வாழ்வியல்

நான் ஒர் ஏழைச் சிறுமி…

வற்றிய வயிற்றுடன்
துளையிட்ட துணியணிந்து
நடமாடித் திரியும் 
ஏழைச்சிறுமி நான்….

அடிக்கும் வெயிலும் 
அடை மழையும்
வீட்டுக்குள் புகுந்து
தூங்க விடாமல் பண்ணும்
அதிசய வீடு எனக்கு….

பள்ளி செல்லும்
பாலர் பார்க்கையில்
படிப்பு என்பது
எட்டாக்கனி ஆகிவிட்டதோ?
என்ற ஏக்கம் எனக்கு…

கடற்கரையில் 
கடலை விற்று
வரும் பணம்
வயிற்றை நனைக்க கிடைக்கும் 
பாக்கட் பணம் எனக்கு….

பணம் இல்லாவிடிலும்
பாசம் நிறை கொண்ட
அன்பாக வாழும்
அழகிய வாழ்வு எனக்கு…

மனிதம் சாகடிக்கப்பட்ட
மனிதர் கொண்ட 
செல்வ வாழ்க்கை இல்லை…

சொற்ப பணமேனும்
சாதாரண தேவை 
நிறை செய்யும் 
சிறப்பான வாழ்க்கை 
எனக்கு…

பாடம் படிக்கா
குறை தவிர
குடிசையில் வாழ்ந்திடினும்
நிறை வாழ்க்கை கொண்ட
ஏழைச் சிறுமி நான்…

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Humaitha Basheer

HBHumaitha Basheer16 Jun 2019

இயற்கை

   நதியோரம் எனை வருடிச் சென்ற இளகிய குளிர்காற்று... காற்றின் தாளத்தில் அசைந்தாடி என் கால்களை முத்தமிட்ட அந்த குறும் அலைகள்... அடங்கிச் செல்ல தயாராகும் மாலை சூரியன்... அது தடையின்றி வாரி வழங்கும் தங்க…

இயற்கை1 min read
HBHumaitha Basheer14 May 2019

வாழ்ந்திடு மனிதா…

நிறைபொருள்  இல்லை... நிலையற்ற  இவ்வாழ்வில்... நிறைவாக  தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும்  மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய  உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer13 May 2019

நாளையும் விடியுமா…??

இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய…

வாழ்வியல்1 min read
HBHumaitha Basheer13 May 2019

உருகும் உணர்வுகள்

உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து  குருதியுடன்  ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா…

ஹைக்கூ கவிதைகள்1 min read

More in வாழ்வியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x