வாழ்வியல்

தேவைதானா இந்தக்காதல்

Picture added by the writer, Lingeswaran, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

நித்தம் உனை எழுப்பி விட்டு
முற்றம் தனைத் தான் கூட்டி
காலை முதல் உணவதனை
விதவிதமாய்ப் பதமாக்கி
தயவாய்த் தான் அளிக்கும்
தாயவள் இருக்கையிலே
தாரமொன்று தேடி அலைவது
தரமான செயலொன்றோ

சொந்தங்கள் ஆயிரம்
சோறுபோட இருந்தாலும்
பந்தம் ஒன்று தேடி
பலநாள் அலைவது
பண்பான செயலொன்றோ

பட்டம் வேண்டி படிப்பவனை
மனம்மாற்றி மட்டமாக்கி
திட்டமிட்டு குடிக்க வைக்கும்
தீராத காதல் கொண்டு- பின்
பிரிந்து போன கதை எல்லாம்

காலம் வந்து கைகூட
காதல் வந்து கைசேரும்
காதல் எனும் உணர்வு ஒன்று
தேவை எனின் தேடிச்செல்
இல்லை எனின் பொறுத்துக்கொள்
கடைசிவரை காத்திருந்தால்
கனிவான காலம் வரும்
வலிந்து சென்று வர வைத்தால்
நலிந்து போகும் கல்யாணம்

This writing is the work of Lingeswaran, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 2

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Lingeswaran

LLingeswaran8 Mar 2021

சீதனம் எதற்கு?

காதல் காதல் என்றபடி காலம் முழுக்க சுற்றிக்கொண்டு அவள் போகும் இடமெங்கும் நாயைப்போல அலைவது ராமன் சீதை காதல் போல இருமனங்கள் இணைந்திடாமல் தான் கொண்ட ஆசையினால் அவள் பின்னால் அலைந்து விட்டு ஒருதலைக்காதல் என்று…

பெண்மை1 min read
LLingeswaran23 Feb 2021

பணம் மட்டும் போதுமா?

      வறுமைக்காலம் வந்தபோது purse இல் காசு தீர்ந்து போகும் வந்த அன்பும் தூர்ந்து போகும் சொந்தபந்தம் தூரப்போகும் கோடிக்காசில் கோட்டை கட்டிபடம் போட்ட மனிதரெல்லாம் வாடகைக்காணி தேடி நாட்கணக்கில் அலைவதுண்டு கொட்டில்…

வாழ்வியல்1 min read
      வறுமைக்காலம் வந்தபோது purse இல் காசு தீர்ந்து போகும் வந்த அன்பும் தூர்ந்து போகும்…

More in வாழ்வியல்

See all