அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 5
அழகாக சிரித்துக் கொண்டிருந்த அவனின் புகைப்படத்தை பார்த்ததும்,' இவனா ' என மனம் அதிர்ச்சியில் கூவியது.
' இவனுக்கு எப்டி என்னோட நம்பர் கிடைச்சது. ஷாப்ல நடந்தது இவனுக்கு எப்டி தெரியும். அவன் அங்க தான் இருந்தானா ' என மனம் அதன் பாட்டிற்கு சந்தேகங்களை அடுக்கிக்கொண்டே செல்ல,
அவளின் விழிகளோ அலைபேசியின் தொடுதிரையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
" உன்ன தான் " என முறைப்பதுபோல் எமோஜியுடன் வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அவளுக்கு பதட்டம் மறைந்து கோபம் வந்தது.
' நா ஏன் இவனுக்கு பதில் சொல்லனும். என்னமோ நா அவனோட கேர்ள் பிரெண்ட் மாறி மிரட்றான்' என வெளிப்படையாய் முணுமுணுத்தவள் போனை அணைத்து விட்டு படுத்துவிட்டாள்.
மீண்டும் வந்த ' டிங் ' என்ற மெசேஜ் சத்தத்தில் கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தவள் பட்டென்று கண்களை திறந்தாள்.
ஒரு பக்கம் மூளையோ ' பார்க்காதே பார்க்காதே ' என்று கத்த, மறுபக்கம் மனமோ ' சும்மா பாரு ' என தூண்டியது.
அதில் மீண்டும் போனை எடுத்து அவனின் சாட்டினுள் நுழையாது மேலோட்டமாக குறுஞ்செய்தியை வாசித்தாள்.
" அவன் மேல இருந்த கோபத்துல உன்ன திட்டிட்டேன். சாரிடா " என அவன் அனுப்பியிருந்ததை பார்த்து அவளுக்கு என்ன ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. யாரென்றே தெரியாத ஒருவன் எப்படி தன்னிடம் இவ்வளவு உரிமையாக பேசுகிறான் என அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே,
" ஓய்.. தூங்கிடியா " என சிரித்த எமோஜியுடன் மீண்டும் ஒன்றும் வந்து விழ,
' இவன ' என அவள் பல்லை கடித்து முடிப்பதற்குள், " ஓகே தூங்கு டா.. குட் நைட் " என சிவப்பு நிற ஹார்ட்டுடன் இன்னுமொன்று வந்து விழுந்தது.
" என்ன தைரியம் இவனுக்கு. ஹார்ட் அனுப்புறான். நேர்ல மட்டும் மீட் பண்ணட்டும் தலையிலேயே கொட்டுறேன்." என வாய்க்குள் அவனை திட்டியவள் மனசாட்சியின்,
' உனக்கு ஹைட் இருக்கா ' என்ற கேலியில்," நா ஸ்டூல் வச்சு அதுல ஏறி நின்னு கொட்டுவேன். நீ உன் வாய மூடு. " என உணர்ச்சி வசப்பட்டு கத்திவிட்டாள்.
" யார டி மூட சொல்ற " ரியாவின் உளறலான குரலில் ' ஐயோ ' என பெட் ஷீட்டை முகம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
என்னதான் அவனை கோபமாக திட்டினாலும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மனதினுள் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் அந்த உணர்வை விரும்பவும் இல்லை என்பது வேறு கதை.
இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,
இன்ஸ்டாகிராமில் வந்த ஜாப் வேகன்சி போஸ்ட் ஒன்றைப் பார்த்து அதற்கான நேர்முகப்பரீட்சைகாக வந்திருந்தாள் ஆத்யா.
பல சதுர அடிகளை தனதாக்கிக் கொண்டு நவீனத்தின் உச்சமாய் கடல் போல் பரந்து விரிந்திருந்து அந்த ஸென்வோரா( zenvora ) குரூப் ஆஃப் கம்பெனீஸ்.
ஒவ்வொரு தளமாய் அவளின் கண்கள் கீழிருந்து மேலாக அளவெடுக்க உச்சத்தில் இருந்த தளங்களை பார்க்க முடியாதவாறு அவளின் கண்கள் வெயில் பட்டு கூசியது. கதிரவனின் ஒளிப்பட்டு ஒவ்வொரு தளங்களிலும் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடிகள் ஜொலிக்க தேவலோகம் போல் இருந்த அந்த இடத்தை பார்த்து மலைத்து நின்றாள் அவள்.
' வாவ்வ்…அமேசிங் ' என கண்கள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தவளின் தோளை யாரோ தட்டுவது போல் இருக்க சட்டென்று திரும்பிப்பார்த்தாள். அங்கு வாட்டசாட்டமாய் ஒரு இளைஞன் இதழ்களில் சிநேக புன்னகையை ஏந்தி நின்றிருந்தான்.
" ரொம்ப நேரமா இங்கேயே நிக்கிறியே, ஏதாச்சும் ஹெல்ப் வேணுமான்னு கேக்க இவ்ளோ நேரம் உன்ன நாக்கு தேய கூப்பிட்டுடு இருக்கேன்..நீ என்னனா பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாறி பில்டிங்கையே வெறிக்க வெறிக்க பாத்துகிட்டு இருக்க." என சிரிப்பு மாறாமல் அவளை கேலி செய்ய,
திடீரென ஒருவன் தன் முன்னே வந்து கேலி பேசியதில் அலர்ட் ஆன ஆத்யாவோ தன் விழிகளால் அவனை ஸ்கேன் செய்தாள். உதட்டில் கல்மிஷமில்லாத சிநேக புன்னகையும் கண்களில் தெரிந்த கண்ணியமும் அவளின் ஸ்கேன் பார்வையில் இருந்து சிநேக பார்வைக்கு தாவச்செய்தது.
அவனின் இயல்பான பேச்சு விகல்பம் இல்லாத ஒரு தோழமையை உணர்த்தியதில் அவளும் இயல்பாய் பேச ஆரம்பித்தாள். அவனின் கூற்றில் ஒரு கண்ணை சுருக்கி அசடு வழிந்தவள் தான் வியந்த அழகை சுட்டிக்காட்டி,
" ரொம்ப அழகா இருக்கு " என முகம் விகசிக்க கூறினாள். அதில் சிரித்தவன்,
" இங்க ஃபைவ் இயர்சா ஒர்க் பண்றேன்.. இன்டர்வியூ வர்ற எல்லாருமே இத தான் சொல்லுவாங்க..எனக்கு கேட்டு கேட்டு அழுத்துப் போச்சு.. " என தோள்களை குலுக்கியவன், பின்
" ஐயம் விக்ராந்த்..நீ என்ன விக்கின்னு கூப்பிடலாம். " என அவன் கூறியதும் அவள் தயங்கி நின்றாள்.அதில் புருவங்களை சுருக்கியவன்,
" நா என்னோட நேம தானே சொன்னேன். என்னமோ உன்னோட கிட்னிய கேட்ட மாறி இப்டி ரியாக்ஷன் கொடுக்குற " என புரியாது வினவினான். அவன் கேட்ட விதத்தில் சிரித்தவள்,
" ஐயோ அதில்ல..நீங்க என்ன விட வயசுல பெரியவரா தெரியிரீங்க..உங்க எப்டி நேம் சொல்லி கூப்பிடுறது..நா வேணும்னா அண்ணான்னு கூப்பிடவா " என தயங்கி தயங்கி கேட்க, அவள் சொன்னதில் உற்சாகமான அவனோ,
" ஹே..இது நல்லாருக்கே…எனக்கு டபிள் ஓகே " என கண்கள் மின்ன கூறியவன்,பின் " அதுக்குன்னு நீ என்ன ஓல்ட் பீஸ்ன்னு நினைச்சிராத… ஐயம் ஜஸ்ட் ட்வென்டி செவன் " என்றான் சில்லுபியப்படி.
அதில் தலையாட்டி சித்தியாவில்" ஐயம் ஆத்யா.. எல்லாரும் என்ன ஆதுன்னு கூப்பிடுவாங்க " என முத்து மூரல் தெரிய தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
பின் மீண்டும் அவளின் கண்கள் ஜொலிக்கும் அலுவலக கட்டிடங்களையும் சுற்றுப்புறத்தையும் விழிகளால் களவாட அவளின் இதழ்களும்,
" ஸ்ப்ளென்டர் ( பிரம்மாண்டமான அழகு ) " என முணுமுணுத்தது. அதைப் பார்த்த விக்கியோ,
" இதுக்கே இப்படின்னா..உள்ள வந்து பாரு. இதைவிட அழகா இருக்கும் " என அழைத்துச் சென்றான். பேசியது சொற்ப நிமிடங்களாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் இருவரிடையேயும் ஒரு அழகான நட்பு உருவாகி இருந்தது.
உள்ளே நுழைந்ததும் ஆபீசா அண்டார்டிகாவா என சந்தேகம் வருமளவிற்கு ஜில்லென்று ஏசி காத்து அவளை தழுவிக்கொண்டது.
வெளியில் இருந்து பார்த்ததை விட பன்மடங்கு நவீனமாகவும் ஆகர்ஷிக்கும் வகையிலும் உட்புறம் இருந்ததில் சுற்றியும் முற்றிலும் விழிகளை சிமிட்டாது அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பாத்து..வாய்ல ஈ போயிற போகுது.. " என கேலி செய்த விக்கியை முறைத்தவள் ,
" போங்கண்ணா..இப்போ தான் எனக்கு பயமா இருக்கு.. எவ்வ்வ்ளோ பெரிய கம்பெனி.. என்னெல்லாம் இங்க செலக்ட் பண்ணுவாங்களா. " என கலக்கத்துடன் வினவிய ஆத்யாவைப் பார்த்து முறைத்தவன்,
" ஓ..பயமா இருக்கா..அப்போ அப்டியே வீட்டுக்கு போய் குத்தவச்சி உக்காந்துகிட்டு பொம்மை படம் பாக்குறியா " என முறைத்துக்கொண்டு கேலி போல் வினவியவனை பார்த்து,
" போ ண்ணா " என மூக்கை சுருக்கி சிணுங்கினாள்.
" கேக்குது பாரு கேள்வி..இன்னும் ஒழுங்கா உள்ள கூட போகல அதுக்குள் நெகடிவ்வா பேசிக்கிட்டு.. இங்க பாரு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. அங்க கேக்குற கேள்விக்கெல்லாம் தீயா பதில் சொல்ற, செலக்ட் ஆகுற. அதுக்கப்புறம் ரெண்டு பேருமா சேந்து ஆஃபீஸையே ஒரு வழி பண்ணிடலாம்.என்ன சொல்ற " என சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுப்பது போல் கையை ஆட்டியபடி தீவிரமாய் உரைத்தவனை,
விரிந்த விழிகளுடன் நோக்கியவள்,
" அண்ணா..நீ இப்டி பேசும் போதுதான் இன்னும் பயமாயிருக்கு " என்று கூற, அதில் பட்டென்று அவள் தலையில் தட்டியவன்,
" கண்ண நோண்டிருவேன். வா மொதல்ல நீ" என அவள் கை பிடித்து இழுத்து சென்றவன் இன்டர்வியூ நடக்கும் இடத்தில் விட்டான்.
" ஆது.. உள்ள ஆந்தை மாறி ஒருத்தன் இருப்பான். கண்ணால மிரட்றேன் என்ற பேர்ல காமெடி பண்ணிக்கிட்டு. அதெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகாத. அவங்க என்ன கேட்டாலும் நிதானமா பதில் சொல்லு. நா இங்க தான் இருப்பேன்.ஆல் த பெஸ்ட்" என கை குலுக்கிவிட்டு சென்றுவிட்டான்.
அவன் கூறிய தினுசில் சிரிப்பு வர அதை கட்டுப்படுத்திய படி அங்கு வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.
அங்கு அவளுடன் சேர்த்து 15 பேர் நேர்முக பரீட்சைக்காக வந்திருந்தனர். ஒவ்வொருவராய் உள்ளே சென்று வர ஆத்யாவின் முறையும் வந்தது. கடவுளை வேண்டிய படி உள்ளே நுழைந்தவள் அங்கு விக்கி சொன்னதை போல் ஒருவன் ஆந்தை கண்ணுடன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து வந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கி கொண்டாள்.
மேசையில் ஒரு ஓரத்தில் மிஸ்டர் ராமமூர்த்தி – ( ஹெட் ஆஃப் எச்.ஆர் ) என அவரின் பதவி ஒரு செவ்வக பலகையில் சில்வர் நிறத்தில் சிறு சிறு ஆங்கில எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.
தமிழ் என்ற மொழியை மறந்தவராக அமெரிக்க குடிமகனுக்கு டஃப் கொடுப்பது போல் ஆங்கிலத்தில் ஆத்யாவை நோக்கி கேள்விகளை அடுக்க, அவருக்கே டஃப் கொடுப்பது போல் ஆத்யா ஆங்கிலத்தில் தெளிவாக பதிலளித்தாள்.
அதில் அவர் முகத்தில் திருப்தி ரேகைகள்.
" ஓகே மிஸ். ஆத்யா, தேங்க்யூ சோ மச் ஃபோர் யுவர் டைம். வீ வில் கெட் பேக் யூ சூன். " என கூற,அவளும் நன்றி கூறி விட்டு வெளியே வந்தாள்.
அதற்கென்றே காத்திருவந்தவன் போல விக்கி அவள் முன்னே குதிக்க, அதில் நெஞ்சில் கைவைத்து விக்கித்து நின்றவள்,
பின் இடுப்பில் கைவைத்து முறைக்க ஆரம்பித்தாள்.அவனோ பரபரப்பாக,
" என்னாச்சு.. ஆல் ஓகே தானே " என கேட்க,
" தெரில.. கன்டெக்ட் பண்றேன்னு சொல்லி இருக்காங்க" எனக் கூறினாள்.
" நிஜமாவா… அப்போ செலக்ட் தான்" என உற்சாகமாய் கூறியவனை சிரிப்புடன் ஏறிட்டவள்," பார்க்கலாம் " என கூறினாள்.
பின் அவனிடம் விடை பெற்று வந்து பஸ்ஸில் ஏறியவளுக்கும் அந்த வேலை கிடைத்தால் தேவலாம் என்று தான் தோன்றியது. அவளைக் சிறுக சிறுக கொன்றுக் கொண்டிருக்கும் எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இந்த வேலை அவளுக்கு அவசியமாகப்பட்டது.
எவ்வளவுதான் எண்ணங்களுடன் போராடுவது.' நினையாதே மனமே நினையாதே' என்றாலும் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை சிறைப்பிடிக்கும் நினைவுகளில் இருந்து விடுதலை பெற போராடிக் கொண்டிருக்கிறாள்.
கண்முன்னே கடவுள் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்," கடந்த கால நினைவுகளை அடியோடு என் மூளையில் இருந்து அழித்து விடு" என்று நொடியினும் யோசிக்காது கூறிவிடுவாள்.
பஸ்ஸில் ஜன்னலோரமாய் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவள் கவனத்தை கன்டெக்டரின் விசில் சத்தம் கலைக்க இறங்க வேண்டிய இடம் வந்தததை உணர்ந்து அவசரமாக இறங்கினாள்.
சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வை முத்துக்கள் பூத்திருந்த தான் நெற்றியை திசு கொண்டு ஒற்றி எடுத்தபடி வீட்டை நெருங்கியவள்,
மூடிய கதவுக்கு பக்கத்தில் எதுவோ ஒன்று இருப்பது போல் இருக்க தன் நடையின் வேகத்தை கூட்டி அதன் அருகே சென்றவளின் புருவம் வியப்பில் மேலேறியது.
அங்கிருந்ததோ பார்சல் ஒன்று. அதுவும் லாவண்டர் நிறத்தில் ஜிகுஜிகு வென ஜிகினா குளித்த ரெப்பிங் பேப்பரால் கவர் செய்து, கடும் ஊதா நிறத்திலான ரிப்பனை அந்த பார்சலின் நுனிக்கு சற்று கீழாக பாவ் ( bow ) இட்டு அதன் நுனிப்பகுதிய அழகாய் விசிறிபோல் அமைத்து பார்க்கவே கண்ணைப் பறித்தது.
ஆத்யாவோ உள்ளம் கொள்ளைப் போக நின்றிருந்தாள்." வாவ்.. எவ்ளோ க்யூட்டா இருக்கு..அதுவும் எனக்கு பிடிச்ச பேர்பிள் கலர் " என வாய்விட்டே முணுமுணுத்தாள்.
பின் சுதாரித்து," நா ஒன்னும் ஆர்டர் பண்ணலேயே..ரியா பண்ணிருந்தா சொல்லிருப்பா பட் அவளும் ஒண்ணும் சொல்லலயே. ஒரு வேல அட்ரஸ் மாறி வந்திருச்சோ. " என முன்னர் ஒரு முறை இது போல் பார்சல் ஒன்று அட்ரஸ் மாறி வந்ததை நினைவு கூர்ந்தாள்.
அந்த பார்சலை மெதுவாய் கையில் எடுத்தவள் அப்போது தான் கவனித்தாள் அதில் டேக் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை. அதை பிடித்து படிக்க அதில் அவளது வீட்டு அட்ரஸ் சரியாக குறிப்பிடப்பட்டிருக்க அதற்கு கீழேயே அடைப்புக்குள் ஆத்யா என ஆங்கிலத்தில் வளைந்த எழுத்துக்களால் அழகாய் எழுதி இருந்தது.
' எனக்கா..' என புருவங்கள் சுருக்கி யோசித்தபடி கதவை திறந்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.கைப்பையை ஒரு ஓரமாக போட்டவள் தொம்மென சோஃபாவில் அமர்ந்தபடி அந்த மினுமினுக்கும் ரெப்பிங் பேப்பர் கிழியாதவாறு தன் வெண்டை விரலால் மெதுமெதுவாய் பிரிக்க ஆரம்பித்தாள்.
முழுதாய் பிரித்து முடித்தவளின் கண்கள் விரிந்தது.காரணம் அந்த பார்சலினுள் இருந்தது அன்று ஷாப்பிங் மாலில் புஷ் டாய் க்ளாவ் மெஷினினுள் இருந்த குட்டி ரபுன்சல் பொம்மை.
அதை கைகளில் தூக்கி ஆசையாய் வருடியவளின் கண்களோ மகிழ்ச்சியில் மின்னியது.
" அன்னைக்கு உன்ன என்கூடவே கூட்டிட்டு வர எவ்ளோ ட்ரை பண்ணேன் தெரியுமா..ஆன நீ ஜம்முன்னு அங்கேயே உக்கார்ந்து கிட்டேல்ல. ". என உதட்டை பிதுக்கி கூறியவளின் முகம் யோசனையில் சுருங்க,
' யாரு சென்ட் பண்ணது ' என தனக்குள் பேசியப்படி பிரித்த பார்சலை மீண்டும் துழாவினாள். கைக்கு எதுவோ தட்டுப்பட்டதும் அதை எடுத்து பார்க்க அது சிறிய கார்ட் ஒன்று. அதை வெளிய எடுத்தமே லாவண்டர் வாசனை மூக்கை
துளைக்க அதை தன் கூர் நாசியில் வைத்து ஆழ்ந்து சுவாசித்தாள்.
அதில் ஏதோ எழுதி இருந்ததில் யார் என தெரிந்துகொள்ளும் ஆவலில் அவசரமாய் வாசிக்கலானாள்.
தொடரும்…
This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
Happy Deepavali from NEERMAI
May the festival of lights bring peace, joy and new stories to you and your family.





