பிரியாவிடை
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???
ஹைக்கூ கவிதைகள்1 min read
26 posts
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???
ஹைக்கூ கவிதைகள்1 min read
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...
ஹைக்கூ கவிதைகள்1 min read
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன்
ஹைக்கூ கவிதைகள்1 min read
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும்…
நேசம்1 min read
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித் தீர்க்க நிறையவே இருந்தாலும் சுயநலத்தை விடவும் சிறந்த ஒன்றைப் பற்றி விவாதிக்க எனக்குத் தெரியவில்லை ஒரு முத்தத்தோடே முடிந்து விடக் கூடியதுதான் காதல் என்கையில் கோர்த்திருக்கும் விரல்களை உருவிக்…
நேசம்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.