பிரிவு

கருப்புக்கண்ணாடி

ஒரு வாரத்திற்குப் பிறகு
இன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன்

நீ பேசாமல்
திருப்பிக்கொண்ட முகத்தில்
கிழிக்கப்படாத
என் நாட்காட்டித் தாள்கள்

உன் குறுஞ்செய்தி
பதிலுக்காகக் காத்திருக்கும்
துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்
சுழலும் என் கடிகாரம்

உள்ளிருந்து நான்
உறக்கக் கூச்சலிட்டும்
வெளியே கேட்காத படி
கான்கிரீட்டால் நீ மூடிச்சென்ற
ஒரு பாழுங்கிணறு

நீ தாழ்ப்பாளிட்டுச்சென்ற
கதவுகளைத் தட்ட
எத்தனிக்கும்
அன்பின் கூர்வாளால்
துண்டாடப்பட்ட என் கரங்கள்

ஒரு பாலைவனப் புயலில்
உன்காலடிகளைத் தேடித் தட்டழியும் திரை விழுந்த
என் கண்கள்

பல வருட சூன்யத்திற்குப்பிறகு
இன்றுதான் நம்பிக்கை வந்தது
நம் நாட்கள் இனி திரும்பாதென்று!

சூரிய வெளிச்சம்
கண்ணைக்கூசுவதாக
பொய் சொல்லி
இந்த கருப்புக் கண்ணாடியை
அணிந்து கொள்கிறேன்

நிரந்தரமாக!

This writing is the work of Mohamed Khalifa Jaffer, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Mohamed Khalifa Jaffer

MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்

தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மை1 min read
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்மண்

          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து…

நேசம்1 min read
MKMohamed Khalifa Jaffer14 Jan 2021

மழைவரக்கூடும்

மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து…

இயற்கை1 min read
MKMohamed Khalifa Jaffer14 Jan 2021

~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~

வானிலிருந்து எது விழுந்தாலும், எம் கோழிகள் நனைந்த செத்தையில் கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும் தன் குஞ்சுகளையும், சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும் இழுத்து இறக்கைக்குள் காத்துக்கொள்ளும்.. சில நேரங்களில் குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து தப்பிய…

வாழ்வியல்1 min read

More in பிரிவு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x