ஆலமரப் பறவை

ஆலமரம் சாய்ந்தால்
அதில் உள்ள
பறவைக்கும் ஒன்றும்
இல்லை தானே….
அது போலவே
அப்பா எனும்
ஆலமரம் சாய்ந்தது
அனைத்தும் சரிந்தது….
இருக்கும் வரை ஒன்றும்
இல்லாமல் இருந்ததே
இல்லை….
இப்போது இல்லை….
இல்லாததால் ஒன்றும்
இல்லை….
இடிந்து விழுந்த கூட்டிலும்
இடிந்து விட்ட கனவிலும்
இந்த ஆலமரப் பறவை
இன்னும் உயரப்
பறக்கத் துடிக்கிறது….
இந்தப் பறவைக்கு
போராட்டம் என்பது
புதிதல்ல….
போராடிப் போராடி
ஒடிந்தும் போவதில்லை….
ஆலமரம் கற்றுத்
தந்த பாடம் நெஞ்சில்
இன்னும் பதிந்து
இருக்கிறது-அதனால்
இடி இடித்தாலும்
புயல் அடித்தாலும்
மழை பெய்தாலும்
இனி அச்சம் கொள்ளாது
இந்தப் பறவை….
இறுதி நொடி கூட
போராடி ஜெய்க்கும்
பீனிக்ஸ் பறவை போல…
போராட வேண்டும் என்றே
பிறந்த பறவை போலும் இது…
ஹஸீதா அபுசாலி
பொத்துவில்
This writing is the work of Haseetha Abusali, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing







