அகத்தவன் அன்பில் அடைக்கலம் நான்..!!

அன்பு 4
ஜில்லென்று ஏசி காற்று இருவரின் உடலையும் தழுவ அதனை சுகமாய் அனுபவித்தவாறே கையில் பப்பிள் டீசகிதம் அந்த ஷாப்பிங் மோலை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.
ஹரி பிரணவினால் ஆத்யாவுக்கு ஏற்பட்ட டென்ஷனும், பல்சர் ஆசாமியினால் ரியாவுக்கு ஏற்பட்ட இரத்த அழுத்தமும் ஷாப்பிங் வந்ததும் பறந்து ஓடி விட, சிறுபிள்ளையின் குதூகலத்தோடு கை கோர்த்தப்படி ஷாப்பிங் மாலின் நீள அகலங்களை அளந்துக் கொண்டிருந்தனர் .
" ஏய் ரியா அங்க பாரு டி.. " என ஆத்யா உற்சாகமாய் சுட்டிக் காட்டிய திசையில் தன் பார்வையை செலுத்திய ரியாவும் குஷியாகி விட்டாள்.
அங்கு டெட்டி பியர் கடை ஒன்றினுள் புஷ் டாய் க்ளாவ் மெஷின் ( push toy claw machine ) ஒன்று அழகாய் வீற்றிருந்தது.
டோரிமோன், ஸ்பைடர் மேன், ஷின்ச்சேன் ,
டோரா, ரபுன்செல் என மீடியம் சைஸில் கார்ட்டூன் பொம்மைகளாய் அந்த கண்ணாடி பெட்டி நிரப்ப பட்டிருக்க, அதை பார்த்ததும் இருவரதும் உள்ளிருக்கும் குழந்தை சுபாவமும் வெளிவர தொடங்கியது.
ஓடிச் சென்று கோயின்களை வாங்கியவர்கள் ஒவ்வொன்றாய் போட்டு விளையாட அனைத்து முயற்சியிலுமே பொம்மைகள் நழுவி நழுவி விழுந்தது.
அதில் இருவரது மனமும் வாடி போக,
" வாடி போலாம் " என முகத்தை தொங்க போட்டபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
ஆத்யாவோ அந்த மெஷினையே திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தாள். அந்த கண்ணாடி பெட்டியினுள் இருந்த சிறிய சைஸ் ரபுன்செல் ( Rapunzel ) பொம்மை அவள் மனதை கொள்ளையிட்டிருந்தது.
" ப்ச் " என சோகமாய் சலித்தப்படி வந்தவள் ரியாவுடன், ' சென்ட் கார்னர் ' என்ற வாசனை திரவியங்கள் நிறைந்த கடையினுள் நுழைந்தாள்.
ஒவ்வொரு போத்தல்களும் ஒவ்வொரு வடிவத்தில் பலவித நிறங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையினுள் நுழைந்ததுமே இருவரின் மூக்கையும் காற்றுடன் கலந்து வந்த நறுமணங்கள் துளைத்து செல்ல அதனை சுவாசித்தபடியே ஒவ்வொன்றையும் பார்வையிட தொடங்கினர்.
ட்ரயலுக்கு வைத்திருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த ராக்கையில் இருந்து, மேல் பகுதி சற்று சைடு வாங்கியது போல் இருந்த ஒரு போத்தலை எடுத்து மெதுவாக வருடிய ஆத்யா அதனுள் இருந்த திரவத்தை தன் உள்ளங்கைக்கு கீழாக அடித்து கண்களை மூடி நுகர,' க்ளிங் ' என கேட்ட சத்தத்தில் விழிகளை திறந்தவள், தனது காலுக்கு கீழ் உடைந்திருந்த பெர்ஃப்யூம் போத்தலை கண்டு அதிர்ந்து விட்டாள்.
அங்கிருந்தவர்கள் அவளையும் உடைந்த பெர்ஃப்யூம் போத்தலையும் மாறி மாறி பார்க்க, அவளோ என்ன செய்வது என்று அறியாது பயத்துடன் நின்றிருந்தாள்.
" ஐயோ மேடம் " என ஒருவன் அலறியபடி வர அவனது உடையிலே புரிந்துவிட்டது அவன் அங்கு வேலை செய்பவன் என.முதலில் மரியாதையாக பேச வந்தவன் பின் அவளின் சாதாரண தோற்றத்தை பார்த்து,
" அண்ணா நா ஒன்னும்.." என அவள் முடிக்கும் முன்னே அவன் காச் மூச் என கத்த ஆரம்பித்து விட்டான்.
" ஏன் மேடம் இப்டி உயிர வாங்குறீங்க. நீங்க பண்ற வேலைக்கு எல்லாம் நாங்க திட்டு வாங்கணுமா. ஒரு பெர்ஃப்யூம் போட்டில்ல ஒழுங்கா ஹேண்டில் பண்ண தெரில. நீங்கெல்லாம் என்னதுக்கு ஷாப்பிங் வர்றீங்க. ச்சே " என கத்த,
" அண்ணா.. ப்ளீஸ் ஒரு நிமிஷம் " என ஆத்யா அவனை அமைதி படுத்து முயல,
" என்ன ஒரு நிமிஷம். உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா " என அவன் கத்திக் கொண்டே இருந்தான்.
ஆபீசில் இருந்து முக்கியமான அழைப்பொன்று வந்ததில் பேசியபடி கடையை விட்டு வெளியே சென்றிருந்த ரியா பேசிவிட்டு மீண்டும் உள்ளே வர,
அங்கு கூட்டம் கூடியிருப்பதில் புருவங்களை நெறித்தாள். அவசரமாக அக்கூடத்தை அணுகியவள் தலை உயர்த்தி எட்டிப்பார்க்க,
அங்கு கலங்கி சிவந்த முகத்துடன் ஆத்யா நின்றிருப்பதை பார்த்தவள் திக்கென்று அதிர்ந்த இதயத்துடன் கூட்டத்தினுள் நுழைந்தாள்.
"ஆது..என்ன டி ஆச்சு " என்ற கேட்ட ரியாவின் பதட்ட குரலில் பயம் சற்று தணியப்பெற்றவள் நடுங்கிய கையால் தோழியின் கையை பிடித்துக் கொண்டு நடந்ததை கூறி முடித்தாள்.
" நா ஒன்னுமே பண்ணல டி. அது எப்டி கீழ விழுந்ததுன்னு தெரில " என கலவர விழிகளுடன் அவள் கூற," ஆமா ஆமா நீங்க ஒன்னும் பண்ணல.பேய் தான் பண்ணிருக்கும் இல்ல. " என நக்கலாய் கேட்டவன்,
" ஏன் மேடம் பொய் சொல்றீங்க.இந்த பக்கம் உங்கள தவிர வேற யாரும் இருக்கல. பின்ன எப்டி மேடம் நீங்க பண்ணலன்னு சொல்லுவீங்க. மரியாதையா உடைச்ச பெர்ஃப்யூம் போட்டிலுக்கு ஃபிஃப்டி தவ்சண்ட் செட்டில் பண்ணிடுங்க " என அவன் குண்டை தூக்கிப் போட,' ஃபிஃப்டி தவ்சண்ட் ' என அவன் கூறியதில் விக்கித்து முகத்தையும் முகத்தையும் பார்த்துக் கொண்டனர் தோழிகள் இருவரும்.
அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தவன்,
" என்ன மேடம் முழிக்கிறிங்க. ஜஸ்ட் ஃபிஃப்டி தவ்சண்ட் இல்லையா உங்ககிட்ட.இந்த ஷாப் ல சீப் பிரைஸ்கு பெர்ஃப்யூம் வாங்கனும்னாலே ஃபிஃப்டி தவ்சண்ட் பே பண்ணனும். " என கூறினான்.
ஆத்யாவும் ரியாவும் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கடையின் தோற்றத்தை வைத்து விலை அதிகமாக இருக்கும் என நினைத்தவர்கள் அங்கு மலிவு விலையே ஐம்பதாயிரம் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை.
அவர்களின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து
மேலும் கோபம் கொண்ட கடை ஊழியனோ
அவர்களை மேலிருந்து கீழாக பார்த்தபடி எள்ளலாய் இதழ் வளைத்து,
" ஓ..இப்போதான் புரியுது.. ஓசி ல ஏசி காத்து வாங்க வர்ற கூட்டம் மாதிரி ஓசி ல பெர்ஃப்யூம் யூஸ் பண்ணிட்டு போற கூட்டமா நீங்க " என எரிச்சலுடன் கேட்க,
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த ரியாவோ அவனது கூற்றில் ' சுறுசுறு ' வென ஏறிய கோபத்துடன் அவனை ஏறிட்டவள்,
" ஹலோ.. எக்ஸ்கியூஸ் மீ..வார்த்தைய பார்த்து பேசுங்க மிஸ்டர்..அதான் அவ உடைக்கலென்னு சொல்றால்ல..அப்புறம் எதுக்கு நாங்க பே பண்ணனும்." என கோபத்துடன் கேட்க, அதில் நக்கலாய் இதழ் வளைத்தவன்,
" தப்பு பண்ணவங்க எப்போ அவங்க தவற அக்செப்ட் பண்ணிருக்காங்க. அதுக்கு நீங்க ஒன்னும் விதிவிலக்கில்லையே " என இகழ்ச்சியாய் சொன்னான்.
ஆத்யாவுக்கோ அவமானம் பிடுங்கித்தின்றது. சுற்றிவர நின்றிருந்தவர்கள் அவளையே பார்த்துக்கொண்டிருக்க தன் மேல் தவறு இல்லை என்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன்
" அண்ணா நீங்க தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க. அதான் நா பண்ணலன்னு சொல்றேன்ல. அப்படியும் உங்களுக்கு சந்தேகம்னா கேமரா செக் பண்ணலாம் " என கூறினாள்.
தைரியமாக வெளிவந்த அவளின் குரலில்
ஜெர்க்கான அவனோ அதனை காட்டிக்கொள்ளது
" அதுக்கென்ன தாராளமா பண்ணிடலாம் "
என கேமராவை செக் செய்ய, அதில் ஆத்யா பெர்ஃப்யூம் போத்தலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு இளம்யுவதி செல்போனை காதில் வைத்து தீவிரமாய் பேசியபடி வேகமா நடக்க அவளின் முழங்கைப்பட்டு பெர்ஃப்யூம் போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ராக்கை அசைந்ததில் அதில் இருந்த பெர்ஃப்யூம் போத்தல் ஒன்று ஆத்யா நின்றுகொண்டிருந்த பக்கம் விழுந்து நொறுங்கியது. முகத்தில் கலவரத்தோடு அவசர அவசரமாய் நகர்ந்துக் கொண்டிருந்த அந்த பெண்ணும் அதனை கவனியாது சென்றுவிட்டாள்.
இவையனைத்தையும் கேமரா அழகாய் பதிவு செய்து இருக்க அதைப்பார்த்து கொண்டிருந்த அவனுக்கு குற்றவுணர்ச்சியாய் இருந்தது.
" சாரி மேடம்.." என ஆத்யாவை பார்த்து தலை குனிந்தபடி சொல்ல, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவனை மேலும் திட்ட தோன்றாது மெலிதாய் புன்னகைத்தபடி" இட்ஸ் ஓகே அண்ணா. " என்று கூறியவள் அங்கு நிற்க பிடிக்காது ரியாவையும் இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
ஷாப்பிங் செய்யும் மனநிலையே செத்து விட்டது இருவருக்கும். வாங்கிய சொற்ப பொருட்களுடன் வீட்டுக்கு வரும்போதே இரவாகி இருந்தது. வரும் வழியில் எல்லாம் அந்த பெர்ஃப்யூம் கடை ஊழியனை வசைப் பாடியபடியே வந்தாள் ரியா.
ஷாப்பிங் செய்த பைகளை அப்படியே சோஃபாவில் வைத்துவிட்டு சமைக்க சென்ற ரியாவை தடுத்த ஆத்யா,
" ஆல்ரெடி ரெண்டு பேரும் ரொம்ப டயர்டா இருக்கோம். ஏதாச்சும் ஆர்டர் பண்ணிக்கலாம் " என கூறியதில் சம்மதமாய் தலையசைத்தாள் அவள்.
ஆர்டர் செய்த உணவு வரும் வரையில் ஷாப்பிங் செய்தவற்றை மீண்டும் ஒரு முறை பிரித்து பார்த்து விட்டு அதனை உரிய இடங்களில் அடுக்கி வைக்கவும் உணவு வரவும் சரியாய் இருந்தது.
கதையளந்தப்படியே சாப்பிட்டு முடித்தவர்கள் களைப்புடன் சென்று கட்டிலில் விழ, ரியா படுத்ததும் உறங்கி விட்டாள். ஆத்யாவுக்கு தான் தூக்கம் பிடிபட வெகுநேரம் ஆகியது.
அந்த கடை ஊழியன் தன் மீது பொய் பழி சுமத்தியதும் சுற்றி நின்றுந்தவர்கள் தன்னை வேடிக்கை பார்த்ததும் நினைவு வர இப்போதும் அவமானமாய் உணர்ந்தாள்.
என்னதான் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் முகம் கொடுத்ததே இல்லை. மீண்டும் மீண்டும் அந்த எண்ணமே அவனின் மனதை வாட்ட தூக்கத்தை தொலைத்து விட்டதை வெறித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை
' டிங் ' எனக் கேட்ட மெசேஜ் சத்தம் கலைத்தது. ஃபோன் ஸ்கிரீனை பார்த்த ஆத்யா அதில் வாட்ஸ் ஆப்பில் தெரியாத நம்பர் ஒன்றிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்ததை கண்டு புருவங்களை சுருக்கினாள்.
' யாரு இது ' என மனதினுள் புலம்பியவாறு
" ஹாய் " என வந்திருந்த மெசேஜிற்கு பதில் அனுப்பாது, டி பியை கிளிக் செய்து பார்த்தாள். வெகுநேரம் பச்சை நிறத்தில் ஒன்று வட்டமாய் சுற்றியபடி இருக்க புகைப்படம் தெளிவாய் விளங்காது போனதில் " ப்ச் " என சலித்தவள் சாட்டினுள் நுழைந்து,
" ஹூ இஸ் திஸ் " என டைப் செய்து அனுப்ப, உடனே நீல நிற டிக்குகள் விழுந்தன.பின் டைப் செய்வதை உணர்த்து வகையில் மூன்று புள்ளிகள் டான்ஸ் ஆடியதில் பதட்டமடைந்தவள் பதிலுக்காக காத்திருந்தாள்.
" சாரி சொன்னா உடனே விட்டுறதா..ஓங்கி ஒண்ணு வைச்சிருக்கலாம்ல. என்கிட்ட மட்டும் தான் உன் வாய் ஜாலத்த காமிப்பியா " என சிவப்பு நிறத்தில் இருந்த கோப எமோஜியுடன் வந்த குறுஞ்செய்தியை வாசித்ததும் அவளின் கண்கள் விரிந்தது.
யாரென்று தெரியாதே நம்பரில் இருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வரவும் முதலில் ராங் நம்பர் என தான் நினைத்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் அதை வாசித்ததும் தான் புரிந்தது பெர்ஃப்யூம் கடையில் நடந்த சம்பவத்துடன் அந்த குறுஞ்செய்தி ஒத்துபோவதை.
வியப்பில் விரிந்த கண்களுடன் அது யாரென்று தெரியாது முழித்தவள் மீண்டும் டி பியை கிளிக் செய்து பார்க்க இப்போது அந்த புகைப்படம் தெளிவாக தெரிந்தது.
அதைப் பார்த்தவளின் பெரிய விழிகள் மேலும் பெரிதாக அதில் மாடல் பாஸில் அழகாய் சிரித்தபடி நின்றிருந்தான் ஹரி பிரணவ்.
தொடரும்…
This writing is the work of கவியாழினி, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
Happy Deepavali from NEERMAI
May the festival of lights bring peace, joy and new stories to you and your family.






