வாழ்வியல்

யதார்த்தம்

காசாய் தண்ணீர்
போத்தல்களை
வாங்குவோரிடத்தில்
தாகத்தில் ஒரு துளி
தண்ணீர் கேட்டு
யாசிப்போரின் பசி
தெரிய வாய்ப்பிருக்க
போவதில்லை

அதைப்போல்

விதமாய் உணவை
வீணடித்து சொல்வோருக்கு
மீதமாய் உணவேதும்
கிடைத்திடுமா?
என்றிருப்பவனின் வலியும்
ஏக்கமும் ஏளனம் என்றே
வரையறை
செய்யப்பட்டுவிடுகிறது
சிலரிடத்தே

சந்தி சிரித்து சொந்தம்
கொண்டாடி விஞ்சிப்போகும்
விசேஷ விழாக்களின்
மத்தியிலே – கெஞ்சிக்
கேட்கப்படாத வரதட்சணை
இல்லா வலி இல்லா
வண்ண கல்யாணங்கள்
கலகலப்பானவை தான்
எப்போதும்

காரிருள் அமிழும் கண
நேரத்தில் இடையிடையே
கண்சிமிட்டும்
நட்சத்திரங்களை போல்
அல்லாது – எப்போதும்
பிரகாசிக்கும் நிலவு

போல

சொந்தங்களின்
இச்சை புரிந்து
அவர்களை கொச்சைப்
படுத்தாமல் மிச்சமே
இல்லாமல் அன்பால்
மட்டுமே அவர்களை
ஆட்கொள்ளும் அத்தனை
உறவுகளும் மிக
அழகானவை

அவன் தோற்கப்போகும்
நொடி அறிந்தும்
அவனை தேற்றப்போகும்
நண்பர்களை விட
அவன் தோற்கும் கணமும்
வேடிக்கையாய் அமைத்து
கொடுக்கப் போகும்
உயிர் நண்பர்கள் அவனுக்கு
ஆசிர்வாதமானவர்களே

சொல் கொண்டு
மனம் கருக்கும்
மூடர் மத்தியில்
ஓர் கலாய்போடு
கருத்தாய் கதை
சொல்லி போகிறவர்
நம்மை மெல்ல
கவர்ந்துவிடுவார்கள்
விரைவாக..

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from ப்ரியா காசிநாதன்

பகப்ரியா காசிநாதன்16 Jul 2020

மௌனமும் சிரிப்பும்

நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக நீங்கள் சிறந்த நீங்களாக மாறுங்கள்..எவரையும் காயப்படுத்தாத அழகிய வாழ்க்கையை வாழுங்கள்.! உங்கள் சுயமரியாதையை கேள்விக் குறியாக்கி…

ஏனையவை3 min read
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

நேர்ச்சிந்தனைகள்

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே மெல்ல அடுக்கி…

அழகான வாழ்க்கை1 min read
பகப்ரியா காசிநாதன்12 Jul 2020

வாழ்வின் எதிர்பார்ப்பு

              நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்... பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்... நடக்கும் போது முட்களிடையே மிதி…

கவிதை ஜுலை - 20201 min read

More in வாழ்வியல்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x