குடும்ப அமைப்பு

அவள்

காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா?

காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற?

குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா பாத்துக்க மாட்டியா?

பகல் சாப்பாட்டுல கொஞ்சம் ஏதோ மிஸ்ஸிங், ஒரு சாப்பாட்ட கூட செய்யத்தெரியுதா?

ஆடை கழுவியதில் ஒரு சிறு மஞ்சள் போகவில்லை, என்னடி இது என எரிச்சல்?

உடைகளை அயன் செய்ய மறந்துவிட்டாள், உனக்கு இது கூட ஞாபகம் இல்லயா?

வீடு சுத்தம் செய்ய நேரமாகிவிட்டது, எல்லாம் கண்ட படி போட்டிருக்கியேடி?

அசதியில் தூங்கி விட்டாள் கொஞ்சம், பாரு நானே செய்யனும் எல்லாம் உனக்கு ஒரே தூக்கம்?

குழந்தை தப்பு செய்து விட்டது? புள்ளயா வளர்த்திருக்காய்?

ரிங் அடிச்சதும் போன் ஆன்ஸர் இல்ல, அப்டி என்ன வேலை உனக்கு?

இப்படி எதற்கெடுத்தாலும் அவள் மேல் கோவம், எரிச்சல், முகம் சுளிப்பு, எவ்வளவு காயப்பட்டிருப்பாள் மனைவி? ஆண்களின் கோபங்களை இறக்கி வைக்கும் இயந்திரம் அல்ல அவள்…. நமக்காக இயந்திரம் போல் உழைப்பவள், இவ்வளவையும் கேட்டு விட்டு அவள் நமக்கெதிராக பயன்படுத்தும் ஒரே ஆயுதம்…அழுகை

இப்படியெல்லாம் காயப்பட்டவள்தான் கணவனுக்கு நோய் என்றதும் பதறிப் போகிறாள், அவன் மூலம் உருவான குழந்தையை நெஞ்சில் சுமக்கிறாள், தனக்கான அத்தனை சுதந்திரத்தையும் விட்டு குடும்பமே உலகம் என்று வாழ்கிறாள், சோர்வான நேரங்களில் கூட தனது பணிகளுக்கு ஓய்வு கொடுக்க முடிவதில்லை அவளால், இப்படி தன்னையே இழந்து உனக்காக வாழும் அவள் உன்னிடம் எதிர் பார்த்து நிற்பது உன் மாசற்ற அன்புக்காகவும், அன்பான வார்த்தைக்காவும் தான்…

அன்பை மட்டும் அவளிடம் தூவுங்கள் 💝💝
அவள் உணர்வுகளையும் கொஞ்சம் மதியுங்கள் 💝💝💝 
அவளே வாழ்வின் நிரந்தர காதலி 💝💝💝

This writing is the work of Haroon HN, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Haroon HN

HHHaroon HN16 Jul 2019

சிறை

உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இவ்வாழ்வு...!என்னிலிருந்து உன்னைஅடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.உன் மீளுதலை வேண்டிவிட்டு,மீண்டும் நான்நிதானமிழந்து…

நேசம்1 min read
HHHaroon HN29 Jun 2019

பரிணாமம்

சூன்யமான காலமென்ற ஒன்றுஎல்லார் வாழ்விலும்ஒரு பகுதி உண்டு.அக்காலத்தினைசபித்துக் கொண்டுஅங்கேயே தேங்கியவரும் உண்டு.மாறாக, நியதிகளை ஏற்றுஅவைகளை கடந்தவரும் உண்டு.ஏன்?தாக்குப்பிடிக்க இயலாதுமாண்டு போனவர்களும் உண்டு. அப்போது தான்...! வாழ்வின் எல்லா விதமான பரிணாமமும், கண்ணெதிரே விரிந்து கிடக்கும்.வலிகளின் பள்ளத்தாக்கில்வீழ்ந்து கிடக்கையில், இன்னொரு…

வாழ்வியல்1 min read
HHHaroon HN4 Jun 2019

துணை

இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை மறைத்து, உன்னை கடப்பவன்…

வாழ்வியல்1 min read
HHHaroon HN4 Jun 2019

புரிதல்

இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என்…

நேசம்1 min read

More in குடும்ப அமைப்பு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x