கவிதை ஜுலை - 2020

உயிரே போகிறாய்……

உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று
ஊர்தேடிப்பெற்றதொன்று
உயிர்கொண்டுபோனதின்று

வினைதேடி வைத்தபின்பு
வேண்டும் ஓர் துணையென்று
மனம்நாடிவந்ததொன்று
உயிர்கொண்டுபோனதின்று

தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்
காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்று
கனவாகிப்போச்சுதின்று……

விழுகையிலே எழுப்பிவிட்டு
விழிநீரைத் துடைத்துவிட்டு
இம்சைகளால் ஆண்டதொன்று
எனைமறந்து போனதின்று….

தேடிவைத்த நினைவுகளை
தெருவினிலே தொலைத்துவிட்டு
திசைதெரியாப் பாதையிலே
போகுதிந்த பேதைப்பொண்ணு…

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from வர்ணமகள்

வவர்ணமகள்23 Sep 2021

உறவு

சாபமா?வரமா?தண்டனையா?தேவையா?தேவையில்லையா?எவ்வளவுநாளைக்கு?ஏன்?எதுக்கு?முடிவேஇல்லையா?இத்தனை வினாக்களோடும்,விடைபெறும்,விடைபெறக்காத்திருக்கும் உறவுகளுக்கு யார்தான்விடைசொல்லுறது😔          

பொதுவானவை1 min read
வவர்ணமகள்12 Oct 2020

ஒருதலையாய்❣

        நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக…

கவிதைகள்1 min read
வவர்ணமகள்24 Jul 2020

யாவும் கற்பனையே

          பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும்…

கதை ஜுலை - 20204 min read
வவர்ணமகள்19 Jul 2020

ஏழை இவள்

        அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…

கவிதை ஜுலை - 20201 min read

More in கவிதை ஜுலை - 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x