வாழ்வியல்

எழுந்திடு

விழுகையில் அழுதவனாக இராமல்
எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற
எழுந்திடு !

உன்னை உன் நிலை தாழ்த்தி
உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே
ஓங்கி வளர்ந்திட எழுந்திடு !

எம்முள் தீயை வளர்த்து
அத்தழல்தனில் குளிர்காயும் கூட்டம் விரண்டிட
ஒற்றுமையாய் எழுந்திடு !

நாம் உண்டு பிறர் தவிக்கும் நிலை தவிர்த்து
வறியோர் மகிழும் நிலை செய்ய
எழுந்திடு !

அறியாமை எனும் காரிருளை
அறிவுத்தீபம் ஏற்றி விலக்கிட
உதய சூரியனாய் இன்றே எழுந்திடு !

தகுதியானவர் ஒதுங்கி விட்டால்
தகுதியற்றவர்கள்களால் ஆளப்படுவாய் என
உணர்ந்து எழுந்திடு !

இன மத மொழி பேதம் கொண்டு
இவ்வையத்தினை நடமாடும் சிறைச்சாலையாய்
மாற்றுதல் தடுத்து பேதம் கொன்று
புத்துலகம் படைக்க எழுந்திடு !

நீ ஜெயம்கொண்ட பாதையை
நீ அறிவாய்
அப்பாதைதனில் இளையோரை
வழி நடத்திட எழுந்திடு !

உன்னைப் போல் இன்னொருவன் இல்லை
இவ் உலகை உயர்த்திட என எண்ணி
எழுந்திடு !

This writing is the work of அஹமட் வஸீமுல்லாஹ், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from அஹமட் வஸீமுல்லாஹ்

அஹமட் வஸீமுல்லாஹ்10 Oct 2021

அழகான ஆக்கிரமிப்பு…

உன்னைக் காணும் முன் என் நெஞ்சில்  கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப் பார்வையால் என் இராஜ்ஜியம் பறித்து உன் காவலனாய் மாற்றி விட்டாய் பெண்ணே... உன் காதலனாய் மாறிய…

கவிதைகள்1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்3 Jun 2021

அவளும் உயரம் தொடட்டும்..

கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று... அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று... அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின்…

பெண்மை1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்22 Mar 2021

நீயாய் இரு…

இவ் அண்டவெளியில் அலங்காரமாய் உலவித்திரியும் பட்டாம் பூச்சி நான்.. வண்ணச்சிறகடித்து என் கடமை முடிக்க உலவும் வேளை என் விழிகள் அகல உற்று நோக்கினேன்  ஓர் பெரும் பருந்தை ஓர் நொடியில் சிதறியது என் களிப்பு...…

வாழ்வியல்1 min read

More in வாழ்வியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x