கவிதை - ஜூன் 2020

மார்கழி பூவே!

Picture added by the writer, ஸ்ரீகர்ஷன், who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

பூக்கள் என்றாலே அழகு
அதிலும் மார்கழி பூக்கள்
பேரழகு – இந்த ரகசியம்
எனக்கு தெரிய வந்தது
ஐந்து வருடங்களின் முன்…


அன்று தோட்டத்தே புதிதாய்
வந்திருந்த பூ அனைவர்
கண்களையும் கவர்ந்திழுக்க
என் கண்களுக்கு மட்டும் தெரியாது
போனது ஏனோ?
நாள் சில கழியவே
கிடைத்தது தரிசனம்
பார்த்த மாத்திரத்தில்
ஷங்கர் பட லவ் கிராபிக்ஸ்
என்னை சுற்றிலும்……

இது கொஞ்சம் அதிகமாக
தோன்றினாலும் உண்மை
அவள் பெயர்…..
வேண்டாம் பொது நலன் கருதி…
ஆனால் புதுமையான பெயர்
அழகோடு சேர்ந்த அறிவு
அவளின் சிறப்பு
அனுதினம் கண் ஜாடைகள்
எம்மை இணைத்தன பல மேடைகள்
முதலில் நட்பானது பின் காதலானது
நாட்கள் நடை போட
நாளும் வளர்ந்தது காதல்
அவ்வப்போது சிறு சண்டைகள்
அடுத்த நொடியே ஒற்றுமைகள்
மகிழ்வான தருணங்கள் அது…

ஆனால் கொரோனா விடுமுறை போல்
பெரிதொரு இடைவெளி வந்தது
அது என்னால் தான்…
மன்னிப்பும் கேட்டேன்
யாவும் கடந்தவளாய் அவள்
எனை மன்னித்தாள் ஒரு நண்பியாக
பலமுறை முயன்றேன் புரிய வைக்க
மாறவில்லை அவள் மனம்
எனக்கு அவள் மேல் இல்லை கோபம்
காரணம் அவள் பாவம் ஏதுமறியாதவள்!

மனதை திருடியவனும் நானே
மனதை காயப்படுத்தியவனும் நானே
மருந்திட முடியா ஆறா காயமாய் அது
எனக்கு வலிக்கிறது இன்றும்…
அதன் பிறகும் நண்பர்களாய் பயணித்தோம்…
பேசினோம்…
சிரித்தோம்….
உப்புச்சப்பின்றிய உரையாடல்களாய் சிலநேரம் அவை…
இப்போது கொஞ்சம் மௌனம்
அவள் பற்றி தகவலேதும் இல்லை
அவ்வப்போது பழைய நினைவுகள் வரவே
கண்கள் வேர்க்கின்றன
பேனாவும் கிறுக்குகின்றது அவள் பெயரை மட்டும்…..

This writing is the work of ஸ்ரீகர்ஷன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 2

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 171 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from ஸ்ரீகர்ஷன்

ஸஸ்ரீகர்ஷன்12 Mar 2023

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ்…

அழகு1 min read
ஸஸ்ரீகர்ஷன்22 Dec 2021

சம்மதம்

வானரத்தின் வழிவந்த வம்சமே - இன்று வல்லரசாய் கர்வம் கொண்டு நிற்கின்றாய்! வளர்ச்சிகள் பல கண்டிட்ட போதிலும் உடன் வந்த மிருக குணம் இன்னும் மாறவில்லையே! மனிதனென்று பேர் கொண்ட உன்னை புனிதனாய் வாழ வைப்பது…

பொதுவானவை1 min read
ஸஸ்ரீகர்ஷன்4 Sep 2021

கோலாகலம்

மன்றத்தில் தோன்றியவள் எந்தன் உயிர் காதலியோ காண்பவர் மனம் மயக்கும் காந்த விழி காரிகையோ காரிருள் கூந்தல் கழல் வரை ஊசலாட வாடாத கொடி மல்லி சேர்ந்தே ஆட மாசற்ற மதி வதனம்  அதில் மது…

அழகு1 min read
ஸஸ்ரீகர்ஷன்14 Dec 2020

பயணம்…

"ராமசாமி...  ராமசாமி... " வாசலில் யாரோ கடும் சீற்றத்துடன் அழைக்கும் சத்தம். "ராமசாமி....  யோவ் ராமசாமி... " மீண்டும் அதே குரல். போக போக மரியாதை குறைந்து கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு…

நிமிடக் கதை 202014 min read

More in கவிதை - ஜூன் 2020

See all