கதைகள்

அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 2 

அன்று காலை இனிதாய் புலர என்றும் இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள் ரியா..
சன் மியூசிகில் சென்று கொண்டிருந்த நாக்கு முக்கா பாடலுக்கு இணையாக ஆடியபடி ஆபீஸ் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த தோழியை ஆத்யாவின் கண்கள் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.
” என்ன மேடம் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு. என்ன ஸ்பெஷல் ” என்று குரலில் சிரிப்புடன் கேட்ட ஆத்யாவின் பக்கத்தில் வந்து தன் இடையால் அவளை ஒரு இடி இடித்து..
” ஆமா..இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. ஏன்னா இன்னைக்கு சேலரி டே..” என குதூகலமாய் கூறினாள் ரியா.
” ஓ அதான் மேடம் ரொம்ப குஷியா இருக்கீங்களா? காலையில எந்திரிச்சதும் பாட்டு என்ன டான்ஸ் என்ன ” என்ன கேலி செய்ய, 
அதற்கு அசடு வழிந்த ரியா,” ஓகே இன்னைக்கு ஷாப்பிங் போறோம் ஈவினிங் சீக்கிரம் வந்துடுறேன். ரெடியா இரு ” என தன் கன்னத்தை கிள்ளிய படி சொன்ன தோழியே ஆத்யாவின் கண்கள் வாஞ்சையுடன் நோக்கியது.
கிஞ்சித்தும் சுயநலம் இல்லாமல் தனக்காக தோழி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வது, தனக்கு ஆறுதலாக இருப்பது, தனக்கு தேவையான நேரங்கள் தோள் கொடுப்பது இதெல்லாமே நினைத்துப் பார்க்கையில் ரியாவின் மீதான ஆத்யாவின் அன்பும் மதிப்பும் பன்மடங்காக பெருகியது. 
” ஹலோ, என்ன சைட் அடிச்சதெல்லாம் போதும். நீ டைம்கு சாப்பிட்டு சமத்தா இருக்கணும் சரியா..” என தன்னைக் குழந்தையாய் பாவித்து கொஞ்சல் மொழியில் கூறிய தோழியை பொய்யாக முறைத்தவள், 
” எனக்கு தெரியும் போடி.. ” என்ன ரியாவை வாசல் பக்கம் தள்ளிவிட 
” சரி சரி, பாய் ” என சிரித்தபடி சென்றுவிட்டாள் அவள்.ரியா ஆபீசுக்கு கிளம்பியதும் வீட்டில் பெரிதாக ஒன்றும் வேலை இல்லை.
அவள் ஆபீசுக்கு உணவு எடுத்து செல்வதால் அவளுக்கு ஆத்யாவே காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்து வைத்து விடுவாள்.  
வீட்டை சுத்தம் செய்துவிட்டு தன் போனில் ஜாப் வேகன்ஸி ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தவள்,ஒன்றுமே கண்ணுக்கு தட்டுப்படாமல் போக சலித்தபடி போனை வைத்தவளின் கவனத்தில் அவள் பொது நூலகத்திலிருந்து எடுத்து வந்த நாவல்கள் தட்டு பட்டது. சட்டென்று காலண்டரை பார்த்தவள்,
” ஐயையோ இன்னும் புக்ஸ் ரிட்டர்ன் பண்ணலையே ஒரு வாரம் தாண்டி போயிருச்சு.. போச்சு அந்த குட்டிச்சாத்தான் என்ன கொல்ல போகுது. ” என லைப்ரரியனை நினைத்து பயந்தவள் அவசரமாக நூலகத்திற்கு செல்வதற்கு தயாராக ஆரம்பித்தாள். வான் நீல நிற சுடிதார் அதே நிறத்தில் கால் சட்டையும் அணிந்து, வெள்ளை நிறத்தில் வான் நீல நிற பூக்கள் தூவியது போலிருந்த துப்பட்டாவை சைடில் பின் செய்து நூலகம் செல்ல தயாரானாள் ஆத்யா.
எப்போதும் இதுபோன்ற நிறங்கள் அவளின் அழகை மேலும் தூக்கி காட்டும் அவள் உடை விஷயத்திலோ தன் அழகிலோ எப்போதும் சிரத்தை எடுத்து தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டதில்லை. அப்படி இருந்துமே அவள் பேரழகியாக இருந்தாள். 
ரிட்டன் செய்ய வேண்டிய நாவல்களை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டவள் வீட்டை பூட்டிவிட்டு மெதுவாக சாலையோரம் நடக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் இருந்து நூலகத்திற்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருந்தது.
ரியாவும் சில சமயங்களில் அழுத்துக் கொள்வாள்,” ஏண்டி ஒரு புக்க வாசிக்கிறதுக்கு இங்கிருந்து 1/2 ஹவர் டிராவல் பண்ணி நீ லைப்ரரிக்கு போகணுமா. அதுக்கு போன்லயே நாவல்ஸ் டவுன்லோட் பண்ணி வாசிக்கலாம் ல. ” என்று கேட்பவளுக்கு ,” புக்ஸ் எல்லாம் போன்ல டவுன்லோட் பண்ணி வாசிக்கிறது விட அதை கையாள தொட்டு ஃபீல் பண்ணும் போது, புக் மார்க் வைக்கும் போது அந்த புக்கோட ஸ்மெல் நுகரும் போதெல்லாம் வருமே ஒரு பீல் அதெல்லாம் போன்ல வாசிக்கும் போது கிடைக்காது ” என சுவையான சிக்கன் பிரியாணியை ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அதில் மெய்மறந்து கண்களை மூடி சிலாகிப்பதைப் போல சிலாகித்தபடி சொன்ன தோழியை ரியா வேற்றுலக ஜந்துவைப் போல் பார்த்து வைப்பாள். 
” என்னவோ போடி ஏதோ சொல்ற எனக்கு ஒன்னும் புரியல ” என புத்தகங்களை கண்டாலே அலறும் ரியா இவ்வாறு சொல்லிவிட்டு செல்வாள். அவளுக்கு தெரியும் ஆத்யா தன் மனதை அமைதிப்படுத்துவதற்கு அவள் தேடும் ஒரே ஒரு விடயம் இந்த புத்தகங்கள் தான் அதனால் ரியாவும் அவளை அவள் போக்கிலே விட்டு விடுவாள். 
பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்த ஆத்யாவின் காதில் ஒரு சிறு பிள்ளை தன் அம்மாவிடம் கதை பேசிக் கொண்டிருந்த குரல் அவள் காதில் தேனாய் பாய்ந்தது..
தானாகவே இதழ்களில் புன்முறுவல் வந்து ஒட்டிக்கொள்ள தன் பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள் ஆத்யா.
தலையில் பிளாஸ்டிக் கிரீடம் கையில் சிவப்பு நிறம் பலூன் சகிதம் மிக்கி மவுஸ் வடிவ வாட்டர் கேனை கழுத்தில் மாட்டி அவள் அம்மாவின் கையை பிடித்தபடி தலையை ஆட்டி ஆட்டி பேசிய விதம் கொள்ளை அழகாக இருந்தது. 
குட்டி தேவதையின் அம்மாவும் தன் குழந்தை பேசுவதை கண்ணில் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘ நர்சரி போய்ட்டு வராங்களா இருக்கும். ரொம்ப க்யூட்டா இருக்காங்க. நானும் இப்படி சின்ன பொண்ணா இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் ஒரு கவலையில்லை டென்ஷன் இல்ல ஸ்ட்ரெஸ் இல்ல.. இப்படி அம்மா கைய புடிச்சுக்கிட்டே…’ என அவள் மனம் அது பாட்டுக்கு ஒவ்வொன்றையும் சிந்திக்க இதழ்களில் இருந்த மென்முறுவல் மறைந்து கண்களில் ஏக்கம் குடிக் கொண்டது. 
‘ அம்மா ‘ என அவள் மனம் அரற்ற,ஏக்கம் படிப்படியாய் உருமாறி அழுகையில் வந்து நிற்பது போல் இருந்தது. சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள் தன் மனதை திசை திருப்ப பஸ் வருகிறதா என்று எதிர் திசையை பார்த்தாள்.அவளின் நேரத்திற்கு பஸ்ஸும் வந்துவிட ஜன்னல் ஓரமாய் சென்று அமர்ந்தவள் வேடிக்கை பார்த்தபடியே தன் மனதை அமைதிப்படுத்தி நூலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
நூலகத்திற்கு வந்ததும் புது டென்ஷன் அவள் மனதை குடிக் கொண்டது. 
” ஐயையோ கடவுளே இன்னைக்கு அந்த குட்டி பிசாசு இல்லாம இருக்கணும் ” என்ன நகத்தை கடித்த படி டென்ஷனில் முணுமுணுத்துக் கொண்டு லைப்ரரையினுள் நுழைந்தாள் ஆத்யா. 
அவளின் வேண்டுதலை கடவுள் ரிஜெக்ட் செய்து விட்டார் போலும். அங்கு புட்டிக்கண்ணாடினுள் கண்களை உருட்டி முறைத்தபடி மண்டைக்கு மேல் கொண்டையை போட்டுக்கொண்டு லைப்ரரியன் லட்சுமி உட்கார்ந்து ஒரு பெண்ணை கிழி கிழி என கிழித்துக்கொண்டிருந்தாள்.
” ஏம்மா உன் கூட இது ஒரு ரோதனையா போச்சு. பொது நூலகத்துல புக் எடுத்தா அந்த டேட் ல ரிட்டன் பண்ணனும்னு அறிவு இல்லையா… லேட்டா பண்ணதும் இல்லாம பைன் காச வேற கொண்டு வரலைன்னு என் உயிரை வாங்கிட்டு இருக்க.. உன் வீடு பக்கத்துல தான இருக்கு போ போய் காசு எடுத்துட்டு வா ஓடிப்போ.. ” எனக்கு காட்டு கத்து கத்த, அந்த நிசப்தமான லைப்ரரியே ஒருநிமிடம் குலுங்கி அடங்கியது.
ஆத்யாவோ வயிற்றில் புளியை கரைக்க நின்றிருந்தாள்.சட்டென்று அவளின் பக்கம் திரும்பிய லைப்ரரியன் லக்ஷ்மி ‘ என்ன ‘ கண்களால் வினவ,ஆத்யா முதலில் கையில் இருந்த ஃபைன் காசை மேசையில் வைத்தவள் அசடு வழிந்த படி நாவல்களை எடுத்து அதன் பக்கத்தில் வைத்து விட்டு திருட்டு முழியுடன் நிற்க,புரிந்து விட்டது லக்ஷ்மியிற்கு,புட்டி கண்ணாடியை சரி செய்தவாறு அவளை மேலும் கீழுமாக அளந்தவர்,
” மொத தடவ ல.. அதனால உன்ன சும்மா விட்றேன் இனிமே இப்படி நடக்க கூடாது.. என்ன புரிஞ்சுதா. சரி கார்ட் எடுத்துட்டு போறியா இல்ல புக்ஸ் எடுக்குறியா ” என கராராய் வினவ, 
” புக்ஸ் எடுக்கணும் ” என்று ஆத்யா கூற 
” ம்ம் ” என்று உறுமி அனுமதி அளித்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என புத்தகங்கள் அடுக்கி இருக்கும் ஷெல்ஃப் பக்கத்திற்கு வேகமாய் நடந்தாள். 
அங்கு ஒவ்வொரு செல்ஃப்களிலும் புத்தகங்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. புத்தக விரும்பிகள் இலகுவாக தமக்குத் தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு செல்ஃபுகளிலும் மேல் பக்கத்தில் அந்தப் புத்தகங்களின் பிரிவின் பெயரை மெல்லிய போர்ட் ஒன்றில் தடித்து எழுத்துக்களால் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.’ த்ரில்லர் ‘ என ஆங்கில சொல்லை மொழிபெயர்க்காது தமிழ் எழுத்துக்களாலேயே எழுதி போர்டு வைக்கப்பட்ட செல்ஃபின் அருகில் வந்து நின்றாள். 
அவளுக்கு பிடித்த பிரிவென்றால் இந்த பிரிவுதான். அவளின் வயதில் இருக்கும் பெண்கள் எல்லாம் காதல் நாவல்கள் என வாசித்து அதில் வரும் கதாநாயகன்களைப் போல தன் வாழ்க்கை துணை இருக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருக்க , அவளோ காதல் கல்யாணம் குடும்பம் பிள்ளைகள் கனவிலும் நினைக்காதவளாய்… நினைக்க விரும்பாதவளாய் இருந்தாள். தன் மனதின் அமைதிப்படுத்துவதற்கு இவள் வாசிப்பதெல்லாம் இந்த த்ரில்லிங் நாவல்களை தான்..தன் ஆள்காட்டி விரலின் நுனியால் கிடையாக மெலிதாய் ஒவ்வொரு நாவலின் பின்புறத்திலும் கோடிழுத்தப்படி வந்தவள் ஒரு நாவலை எடுத்து பிரித்து அதன் நடுப்பகுதியை வாசிக்கலானாள்.பின்,” ம்ஹூம் ” என தனக்குள் முனங்கியபடி அதை எடுத்த இடத்தில் வைத்தவள் மீண்டும் அதே போல் தன்னுடைய விரலால் வருடியபடி வந்து இன்னொரு நாவலை கையில் எடுத்தாள்.
அந்த நாவலின் கடைசி பக்கத்தை சுவாரசியமாக வாசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை ” தடக் தடக் ” என்ற ஷூ சத்தம் கலைத்தது..அதனை சாட்டை செய்யாது மீண்டும் வாசிப்பதில் கவனம் செலுத்தியவள் அந்த ஷூ சத்தம் தன் அருகே கேட்கவும் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். அங்கு யாரும் இல்லாததை கண்டு தோள்களை குலுக்கிக் கொண்டு அந்த நாவலை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு எந்த நாவலை எடுப்பது என தன் செவ்விதழை பிதுக்கி சிந்தித்துக் கொண்டிருந்தவளின் நாசியில் ஆக்சிஜன் உடன் கலந்து பெர்ஃப்யூம் மணம் ஏற, அதனை கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவள், ” நைஸ் ஃப்ரெக்ரன்ஸ் ” என முனுமுனுத்தபடியே தன் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, 
தன் முதுகுக்கு பின் இருக்கும் அதே திரில்லிங் பிரிவு செல்ஃபில் ஒரு ஆடவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருப்பதை கவனித்தாள். புக் செல்ஃபினை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தவனை கண்களை விரித்து பார்த்தவள் பின் மீண்டும் தன் வேலையில் கவனமானாள்.. அந்த பெர்ஃப்யூம் அவளையே சுற்றி சுற்றி வர அது மீண்டும் ஆழ்ந்து சுவாசித்தவள் அது தனக்கு பரிச்சயமாக இருப்பதை உணர்ந்தாள். 
அதில் தன் ஆள்காட்டி விரலை நெற்றி பொட்டில் வைத்து அழுத்திக்கொண்டு யோசித்தவளின் மனதில் சட்டென்று அந்த பைக்காரனின் முகம் மின்னி மறைந்தது. ‘ ஒருவேளை அவனோ ‘ என மனதிற்குள் பேசியபடி மீண்டும் தன் பக்கவாட்டில் பார்க்க, அவளுக்கு அவனின் முதுகு புறமே புலனாகியது. 
ஒவ்வொரு நாவலாய் எடுப்பதும், அதன் தலைப்பை வாசிப்பதும், பின் இல்லை என தலையாட்டியபடி மீண்டும் வைப்பதும் என இருந்தது சாட்சாத் ஹரி பிரணவே தான். அவனும் அவளை கவனத்திருக்கவில்லை. 
அந்நேரம் அவனின் அலைபேசி அவனை அழைக்க, அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன், ஹலோ கூட சொல்லாது 
” இப்ப என்ன நான் காலையிலேயே மண்ட காஞ்சி போகணும். அதானே வேணும் உங்களுக்கு ” என டென்ஷனாக வினவினான் இல்லை சற்று கத்தினான்.
அந்த இரும்புறுக்கிய குரலிலேயே புரிந்து விட்டது அவளுக்கு,அது அந்த பைக்காரன் தான் என்று. இங்கு அவனோ தீவிரமாக சண்டை போடுவதிலேயே குறியாக இருந்தான். 
” ஆபீஸ்க்கு டைம் ஆயிருச்சு. உங்களுக்கு இந்த நேரத்துல தான் நாவல்ஸ் எடுக்கணுமா . நீங்க கேக்குற நேம் ல அந்த நாவல் இங்க இல்லம்மா ” என்று எரிச்சலா ஆரம்பித்தவன் பின் கெஞ்சலுடன் முடித்தான். அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ ,
” ஆமா ஆமா.. இப்படி சென்டிமென்டா பேசி பேசியே என்ன லூசாக்கிருங்க. டென்ஷன்ல அந்த நாவல் நேம்மே மறந்துட்டேன் என்ன பேர் சொன்னிங்க ” என இரட்டை விரல்களை கொண்டு தன் நெற்றியை நீவியபடி அவன் கேட்க,
அந்தப் பக்கம் என்ன பெயர் கூறப்பட்டதோ அவனின் முரட்டு இதழ்களும் அதனை மெல்ல உச்சரித்தது,” கொலை அரங்கம் ” என அந்தப் பெயரை தன் மூளையில் ரிஜிஸ்டர் செய்தவன் மீண்டும் தேட ஆரம்பித்தான். ‘ திக் ‘என்று இருந்தது ஆத்யாவுக்கு.
அவள் எடுப்பதற்கு என்று கையில் வைத்திருந்த நாவலும் அதுதானே..இப்போது எடுப்பதா வைப்பதா என்றே தெரியவில்லை அவளுக்கு. தீவிரமாக தேடிக் கொண்டிருந்தவன் ஏதோ ஒன்று உந்தியதில் தான் பக்கவாட்டில் திரும்பி பார்த்தான்.ஆத்யாவின் பூ முகத்தை அவள் கூந்தல் மறைத்திருக்க, எதேச்சையாக அவனின் பார்வை அவளின் கைகளில் ‘ஜம் ‘ என்று அமர்ந்திருந்த நாவலில் பட்டது.
அவ்வளவு நேரம் உயிரை கொடுத்து தேடிக்கொண்டிருந்தது கிடைத்ததும் முகம் விகசிக்க, ” எக்ஸ்கியூஸ் மீ ” என அவளை அழைத்திருந்தான்.

தொடரும்…

This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 3

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 166 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கவியாழினி

More in கதைகள்

See all
3
0
Would love your thoughts, please comment.x
()
x