசாசு.. " என பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டலானான். கால்வலி வேறு அவனை படுத்திக்கொண்டிருக்க முயன்று ஓட்டிக் கொண்டிருவனின் கண்ணில் பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்த ரியா தென்பட்டாள்.
அவளும் பைக் வரும் சத்தம் கேட்டு திரும்பி அவனை கோபமாய் முறைக்க, அவனோ

" இரு டி..உன்ன என்ன பண்றேன் பாரு " என கருவியப்படி பைக்கை வேகமாய் செலுத்தியபடி அவள் நின்றுக் கொண்டிருந்த பக்கத்தில் சேறு நிறைந்து இடத்தில் வண்டியை விட, சேற்றினால் தொப்பலாகி போனாள் ரியா.

" டேய் லூசுபயலே..நில்லு டா " என இவள் வெறியாகி கத்த அவனோ திரும்பி பாராமல் சென்று விட்டான். இதைக் கேட்ட ஆத்யாவோ விழுந்து விழுந்து சிரிக்க, " சிரிக்காத ஆது..நா கொலவெறில இருக்கேன் " என ரியா காய்ந்தாள்.

" எப்டி எப்டி..நீ ஒன்னுமே பண்ணாம சிவனேன்னு இருந்தியா.. அவன் காலுல பைக்க போட்டது யாரு.. நானா " என கேட்க,

" அவன் மட்டும் என்ன நாய் சொல்லலாமா" என மூக்கை உறிஞ்சியப்பிடி கேட்டாள் மற்றவள். உண்மைதானே அவன் எப்படி தன் தோழிக்கு நாயென்று கூற முடியும். அதை நினைத்து ஆத்யாவுக்கும் சினமேற,

" எப்படி சொல்லலாம்…அதெல்லாம் சொல்ல முடியாது… என்ன தைரியம் இருந்தா அவன் உனக்கு நாய்னு சொல்லி இருப்பான். கால்ல பைக்க போட்டதுக்கு பதிலா அவன் தலையில போட வேண்டியது தான.." என குரலில் சினம் கொப்பளிக்க கூற,

" எங்கடி.. அவன் பைக்க பாதி தூக்குறதுக்குள்ள எனக்கு மூச்சு வாங்கிருச்சு.. அவன மாதிரி அவன் பைக்கும் எருமை மாடு கணக்கா இருக்கு. " என ரியா கடுப்பாக கூறினாள்.

" விடு டி. அடுத்தவாட்டி அவன நேர்ல பாத்தா ரெண்டு பேரும் சேர்ந்து பைக்க தூக்கி அவன் தலையில் போட்டுடலாம் ஓகேவா.." என தோழியின் கன்னம் தட்டி சொல்ல, அவளும் " சரி டி " என சமத்தாய் தலையாட்டினாள்.

சேற்றை ரியா மீது வாரியிரைத்து விட்டு சென்ற பல்சர் ஆசாமி வேறு யாருமல்ல.. ஆத்யா இன்டர்வியூ சென்ற கம்பனியில் அவளுக்கு கிடைத்த அன்பு அண்ணன் விக்ராந்த்தே தான்.

அவளைக் கோபப்படுத்திய திருப்தியில் கை வலி,கால் வலி எல்லாம் எங்கே பறந்து போனது என்றே தெரியவில்லை அவனுக்கு. விசிலடித்தப்படி தன் வண்டியை பார்க் செய்தவன் தான் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை நோக்கி நடக்கலானான்.

லிஃப்டினுள் ஏறியதும் ஆசுவாசமாய் மூச்சைவிட்டப்படி கைக்குட்டையால் முகத்தை துடைத்தவன், அப்போது தான் கவனித்தான் தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் மஞ்சுளா பாட்டி கை இரண்டிலும் சாமான்கள் நிரம்பிய பைகளை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டிருப்பதை.

" ஐயோ பாட்டி..இங்க கொடுங்க அத.. உங்களுக்கென்ன இளமை திரும்புதுன்னு நினைப்பா.. போன வாரம் தானே ஹாஸ்பிடல் போய் டாக்டர்க்கு சலாம் போட்டுட்டு வந்தீங்க " என திட்டியப்படி பைகளை தூக்கிக் கொண்டான். அதில் சிரித்த அவரோ,
" வீட்ல சாமான் எல்லாம் தீர்ந்திருச்சு கண்ணா. அதான் வாங்கிட்டு வரேன் " எனக்கூற,

" எனக்கொரு கால் பண்ணிருக்கலாமே பாட்டி.. " என உரிமையாய் கோபித்தபடி வீட்டினுள் சாமான்கள் நிரம்பிய பையை வைத்தான். அவனின் முகத்தை வழித்து முத்தமிட்டவர்,

" உன்னோட இந்த குணம்னால தான் அபார்ட்மென்ட்கே உன்ன பிடிக்குது..நல்லா இருப்பா " என அவன் தலையில் கை வைத்து சொல்ல, அதில் அழகாய் புன்னகைத்தவன் அவரிடம் விடைபெற்று எதிரே இருந்த தன் வீட்டிற்கு சென்றான்.
உள்ளே நுழைந்ததுமே, " விக்கி மாமா " என கூவியப்படி சின்ன உருவம் ஒன்று அவன் மீது தாவ, அதை லாவகமாக தூக்கிக் கொண்டவன்,

" உனக்கு எத்தனவாட்டி சொல்லிருக்கேன் இப்டி வேகமா வந்து தாவாத தாவாதன்னு.. ஏன்டா என்ன பாத்தா மட்டும் எல்லாரும் தாவுறதையே குறியா வச்சிருக்கீங்க " என புலம்பியப்படி சின்னவனை தொம் என சோபாவில் போட்டான். அதில் அரிசி பற்கள் தெரிய 'கலகல' வென சிரித்தான் விக்ராந்தின் அக்காவான வினிதாவின் தவப்புதல்வன் வியன்.

" மாமா… ச்சோக்கி எங்க " என கைகளை நீட்டி கேட்க , அதில் தலையில் அடித்த மற்றவனோ' ஐயையோ மறந்துட்டேனே..அழுது ஊர கூட்டுவானே.. ' என பயந்தப்படி,

" டேய் வியன் பையா…இன்னைக்கு மாமாக்கு ஹெவி ஒர்க் டா..டயர்ட்ல மாமா மறந்துட்டேன்..உனக்கு நாளைக்கு நிறைய சாக்லேட்ஸ் ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன் " என சமாதான படுத்த, அவ்வளவுதான் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டான் வியன். அதில் பதறிய விக்கியோ,

" டேய் தடியா அழாதடா..உன் அம்மாக்காரி வந்து என்ன தான் அடிப்பா " என அவனின் வாயை மூடும்போதே கையில் கரண்டியுடன் வந்தாள் விக்கியின் அக்காவான வினிதா.

" டேய் இவளோ நேரம் அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தான்..வந்ததும் வராததுமா அவன அழ வச்சிட்டியா.. " என திட்டியப்படி அவனின் புஜத்தில் கரண்டியால் ஓங்கி இரண்டு வைக்க, அதில் அலறிய விக்கியோ அவள் கையில் இருந்த கரண்டியை பறித்து அவளின் தலையில் அடித்தான். வலி தாளாத வினிதாவும் விக்கியின் தலை முடியை கொத்தாக பற்ற, அவனோ அவள் கையில் கடித்து வைத்தான். நொடியில் அந்த இடம் மீன் மார்கெட் போல் ஆகி விட, அவ்வளவு நேரம் அழுதுக் கொண்டிருந்த வியனோ இவர்களின் சண்டையை கண்டு உருண்டு புரண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

சத்தம் கேட்டு ரூமில் இருந்து ஓடி வந்தான் வினிதாவின் காதல் கணவனும் விக்கியின் அன்பு மாமனுமானா ஆகாஷ். அவன் கையில் இரண்டு வயது நிரம்பிய வியனின் குட்டி தங்கை அவந்திகா அமர்ந்திருந்தாள். பதறியபடி வந்த ஆகாஷோ கையில் இருந்து அவந்திக்காவை பூப்போல் சோபாவில் வைத்தவன் அடித்து புரண்டு கொண்டிருந்த அக்காவையும் தம்பியையும் பிரித்து விடலானான்.

" பைத்தியங்களா… ஏழு கழுதை வயசாகுது இன்னும் அடிச்சுக்கிட்டு சாகுறீங்க…உங்க கூட டெய்லி இதே ரோதனையா போச்சி..டேய் விடுடா அவளை… அடியே நீயாச்சும் விடேண்டி…உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தான் மாட்டிக்கிட்ட முழிக்கிறேன் " என கத்தியபடி இருவரையும் ஒவ்வொரு திக்கில் தள்ளி விட்டுக் கொண்டிருந்தவனுக்கும் சில பல அடிகள் விழுந்தன. அதில் தள்ளி இருந்த சோபாவில் அவந்திகாவின் பக்கத்திலேயே விழுந்தவனை பார்த்து சிரித்தது அந்த குட்டி வாண்டு.

" ஏன் பட்டு… டேடியோட நிலைமைய பாத்தா உனக்கு சிரிப்பா இருக்கா " என தன் செல்வ மகளிடம் அப்பாவியாய் கேட்டபடி திரும்ப, இப்போது வினிதா விக்கியை குனிய வைத்து அவன் முதுகிலே மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தாள். அதில் தலையில் அடித்துக் கொண்ட ஆகாஷ், போட்டோக்களில் சிரித்தபடி இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விக்கி வினிதாவின் தாய் தந்தையான லக்ஷ்மி மற்றும் மகேஸ்வரனை பார்த்து,

" என்னைய இதுங்க கிட்ட கோர்த்து விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா போய் சேர்ந்துட்டீங்கல்ல " என புலம்பிய நேரம் விக்கி தள்ளி விட்டதில் வீசுப்பட்டு வந்த வினிதா ஆகாஷின் மீது விழ அவளுக்கு அடி ஏதும் படாத வகையில் அணைத்து பிடித்துக் கொண்டான் அவன். மீண்டும் விக்கியின் மேல் பாய போனவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன் அவள் காதில்,

" ப்ளீஸ் டி.. சத்தியமா என்னால முடியல " என கெஞ்சும் தொனியில் கூற, அதில் திரும்பி அவனை பார்த்தவள்,

" அப்போ அவன சாரி சொல்ல சொல்லு " என்றாள் மூச்சிரைக்க, " என்னது சாரி சொல்லனுமா..அதுக்கு வேற ஆள பாரு " என அலட்சியமாய் முகத்தை வெட்டியப்படி நடந்தவன் அவள் உணரும் முன்னே சோஃபாவில் இருந்த தலையணை ஒன்றை அவள் மேல் வீசி எறிந்து விட்டு தன் ரூமிற்கு வந்து கதவை சாத்திக் கொண்டான்.

' அப்பாடா..நல்ல வேல ' என ஆசுவாசமாய் மூச்சு விட்டவனுக்கு உடம்பெல்லாம் 'கசகச' வென இருந்ததில் குளியலறையில் புகுந்து கொண்டவன் ஷவரை திறந்து உடலை நனைக்க ஆரம்பித்தான். ஷவரில் இருந்த நீர் பூந்தூரலாய் அவன் மேனியை தழுவ, அவ்வளவு நேரம் அடங்கி இருந்த கை கால்களின் எரிச்சலும் வலியும் மீண்டும் எழ ஆரம்பித்தது. அதில் "ஸ்ஸ்..ஆ" என சன்னமாக முனகியவனுக்கு ரியாவின் நினைவும் கூடவே எழுந்தது.

' கிறுக்கச்சி ' என அவனின் இதழ்கள் முணுமுணுக்க இருவரின் வாக்குவாதமும் சேர்ந்தே அவன் மனதில் படமாக விரிய ஆரம்பித்தது. அந்நேரம் அவனின் மனசாட்சியும் " நீ அவள நாய்ன்னு சொல்லியிருக்க கூடாது " என கடிய அவனும் அதை அமோதித்தவனாய்,
" ஆமா..நா அப்டி சொல்லியிருக்க கூடாது..திரும்ப அவள மீட் பண்ணா ஒரு சாரி சொல்லிறனும் " என தனக்குள் கூறிக் கொண்டான்.

அந்நேரம் ரியாவும் அவனையே தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவளின் மனசாட்சியும்,
" நீ பைக்க அவன் கால்ல போட்டிருக்க கூடாது..அவன் ஏற்கனவே பெயின் ல தானே இருந்தான் " என இடித்துரைக்க, அதில் அமோதிப்பாய் தலையாட்டியவள்,

" ஆமா…அப்டி பண்ணிருக்க கூடாது..திரும்ப அவன மீட் பண்ணா ஒரு சாரி சொல்லிறனும் " என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அவர்களுக்கு தெரியாது இருவரும் சந்திக்கும் நேரத்தில் மீண்டும் இருவரிடையே பனிப்போர் ஒன்று உருவாகப்போவதை.

தொடரும்….

This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கவியாழினி

கவியாழினி2 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 6தங்க நிற டஸ்ட் ஊறிய ஜெல் பேனையினால் அந்த சிறு கார்டின் நடுவே," A little Rapunzel to my beautiful princess " என அழகாய் எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் இது தனக்கு…

கதைகள்7 min read
கவியாழினி2 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 5அழகாக சிரித்துக் கொண்டிருந்த அவனின் புகைப்படத்தை பார்த்ததும்,' இவனா ' என மனம் அதிர்ச்சியில் கூவியது.' இவனுக்கு எப்டி என்னோட நம்பர் கிடைச்சது. ஷாப்ல நடந்தது இவனுக்கு எப்டி தெரியும். அவன் அங்க தான்…

கதைகள்7 min read
கவியாழினி3 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 4ஜில்லென்று ஏசி காற்று இருவரின் உடலையும் தழுவ அதனை சுகமாய் அனுபவித்தவாறே கையில் பப்பிள் டீசகிதம் அந்த ஷாப்பிங் மோலை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.ஹரி பிரணவினால் ஆத்யாவுக்கு ஏற்பட்ட டென்ஷனும், பல்சர்…

கதைகள்6 min read
கவியாழினி4 days ago

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 3மெல்ல நாவலை எடுத்துக்கொண்டு நகர எத்தனித்தவளை அவனின் " எக்ஸ்கியூஸ் மீ " என்ற குரல் தடுத்து நிறுத்தியது.திருதிருவென கண்ணை உருட்டியபடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் கூர்விழிகள் முதலில் வியப்பில் விரிந்து பின் சுவாரசியமாய்…

கதைகள்5 min read

More in கதைகள்

See all