கவிதை ஜுலை - 2020

ஆண் தோழமை

காணும் திசையெல்லாம்
கதிரவனின் கரங்கள்
மாதுவின் வழியெல்லாம்
ஆடவனின் துணைகள்
ஆயினுமாயிரம் அச்சங்கள்
அவளை பார்ப்போரின்
பார்வையில் கலந்திடும்
பழிசொற்கள் …

உறவாயுமல்ல உதிர
பிணைப்பாயுமல்ல-நீ
உருவான காலத்தில்-தன்னை
உருவகித்த ஜீவன்…என்றால்
உனை கருவில் இணைத்த
சகோதர உறவுமில்லை ….

சாலையோரம் தனியாக
கண்பிதுங்க நீ சென்றால்
கல்லூரி கதைபேசி
தோளோடு தோளாக-உன்
மூச்சின் வலுவாக
உறுதுணையாய் வரும்
ஒரு ஜீவன்….ஆனால்
காதலனுமல்ல

தோல்வியில் துவண்டு
தொங்கிய முகத்திற்கும்
பரீட்சைப்புள்ளியால்
படபடத்த நெஞ்சுக்கும்
தைரியமாய் நாலுசொல்
திட்டிச்சொன்னாலும்
நம்பிக்கை கொடுக்கும் அவன்
சத்தியமாய் அப்பா இல்லை…..

இன்பத்திலும் துன்பத்திலும்
இன் இசை கேட்டு
இசைந்தாடும் பொழுதினிலும்
என்பக்க சார்பாய்
என் மச்சி என்று
என் நிழலில் கலந்து
நடை போடும் உறவு-அவன்
மச்சினனும் அல்ல

பாலாக பேசி வரும்
காதல் பாழான போது
தன் கண்ணிலும்
துளிநீர் சிந்தி – என்
ஏறுபடி கற்களுக்கும்
ஏணிப்படியாய் அவன்
நிற்பான் – ஆனால்
அண்ணனுமல்ல …

தவறு செய்த நொடி
நான் தடி கொண்டு
தண்டித்தால் – என்
கைகளால் நழுவி
ஓடிடும் குறும்பன் – அவன்
தம்பியும் அல்ல …

சோறுண்ணும் போது – ஒரு
பிடி கவளத்திற்காய்
விழிமூடா தவமிருக்கும்
பாசக்காரன்….என்
பையனுமல்ல…

என் விழிவளி வரும்
துளி துடைத்து – சிறு
உதட்டுப் புன்னகைக்காய்
நகைச்சுவை பல நடித்து
நான் சிரித்திட
ரசிக்கும் ரசிகன் – அவன்
கணவனும் அல்ல …

உறவென்று சொல்லி அவன்
அன்பின் பந்தத்தை
உதிரத்தோடு உரமாக்க
அகராதி தேடிநின்றேன்
அவனை நட்பு எனும்
அன்புக்கரங்களால் அள்ளி அணைத்து
” நண்பன் ” என
செப்பி நின்றேன்.

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from தமிழ் கதிர்

தகதமிழ் கதிர்9 Sep 2020

நான் சென்ற பாதையில்…

        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என் அனுபவத்தின்…

கவிதை ஜுலை - 20201 min read
தகதமிழ் கதிர்30 Jul 2020

சீதனக்கொடுமை

          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !…

கவிதை ஜுலை - 20201 min read
தகதமிழ் கதிர்22 Jul 2020

தென்றலின் சிறுதேடல்…

        காற்றே.....எனை நீ ஸ்பரிசித்த நொடிஎன் மழலை மொழி - உனை சிதற வைத்தது...... இயற்கையை விலக்கி சுவைத்த கவிச்சையின் நாற்றம் - உனைகலங்க வைத்தது...... கரு மேகத்தோடு பந்தயித்ததெரு வாகன…

கவிதை ஜுலை - 20201 min read
தகதமிழ் கதிர்19 Jul 2020

அக்னியின் இதழ்

        அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின்…

கவிதை ஜுலை - 20201 min read

More in கவிதை ஜுலை - 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x